பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
62
கலீலியோவின்
 


உலசின் தனித்தனி மூன்று நாடுகளைச் சேர்ந்த மூன்று மகா மேதைகள் மூலமாக விஞ்ஞானப் புரட்சி தோன்றியது போலந்து நாட்டைச்சேர்ந்த கோப்பர் நிக்கஸ் இத்தாலி நாட்டைச் சேர்ந்த கலீலியோ, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நியூட்டன் ஆகியோரே அந்த மும்மூர்த்திகள்.

இந்த மூன்று விஞ்ஞான மேதைகளும் அறிவாற்றலில் மனத்திறனில் உண்மையான சர்வதேசவாதிகளாகவே திகழ்ந்தார்கள்!

17. கோப்பர் நிக்கஸ் செய்த புரட்சி!

இரஷ்யா, ஜெர்மனி நாடுகள் சந்திக்கும் எல்லைகளில் உள்ள போலந்து நாட்டில் பிறந்தவர் மாமேதை கோப்பர் நிக்கஸ் அவர் பல ஆண்டுகள் இத்தாலியில் கல்வி கற்றவர். பழைய உலகில் இருந்து புதிய உலகத்துக்குச் சரித்திரம் திரும்பிய காலத்தில் அவர் இருந்தார்.

அவர் வாழ்ந்த காலத்திலும், அவருக்குப் பிறகு வெகு காலம் வரையிலும், உலகத்தின் மையம் பூமியே என்று அறிவாற்றல் படைத்தவர்கள் எல்லோருமே அழுத்தமாகக் கூறி வந்தார்கள்.

சூரியனும், மற்ற கோள்களும் பூமியைச்சுற்றி வருகின்றன என்று நம்பிக்கை. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருந்து வந்தது. அந்த எண்ணத்தையாரும் மறுத்துரைத்து உண்மை என்ன என்பதை எடுத்துக் கூறவில்லை.

தாலமி என்ற உலகை வலம்வந்த ஒரு மனிதன் கூறிய அந்தக் கொள்கையைத்தான் உலகக் கிறித்தவ மடமும், அரசுகளும் உண்மை என்று ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப நடந்து வந்தன.

கோப்பர் நிக்கசுக்கு முன்பு இருந்த சிந்தனையாளர்கள் பலர், பூமியே மையம் என்ற கோட்பாட்டை எதிர்த்தார்.