பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணு சக்தி

65

அணு நிறமாலைகள்

வீசி 75 கப்பல்களை இலக்காக வைத்துச் சோதனை நடத்தப்பெற்றது. இச் சோதனையின்போது 10,000 விஞ்ஞானக் கருவிகளை வைத்து அளவீடுகள் செய்தனர். இதைத் தொடர்ந்து கடலடியில் குண்டை வெடிப்பித்து, அதன் விளைவுகள் ஆராயப்பட்டன. 1948 மே மாதம் அணு சக்தியால் இயங்கும் மூன்று புதுப் படைக்கலங்கள் எனிவெடக் என்னுமிடத்தில் ஆராயப்பட்டன. 1949, 1950 ஆண்டுகளிலும் அமெரிக்கா சில சோதனைகளை நடத்தியது. 1951-ல் பிரெஞ்ச்மென்ஸ் பிளாட், எனிவெடக், யுக்கா பிளாட் ஆகிய இடங்களில் நடைபெற்ற சோதனைகளில் பெரு நகரங்களைத் தவிரப் போர்க்களத்திலும் இதைப் பயன்படுத்தும் முறைகள் ஆராயப்பட்டன. இதற்காக அணு குண்டைச் சிறிய அளவில் அமைக்க வழி கண்டிருப்பதாகத் தெரிகிறது. ஹைடிரஜன் - ஹீலியம் கருமாற்றத்தைத் தூண்ட, யுரேனியம் குண்டைப் பயன்படுத்தும் முறையும் அப்போது ஆராயப்பட்டதாகத் தெரிகிறது. இதே ஆண்டில் அணுவாற்றலினால் இயங்கும் நீர்மூழ்கியையும், விமானத்தையும் அமைக்க முயற்சிகள் தொடங்கின. 1953-ல் நடைபெற்ற சோதனைகளால் பீரங்கியிலிருந்து சுட ஏற்ற அணு குண்டு ஆராயப்பட்டதாகத் தெரிகிறது.

சோவியத் யூனியனிலும் அணு குண்டு ஆக்க முயற்சிக்கு வெற்றி கிடைத்தது: 1947-லேயே அணு குண்டைத் தாம் தயாரித்ததாக ரஷ்யத் தலைவர்கள் கூறினும், 1949-ல் தான் அணுவாற்றல் வெடி அதிர்ச்சிகளை

இங்கிலாந்திலுள்ள அணு அடுக்கு

வெளிநாட்டினர் தெளிவாக அறிய முடிந்தது. பிரிட்டனில் 1947-ல் முதல் அணு அடுக்கு ஹார்வெல் என்னுமிடத்தில் அமைக்கப்பட்டது. 1952-ல் ஆஸ்திரேலியப் பாலையில் முதலாவது பிரிட்டிஷ் அணு குண்டு வெடிக்கப்பட்டது. இது சில அமிசங்களில் அமெரிக்கக் குண்டைவிடச் சிறந்தது எனக் கருதப்பட்டது.

நூல்கள் :-H. D. Smyth, Atomic Energy (1945); S. Glasstone, Source books on Atomic Energy (1950); J.L. Crammer and R.E. Peierls, Atomic Energy (1950).

அணு நிறமாலைகள் (Atomic Spectra) : நிறமாலையியல் (த. க.) என்ற துறை தோன்றிய புதிதில் ஒரு தோற்றுவாயிலிருந்து வெளிவரும் ஒளியை நிறமாலை காட்டியால் (Spectroscope) பகுத்து, அதன் நிறமாலை வரைகளின் அலை நீளங்களை அளவிடுவதோடு விஞ்ஞானிகள் திருப்தியடைந்தனர். பல தனிமங்கள் (Elements) விரிவான நிறமாலைச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டபின், ஏராளமாகக் கண்டறியப்பட்ட நிறமாலை வரைகளைப் பாகுபாடு செய்து, இவற்றிற்கு அடிப்படையாக உள்ள பௌதிகத் தத்துவங்களை அறிதல் அவசியமாயிற்று. ஆவர்த்த அட்டவணையில் ஒத்த இடங்களில் உள்ள தனிமங்களின் நிறமாலைகள் ஒத்திருப்பது அறியப்பட்டது. எல்லாத் தனிமங்களிலும் எளிதான ஹைடிரஜனின் நிறமாலை விரிவாய் ஆராயப்பட்டுள்ளது. இதைப் பற்றிய சோதனை முடிபுகளும், கொள்கைகளும் மற்றத் தனிமங்களின் நிறமாலை ஆராய்ச்சிக்கு உதவி புரிந்துள்ளன.

அணு நிறமாலை
சக்தி மட்டப் பீடம்

ஹைடிரஜன் நிறமாலை பற்றிய அறிவுக்கு 1885-ல் பாமர் (Balmer) என்ற விஞ்ஞானி அடிகோலினார். அந்த நிறமாலையில் இவர் பதின்மூன்று வரைகளைக் கண்டு, அவற்றினிடையே உள்ள எளிய தொடர்பு ஒன்றையும் கண்டறிந்தார். இத்தொடர்பின்படி வரையின் அலை நீளம் λ எனில்

இதில் R என்பது ஒரு நிலையெண். λ என்பதன் மதிப்பு 3, 4, 5, 6...எனக் கொண்டால், ஹைடிரஜன் நிறமாலையின் பலவரைகளையும் பெறலாம். இச் சமன்பாட்டால் குறிக்கப்படும் வரைகள் அனைத்தும் பாமர் தொடர் (Balmer Series) என்ற தொகுதியைச்

சேர்ந்தவை.