பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

63

கள். என்றாலும், கோப்பர் நிக்கஸ் தான் அந்த சித்தாந்தமே தவறானது; நான் அதை நிரூபித்துக் காட்டத் தயார் என்று உலகுக்கு சவால் விட்டார்.

பூமியே மையம் என்ற எண்ணத்தை எதிர்த்து அவர் புத்தகம் எழுதினார். அந்த நூல் பிற்காலத்தில் மிகச் சிறந்த ஒரு நூலாகவே மக்களால் போற்றப்பட்டது.

சூரிய மண்டலத்தில், சூரியன் மையமான இடத்தில் நிலைத்து நிற்கிறது. பூமியும் மற்ற கிரகங்களும் தான் சூரியனைச் சுற்றி வருகின்றன என்றார்.

'சூரியனைப் பூமி ஒரு முறை சுற்றி வர ஓராண்டு ஆகிறது' என்று விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கக் கோப்பர் நிக்கஸ் சோதனை செய்தார்.

பூமி தன்னைத் தானே ஒரு நாளைக்கு ஒருமுறை சுற்றிக் கொள்வது எப்படி என்பதையும் அவர் தனது நூலில் விளக்கி இருந்தார். அதே நேரத்தில் நட்சத்திரங்கள் நிலை என்ன என்பதையும் விவரித்திருந்தார்.

கோப்பர் நிக்கஸ் தனது சிந்தனைகளை நூலாக்கி வெளியிட்ட போது, படித்தவர்கள் இடையிலும், மக்கள் மத்தியிலும், கிறித்தல தேவாலய குருமார்கள் இடத்திலும் பெரும் பரப்பை உருவாக்கி விட்டது.

மதவாதிகள் எதிர்ப்பு ஏற்படாமல் இருக்க கோப்பர் நிக்கஸ் மிகச் சமர்த்தியமாக, தந்திரமாக அந்த சித்தாந்தங்களை விளக்கினார்!

இந்த உண்மையை, கோப்பர் நிக்கஸ் வாழ்ந்து மறைந்த நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பிறகுதான், அதாவது கி.பி. 1543-ஆம் ஆண்டின் போது, உலகமும், மதத்தலைவர்களும் மனம் திறந்து ஒப்புக் கொண்டார்கள்.

கோப்பர் நிக்கஸ் இந்த விஞ்ஞான உண்மையை தொலை நோக்கிக் குழாய் இல்லாமலே ஆராய்ச்சி செய்து வெற்றி பெற்றவர் ஆவார்.