பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமீபா

109

அமீபா

நிலையான வடிவமும் அதற்கில்லை.அதன் வடிவமும் மெல்ல மெல்ல மாறிக் கொண்டேயிருக்கும். இவ்வளவு சிற்றுயிராயினும், பெரிய உயிர்களில் நிகழும் எல்லா உயிர் தொழில்களும் இதில் செவ்வனே நடைபெறுகின்றன. அமீபா, உயிர்ப்பொருளின் ஒரு நுண்ணிய துணுக்கு. இதன் மேற்பரப்பு தெளிவாகவும், உள்ளிருக்கும் பாகத்தைவிடச் சற்று உறுதியாகவும், மிக மெல்லிய சவ்வுபோலவும் இருக்கும். அது எக்டோபிளாசம் (Ectoplasm)எனப்படும். உள்ளிருப்பது சற்று நீர்த்தன்மை மிகுந்தும், மணல் மணலாகவும் தோன்றும். அது எண்டோப்லாசம் (Endoplasm) எனப்படும். மேற்பரப்பின் வழியாக அமீபா வாழும் நீரிலிருந்து பொருள்கள் உட்செல்லவும், உள்ளிருந்து பொருள்கள் வெளிவரவும் கூடும். ஆயினும் உயிர்பொருள் மட்டும் இந்த சவ்வின் வழியாக வெளிவராது. இந்த உயிர்ப் பொருள்களுக்குள்ளே செரிமானமானவையும் ஆகின்றவையுமான உணவுப்பொருள்கள், எண்ணெய் நுண்துளிகள், படிகங்கள் எனப் பல திறப்பட்ட வஸ்துக்கள் இருக்கும். எக்டோப்ளாசமும் எண்டோபிளாசமும் சேர்ந்து சைட்டோபிளாசம் (Cytoplosm) எனப்படும். சைட்டோபிளாசத்தின் நடுவே சிறப்பான, உறுதியான, ஏறக்குறைய உருண்டையான, அடர்த்தி மிக்க ஒரு வஸ்து இருக்கிறது. அதுதான் உட்கரு (Nucleus). உட்கருவின்றி அமீபா உண்ணவோ, வளரவோ, இனம் பெருக்கவோ முடியாது. உயிருடனிருக்கும் அமீபாவில் தெளிவான வட்டமான ஓரிடம் தெரியும். இதை கவனித்தால், இது சிறிதாக தோன்றி, மெல்லமெல்லப் பெரிதாகிப் பிறகு குமிழிபோல உடைந்துபோகும். திரும்பவும் அவ்வாறே தோன்றித் தொன்றி உடையும். இவ்வாறு தோன்றியும் உடைந்தும் வருவதைப் பார்த்தால் இருதயம் சுருங்கி விரிவதுபோலத் தோன்றும். இதற்குச் சுருங்கு குமிழி (Contractile vacuole) என்று பெயர். இவையன்றி அமீபாவின் எண்டோப்ளாசத்தில், அது உணவாக உட்கொண்ட பொருள்களும், அவற்றைச் சுற்றிச் சிறிய நீர் துளியும் சேர்ந்து பெரியவும் சிறியவும் பல வடிவமுள்ளவுமான உணவுக் குமிழிகளைக் காணலாம்.

அமீபாவுக்கு காலில்லை. ஆயினும் அது நகர்ந்து செல்லும். அதன் உடலின் எந்த இடத்திலிருந்தாவது எக்டோபிளாசம் விரல் போன்ற ஒருபாகமக முன்னுக்கு வரும். அப்படி நீட்டிக் கொண்டு வரும் பாகத்துக்குப் போலிக்கால் (Psuedopod) என்பது பெயர். இந்த போலிக்காலுக்குள்ளே எண்டோபிளாசம் நீரோடுவதுபோல ஓடுவதைக் காணலாம். போலிக்கால்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றுவதும், அவற்றினுள்ளே எண்டோபிளாசம் புகுவதுமாக அமீபா உருண்டுருண்டு முன் செல்லும். இதற்கு நிலையான முன், பின், மேல், கீழ்,வலம், இடம் என்னும் பாகங்களில்லை. இப்படிப் போலிக்கால் நீள்வதினாலும், அதில் உட்பொருள் பாய்வதினாலும், உடலின் வடிவம் மாறிக்கொண்டே முன் செல்லும். இந்த விதமான சலனத்திற்கு அமீபாயிடு இயக்கம் (Amoeboid movement) என்று பெயர். அப்படிப்பட்ட அமீபாயிடு இயக்கமுள்ள உயிரணுக்கள் நம்முடைய இரத்தத்தில் இருக்கும் வெள்ளணுக்களும், கட்டுத் திசுவிலுள்ள (Connective tissue) சில அணுக்களும் ஆகும்.

அமீபா தன் உணவை உட்கொள்ளுவதற்கும் போலிக்கால்களைப் பயன்படுத்துகிறது. உணவுப் பொருள்களைச் சுற்றிலும் போலிக்கால் பாய்ந்து, எல்லாப் பக்கங்களிலும் அதைச் சூழ்ந்து, அப்படியே உடலின் உள்ளே சேர்த்துக் கொள்ளுகிறது. உணவு அதன் தேகத்திற்குள் புகுகின்றது. அமீபாவின் உணவு நீரில் வாழும் டையாட்டம், பாக்டீரியா, வேறு புரோட்டோசோவா,

அமீபா
உணவுகொள் முறை

டயட்டம் என்னும் ஒரணுப் பாசியை அமீபா தன் போலிக்கால்களாற் படிப்படியாக உட்கொள்வது

தாவரத் துணுக்குகள், பிராணித் துணுக்குகள் முதலியனவாம். அமீபா ஒன்றையொன்று விழுங்கும் தன்னின முண்ணியென நினைக்கவும் இடமுண்டு. அமீபாவின் உண்விற் செரிமானமாகாத பகுதிகள்,அது முன்னே நகர்ந்து செல்லும்போது பின்னால் விடப்படுகின்றன.

அமீபா மூச்சு விடுவதற்கு வேண்டிய ஆக்சிஜனை உடம்பின் எந்தப் பாகத்தினுலும் உள்ளுக்குள் எடுத்துக் கொள்ளும். அவ்வாறே எந்தப் பாகத்தினாலும் கார்பன்-டை யாக்சைடும் மற்றக் கழிவுப்பொருள்களும் வெளி வரலாம். சுருங்கு குமிழி வழியாகவும் கழிவுப்பொருள்கள் வெளிப்படலாம். ஆயினும் அதன் முக்கிய தொழில், அமீபாவின் உடலில் சவ்வூடுபரவலால்(Osmosis) புகும் நீரை அளவுக்கு மிஞ்சாதபடி அப்புறப்படுத்திக்கொண்டே இருப்பதாம்.

அமீபா முழு வளர்ச்சியுற்றதும் இரண்டாகப் பிரிகிறது. முதலில் உட்கரு நீண்டு, நடுவிற் குறுகி இரண்டாகிறது. அதையொட்டி அதைச் சுற்றியிருக்கும் சைட்டோபிளாசமும் அவ்வாறே இடையில் குறுகி அவற்றோடு பிரிகிறது. ஓர் அமீபா இரண்டு குழந்தை அமீபாக்களாகிறது.

அமீபா இனப்பெருக்கம் (இரு பிளவு முறை

ஓர் அமீபா படிப்படியாக இரண்டு மகவுகளாப் பிரிந்து. கரும்புள்ளி உட்கரு, வெண்மையான வட்டம் கருங்கு குமிழி

அவை ஒவ்வொன்றும் முழு வளர்ச்சியுற்றுத் தாமும் அவ்வாறே பிரிகின்றன. இப்படி உணவு, வெப்பம், வானிலை முதலிய சூழ்நிலைகள் அனுகூலமாக இருக்கும் போது இந்த இரு பிளவு (Binary fission} முறையினாலே, அமீபா இனப்பெருக்கம் நடைபெறுகிறது. சூழ்நிலை ஏற்றதாக இல்லாதபோது, உதாரணமாக அது வாழும் நீர் வற்றிப் போகும்போது, அமீபா தன்னுடலைக் குறுக்கி உருண்டை வடிவாக்கிக் கொண்டு,அதன் மேலே ஒரு மொத்தமான தோல்போன்ற உறையை உண்டாக்கிக் கொள்ளுகிறது. அது அமீபாவின் கூடு (Cyst) எனப்படும். ஏற்ற சூழ்நிலை திரும்ப வரும்போது கூடு வெடித்து, அதனுள்ளிருந்து அமீபா வெளிவரும். சில சமயங்களில் அமீபா இரண்டாகப் பிளவுபடுவதற்குப் பதிலாக பலவாகப் பிளவு படுவதும் உண்டு. இங்குக் கவனிக்கத் தக்கது ஒரு சிறப்பான விஷயம். தாய் அமீபாவின் உடல் முழுவதும் இரண்டு குழந்தைகளாகப் பிரிந்து விடுகிறது. ஒவ்வொரு குழந்தையும் வளர்ந்து, அப்படியே பிரிகிறது. இந்த அமீபா போன்ற உயிரிகளிலே தாயின் உடல் முழுவதுமே பிரிந்து குழந்தைகலாகி விடுவதால், இறந்து