பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

கலீலியோவின்


★ மேற்கண்ட விஞ்ஞானக் கண்டு பிடிப்புக்கள் எல்லாமே, மாமேதை கலீலியோ கண்டுபிடித்து விஞ்ஞான உலகுக்கு வழங்கிய விஞ்ஞான "தொலை நோக்கியான" தூரதரிசினி தான் காரணம் என்பதை எவராலும் மறுக்க முடியாததாகி விட்டது.

மேலே கூறப்பட்ட விஞ்ஞானிகளில் ஒருவராவது; "பார்வைக் குழாய் பெருக்கி, சுருக்கி இல்லாமல் எந்த நுண் பொருளையாவது பார்க்க முடியுமா? ஆராய்ச்சி தான் செய்ய முடியுமா?

நியூட்ரான், புரேட்டான், மின்னணுக்கள் போன்ற கண்டுபிடிப்புகளில் உள்ள அணுக்கள் மிகமிக நுட்பமான பூதக் கண்ணாடி மூலம் கூடக் காண முடியாத அணுக்களாகும். அந்த அணுக்களை அடிக்கடி பார்த்து ஆராய்ச்சி செய்திட கலீலியோ கண்டு பிடித்த பார்வைக் குழாய் கண்ணாடி வில்லைகளின் உருப் பெருக்கியும் உருசுருக்கியும் இல்லாமல் முடியுமா? வாசகர்கள் நன்கு சிந்திக்கவே மேற்கண்ட பட்டியலைத் திரட்டி வழங்கினோம்!

எனவே, கலீலியோவின் காலமான 1564-ஆம் ஆண்டு முதல் ஆல்பிரிட் ஈன்ஸ்டின் காலம் வரையிலும், தற்போதுவுள்ள விஞ்ஞான உலக வித்தகங்களின் வளர்ச்சிக் காலம் ஈறாக, கலீலியோவின் டெலஸ்கோப் என்ற தொலை நோக்கிப் பார்வைக்குழல், இல்லாமல் எவரும் எந்த ஆராய்ச்சியும் செய்திருக்க முடியாது என்ற நிலைதான் உண்மையான முடிவாகும்.

எனவே, மனிதனின் விஞ்ஞானச் சாதனைகள் மென்மேலும் அதிகரித்தாலும், அவனது தார்மீக உணர்ச்சி மட்டும் உயராதது ஒரு பெரிய பிரச்னையாக அன்று முதல் இன்றுவரை இருந்தே வருகிறது.

இந்த உண்மை உணர்வைத்தான், ஆல்பர்ட் ஐன்ஸ்டின், என்ற உலகம் போற்றும் விஞ்ஞானி, தான் மரண வாயிலில்