பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணு வலுவெண்

72

அணைகள்

ரானை ஏற்றால், அவை அவ்வவற்றை யடுத்துள்ள சட வாயுவின் அமைப்பைப் பெறலாம். ஆகையால் ஒரு கார உலோகமும், ஓர் உப்பினியும் கூடும்போது கார உலோக அணுவில் மிகையாக உள்ள எலெக்ட்ரானை உப்பீனியானது ஏற்று, இரு அணுக்களும் சடவாயுக்களின் எலெக்ட்ரான் அமைப்புக்களைப் பெற்று நிலையான கூட்டைத் தரலாம். இது பின்வரும் உதாரணத்தால் விளங்கும்.

டிைாஜன்+புளோச்ன் → தைடிரஜன் புளோரைடு

எலெக்ட்ரானை இழந்தோ,ஏற்றோ கூடும் இவ்வணுக்கள் மின்னேற்றத்தைக் கொண்டு அயான்களாகின்றன. ஆகையால் இவ்வாறு தோன்றும் கூட்டுக்கள் அயான் கூட்டுக்களாக இருக்கின்றன. இவ்வகையில் உள்ள வலுவெண் மின்-வலுவெண் Electro- valency) எனப்படுகிறது.

இன்னொரு வகையிலும் அணுக்கள் கூடிக் கூட்டுக்களாகலாம். உதாரணமாக, பல அலோகத் தனிம அணுக்கள் இரண்டிரண்டாகக் கூடி. இரட்டையணு மூலக்கூறுகளாகக் காணப்படுகின்றன. இவற்றில் இரு அணுக்கள் ஒரு ஜதை எலெக்ட்ரான்களைப் பங்கிட்டுக் கொண்டு சடவாயுக்களின் எலெக்ட்ரான் அமைப்பைப் பெற்று நிலைப்படுகின்றன. இதற்கான உதாரணம் கீழே தரப்பட்டுள்ளது.

கார்பன் + 4 ஹைடிரஜன்→ மெதேன்

இதே வகயில் வேறு பல கூட்டுக்களின் மூலக்கூறுகளும் அமைந்திருக்கும். இது இணைவலுவெண் (Co- valency) என்றும், இவ்வாறு தோன்றும் கூட்டுக்கள் இணைவலுவெண் கூட்டுக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. ஒரு ஜதை எலெக்ட்ரான்கள் பங்கீட்டில் ஈடுபடும்போது, அணுக்களிடையே ஒற்றை இணைப்பும், இரு ஜதைகள் ஈடுபட்டால் இரட்டை இணைப்பும், மூன்று ஜதைகள் ஈடுபட்டால் மும்மடி இணைப்பும் தோன்றுகின்றன.

இவற்றைத் தவிர வேறொரு வகைக் கூட்டுக்களும் உண்டு. சில மூலக்கூறுகள் தோன்றும்போது எலெக்ட்ரான் பங்கீடு நிகழ்ந்த பின்னரும் ஒரு ஐதை எலெக்ட்ரான்கள் அதில் ஈடுபடாமல் தனித்து நிற்க நேரலாம். அத்தகைய பொருள் இரு எலெக்ட்ரான்களை ஏற்று நிலைபெறக் கூடிய நிலையிலுள்ள அணுக்களைக் கொண்ட வேறொரு தனிமத்துடன் கூடும்போது, இவ்வாறு தனித்து நிற்கும் ஜதையை அது பங்கிட்டுக் கொள்ளுகிறது. உதாரணமாக, ஒரு நைட்டிரஜன் அணுவிலுள்ள ஐந்து எலெக்ட்ரான்களில் மூன்று மட்டும், மூன்று ஹைடிரஜன் அணுக்களிலுள்ள எலெக்ட்ரான்களோடு பங்கீட்டில் ஈடுபட்டு, அம்மோனியா மூலக்கூற்றைத் தருகின்றன. இப்போது ஒரு ஜதை எலெக்ட்ரான்கள் தனித்து விடப்படுகின்றன. இந்த எலெக்ட்ரான்கள், வேறு தனிமங்களின் அணுக்களோடு பங்கீட்டில் ஈடுபட்டு, அம்மோனியம் கூட்டுக்களைத் தருகின்றன. வெர்னர் கண்டுபிடித்த ஒப்புக் கூட்டுக்களில் இத்தகைய விளைவே நிகழ்கிறது. ஆகையால் இவ்வகையில் தோன்றும் பொருள்கள் ஒப்பு- இணைவலுவெண் கூட்டுக்கள் (Co-ordinate Co-valent Com-pounds) எனப்படுகின்றன.

நைட்டிசஜன் + 8 ஹைடிரஜன் → அம்மோனியம்

பல ரசாயன விளைவுகளை விளக்க இக் கருத்துக்கள் பயனானபோதிலும் இவற்றில் பல குறைகளும் உள்ளன. இதனாலும், தற்கால பெளதிகக் கருத்துக்களில் விளைந்துள்ள மாற்றங்களாலும் இவை இப்போது திருத்தி அமைக்கப்பட்டுள்ளன.

நூல்கள்:- J.B. Speakman, Electronic Theory of Valency; W. G. Palmer, Valence; L. Pauling, General Chemistry. எஸ். வி. அ.

அணைகள் (Dams) : ஒர் ஆற்றின் போக்கைத் தடைசெய்து அதன் மட்டத்தையும் அளவையும் கட்டுப்படுத்தவும், நீரைச் சேமித்து வைத்துப் பயனாக்கவும் அதன் குறுக்கே போடப்படும் தடை அணை எனப்படும். அணையின் மேற்புறம் தோன்றும் ஏரியானது நீர்த்தேக்கம் (த. க.) என அழைக்கப்படும்.

ஒரு நீர்த்தேக்கத்தில் நீர்ப்பரப்பைத் தவிர நீரைத் தடை செய்யும் அணையும், மிகையான நீரை வெளிவிடும் கலிங்குகளும், பாசனத்திற்காகவோ, குடிநீர் வசதிக்காகவோ அமைக்கப்படும் வாய்க்கால்களில் செல்லும் நீரைக் கட்டுப்படுத்தும் மதகுகளும், மின்னாக்கப் பொறிக ளுக்கு நீரைக் கடத்திச் செல்லும் குழாய்களும், இந்த அமைப்புக்களுக்குத் தேவையா வேறு உறுப்புக்களும் இருக்கும். மண், கல், கான்கிரீட்டு, மரம், எஃகு ஆகியவற்றால் அணைகளை அமைக்கலாம். அணை கட்டப் பயன்படும் பொருள்களை ஒட்டியும், அதைக் கட்டும் முறையை ஒட்டியும், அதன் அமைப்பை ஒட்டியும் பலவகையாகப் பிரிக்கலாம்.

பழங்காலத்தில் நம் நாட்டில் கட்டப்பட்ட அணைகள் பெரும்பாலும் மண்ணினால் ஆனவை. எத்தகைய நிலத்திலும், எந்த அளவிலும் மண் அணைகளை அமைக்க முடிவதோடு அவற்றைக் கட்டச் செலவும் குறைவாக இருக்கும். இதற்கேற்ற வகையான மண் போதிய அளவு அருகில் கிடைக்கும்போதும், அடிதளப் பாறை வேறு வகை அணைகள் கட்ட ஏற்றதாக இல்லாத போதும் மண் அணையே ஏற்றதாகிறது. சிறந்த பண்புகளும், நீரைக் கசியவிடாத தன்மையும் கொண்ட மண் போதிய அளவு கிடைத்தால், அணை முழுவதையும் இதைக் கொண்டே கட்டி விடலாம். அவ்வாறில்லையேல் உயர்ந்த ரக மண்ணைக் கொண்டு ஒரு திரைபோல் எழுப்பி, அதன் இரு புறங்களிலும் மட்ட ரக மண்ணை வைத்து மூடிவிடலாம். பாறையின் மேலோ, நீரைக் கசியவிடாத களிமண்ணின் மேலோ அணையை எழுப்ப-