பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

113

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

ஊசியிலேக் காடுகள், பிரேயரிகளில் நெடும்புல் வகைகளும், மேலேச் சமவெளிகளில் குறும்புல் வகைகளும் காணப்படும். பாலே நிலங்களில் வளர்ச்சி குறைந்த சேஜ் பிரஷ் போன்ற புதர்களே காணப்படுகின்றன.

மக்கள் தொகை விவரம்

ஆண்டு மக்கள் தொகை (ஆயிரக் கணக்கில்)
வெள்ளையர் நீக்ரோக்கள் பிறர் மொத்தம்
1900 66,800 8,834 351 75,975
1910 81,732 89,828 413 91,975
1920 94,821 10,463 427 1,05,711
1930 1,10,287 11,891 597 1,22,775
1940 1,18,215 12,866 589 1,31,669

1950-ல் மதிப்பிட்டபோது மக்கள் தொகை சுமார் 1540 இலட்சம்; மக்கள் தொகைச் செறிவு சதுர மைலுக்கு 43 பேர். இந்நாட்டு மக்களில் 1880-ல் 28.6% ம், 1910-ல் 45.8% ம், 1920-ல் 51.4 %ம், 1940-ல் 56.5% ம் நகரங்களில் வசித்தனர். மொத்த மக்கள் தொகையில் 4/5 பங்கு கிழக்குப் பாகத்தில் வசிக்கின்றனர். சதுர மைலுக்கு 120 பேர் அடங்கியுள்ள வட கிழக்குப் பிரதேசம் உலகிலேயே மிக அடர்த்தியான மக்கள் தொகையுள்ள பெரும் பாகங்களில் ஒன்று. நியூயார்க் (மக் : 78,35,000) மிகப்பெரிய பட்டணம். சிக்காகோ (மக் : 36,06,000) பல தொழிற்சாலைகளடங்கிய ஒரு பெரிய ரெயில்வே நிலையம். பிலடெல்பியா (மக் : 20,64,794); லாஸ் அஞ்ஜலிஸ் (மக்: 19,57,692); டெட்ராய்ட் (மக் :18,38,517) முதலியவை பிற முக்கியமான நகரங்கள். தலைநகர் வாஷிங்டன்.

விவசாயம்: 20" வருடாந்தர சமமாரிக்கோடு இந்நாடுகளை இரண்டாகப் பிரிக்கிறது. விளைநிலங்களில் 9/10 பங்கு மழை மிகுந்த கிழக்குப் பகுதியில் அடங்கியிருக்கிறது. கிழக்குப்புறத்தில் தெற்கே கடற்கரையை அடுத்துக் கரும்பும் நெல்லும் விளையும் நிலங்களும், வடக்கே பருத்தி, சோளம், கோதுமை விளையும் நிலங்களும் முறையே காணப்படும். மேல் புறத்தில் மலைச்சரிவுகளில் மேய்ச்சல் நிலங்களும், பழ வகை பயிரிடப்படும் பசிபிக் கரையோரப் பிரதேசங்களும் அமைந்துள்ளன.

உலகின் மக்காச் சோளப் பயிரில் 3 4 பங்கு அமெரிக்காவிலேயே விளைகிறது. பெரிய ஏரிகளுக்குத் தெற்கிலும் தென்மேற்கிலும் உள்ள பிரதேசம் முழுவதிலும் இச் சோளம் விளைகிறது. விளைவில் 80-90% கோழி, பன்றி, பசுக்களின் உணவாகப் பயன்படுவதால் இப்பிரதேசத்தில் அவைகள் மிகுந்திருக்கின்றன மக்காச்சோளம் பயிராகும் பிரதேசத்திற்கும் பருத்தி பயிராகும் பிரதேசத்திற்கும் இடையே கோதுமை பயிராகிறது. பருத்தி விளைச்சல் அமெரிக்காவில் மிகுந்ததம்குக் காரணம், அங்குள்ள நீக்ரோக் கூலியாட்கள் மலிவாகக் கிடைப்பது தான். அ. ஐக்கிய நாடுகளில் 155 இலட்சம் பேல் பருத்தி (உலக உற்பத்தியில் 60%) உற்பத்தி செய்யப்படுகிறது.

1949-50-ல் அ. ஐ. நாடுகளின் உணவு தானியங்களின் நிலை

உணவு தானிய வகை 1949-ல் │ 1950-ல்
விளை நிலப்
பரப்பு
(மில்லியன்
ஏக்கர்கள்)
விளைவின்
மதிப்பு
(மில்லியன்
புஷல்கள்)
மக்காச் சோளம் 86.7 3131
கோதுமை 76.8 10.27
ஓட்ஸ் 40.6 1465
ரை 1.6 23
பார்லி 9.9 301
சோயா அவரை 9.9 287

அ. ஐக்கிய நாடுகளில் 610 இலட்சம் மாடுகள் இருக்கின்றன. ரோமத்திற்காக 500 இலட்சம் ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. இவையன்றி, 370 இலட்சம் பன்றிகளும், 40 கோடி கோழிகளும் உண்டு (1950).

மீன் பண்ணைகள் : அ. ஐ. நாடுகளில் உள்ள மீன் பண்ணைகள் உலகிலேயே மிக முக்கியமானவை. 1. அட்லான்டிக் மீன் பண்ணைகளில் காட், ஹாடக், ஹாலிபட் முதலிய வகை மீன்கள் கிடைக்கின்றன. 2. பெரிய ஏரி மீன் பண்ணைகளும் 3. சாமன் (Salmon) மீன் விசேடமாகக் கிடைக்கும் பசிபிக் மீன் பண்ணைகளும் குறிப்பிடத்தக்கவை.

தாதுப் பொருள்கள் : அ. ஐ. நாடுகளில் உலகிலேயே மிக அதிகமாக நிலக்கரி உற்பத்தியாகிறது. அப்பலேச்சிய நிலக்கரிக் கனிகளில் நாட்டு உற்பத்தியில் 75% கிடைக்கிறது. உலகப் பெட்ரோலிய உற்பத்தியில் 60% இந்நாடுகளில் கிடைக்கிறது. இந்நாடுகளில் உள்ள எண்ணெய்க் கிணறுகள் விரைவில் வற்றிப்போவதால் அமெரிக்கா இப்பொழுது எண்ணெய் இறக்குமதி செய்யவும் தொடங்கியுள்ளது. அமெரிக்க எண்ணெய்க் கிணறுகளின் சராசரி வயது 7 ஆண்டுகளே. சுபீரியர் ஏரியை யடுத்த பிரதேசங்களில், நாட்டில் எடுக்கும் இரும்பில் 80% கிடைக்கிறது. சிலி, சுவீடன் நாடுகளிலிருந்தும் இரும்புத் தாது இறக்குமதி யாகிறது. அலுமினியம், வெள்ளி, காரீயம், துத்தநாகம், செம்பு முதலானவையும் அ. ஐ. நாடுகளிலேயே மிக அதிகமாகக் கிடைக்கின்றன.

அ. ஐக்கிய நாடுகளில் 110 இலட்ச கிலோவாட் நீர் மின்சாரசக்தி உருவாக்கப்படுகிறது. இது உலக உற்பத்தியில் 1/3 பங்கு.

செய் தொழில்கள் : இரும்பு, எஃகு உற்பத்தி இங்கு மிகவும் முக்கியமானது. உலக எஃகு உற்பத்தியில் 40% இங்கு உண்டாகிறது; அடுத்தபடியாக, நெசவுத் தொழில் மிக முக்கியமாக நடைபெறுகிறது.

போக்குவரத்து : 2,43,000 மைல் நீளமுள்ள ரெயில்வேக்கள் (உலக ரெயில்வேக்களின் நீளத்தில் 45%) அ. ஐ. நாடுகளில் இருக்கின்றன. இவற்றுள் கண்டங்கடக்கும் ரெயில்வேக்கள் சிறப்பானவை. ஏராளமான கான்கிரீட் சாலைகள் இருக்கின்றன. பெரிய ஏரிகளும், மிசிசிப்பி-மிசௌரியும் உள்நாட்டுப் போக்குவரத்திற்கு

மிகவும் பயன்படுகின்றன. எல்லா முக்கியப் பட்டணங்களுக்கும், கானடாவிற்கும், தென் அமெரிக்காவிற்கும், அட்லான்டிக் பசிபிக் சமுத்திரங்களைக் கடப்பதற்கும்

15