பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
61
 

வாக்கி விடுகிறது! அதை ஒவ்வொரு நூற்றாண்டின் எழுத்தாளனும் எழுதி எழுதி, அறிவுத்தியாகம் செய்தவர்களை பழி தீர்த்துப் பலியாக்கிக் கொண்ட மாபாவிகளை வரலாற்று உணர்வோடு அவமானப்படுத்தினார்கள்! அது மனிதகுலம் எண்ணிப் பார்க்க வேண்டிய ஒரு ஆபத்து என்பதை அந்த பழிபுரியும் பாதகர்கள் உணர்ந்தால்தான் வரலாறு அவர்களை வணங்கும் வாழ்த்தும்!

கலீலியோ இவ்வளவு பெரிய துன்பங்களைத் தாங்கிக் கொண்டுதான், எதையும் தாங்கும் இதயம் எனக்கும் உண்டு என்ற அறிஞர்குல அறிவுரையைக் கேற்றவாறு, கி.பி. 1542-ஆம் ஆண்டு, சனவரி மாதம், தனது எழுபதுத் தெட்டாம் வயதில் தனது உயிரை இழந்தார். மரணம் அவருக்கு மாலை போட்டு வரவேற்று வாழ்த்தி அணைத்துக் கொண்டது.

கலீலியோ இறந்த போது இந்த நன்றி கெட்ட நரி உள்ளம் படைத்த உலகம், அவருக்கு யாரும் ஒரு நினைவுச் சின்னம் கூட எழுப்பவில்லை.

ஏனென்றால், கலீலியோ ஒரு சிறைக் கைதியாக மரணமடைந்தாராம் அவருக்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்பாததற்கு இது தான் காரணமாம்!

16. புரட்சி மேதைகள் மூவருள் கலீலியோவும் ஒருவர்

விஞ்ஞான அறிவானது அரிஸ்டாட்டில் போன்ற கடந்த கால அறிஞர்கள் வகுத்த விதிகளுக்குக் கட்டுப்பட்டதாகவே இருந்தது. ஆனால் தன்விருப்பப்படி சிந்தித்துப் பார்க்கும் மனப்பான்மை எவருக்கும் இருக்கவில்லை.

புதிய உண்மைகளைக் கண்டுபிடிக்கும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ச்சி அடைவதற்கு முன்பாக ஏற்கனவே இருந்த பாரம்பரிய பழமை விலங்குகளைத் தகர்த்தேறிய மாமேதைகளின் கூட்டு முயற்சி தேவைப்பட்டது.