பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அலகியல்

211

அலங்கார சாஸ்திரம்

மாகக் கொள்ளலாம் என்ற கருத்தை வெளியிட்டார். 1893ஆம் ஆண்டில் மிக்கல்சன் என்னும் அறிஞர் கடமியம் என்னும் தனிமம் வெளியிடும் சிவப்பொளியின் அலை நீளத்தைக் கொண்டு மீட்டரின் நீளத்தை அளவிட்டார். அதிலிருந்து இதையே நீளத்திட்டமாகக் கொள்ளலாம் என்று பலர் கருதி வந்துள்ளனர்.

ஆனால் தனிமங்களில் பெரும்பான்மையானவை பல ஐசோடோப்புகளின் (த. க.) கலவைகள். ஆகையால் இவை சுத்தமான ஒரு-நிற ஒளியைத் தருவதில்லை. ஒளியின் அலை நீளத்தைத் திட்டமாகக்கொள்வதில் உள்ள சங்கடம் இதுதான். ஆனால் அண்மையில் நடைபெற்ற அணுக்கரு ஆராய்ச்சிகளின் விளைவாய், இப்போது பல தனிமங்களின் ஐசோடோப்புகளைத் தனியே பிரிக்க முடிகிறது. 198 அணு நிறையுள்ள பாதரச ஐசோ டோப்பு ஒன்றை இவ்வகையில் தங்கத்திலிருந்து தயாரிக்கிறார்கள். இது மிகத் தூய ஒரு-நிற ஒளியைத் தரவல்லது. அமெரிக்காவிலுள்ள தேசியத் திட்ட பீரோ (National Bureau of Standards) இங்கிலாந்திலும், இந்தியாவிலுமுள்ள தேசிய பௌதிக ஆராய்ச்சி நிலையங்களுக்கு இந்த ஐசோடோப்பைக் கொண்ட பாதரச விளக்குகளை அன்பளிப்பாக அளித்துள்ளது. இவற்றைக்கொண்டு ஆராய்ச்சி நடத்தி இயற்கையான நீளத் திட்டம் ஒன்றை வகுக்க வழி காணலாம்.

நிறைத்திட்டம்: ஒரு வஸ்துவின் நிறை என்பது அதிலுள்ள பொருளின் அளவு. இதை நாம் நேரடியாக அளவிட முடிவதில்லை. ஆகையால் இதை எடையுடன் ஒப்பிட்டே அளவிடவேண்டும். எடை என்பது புவிக் கவர்ச்சியினால் பொருளின்மேல் தொழிற்படும் விசை. இது பொருளின் நிறை, புவிக் கவர்ச்சியினால் விளையும் வேக வளர்ச்சி ஆகிய இரண்டின் பெருக்குத் தொகை.

பிரிட்டிஷ் நிறையலகு ராத்தல் என்பது. இது 1.15 அங்குல விட்டமும், 1.35 அங்குல உயரமுமுள்ள பிளாட்டின உருளையொன்றின் நிறை. மெட்ரிக் முறையில் நிறையலகு சர்வதேச கிலோகிராம் என்பது. இது பிளாடின - இரிடியத்தால் 4 செ. மீ. நீளமும், சுமார் 4 செ. மீ. உயரமுமுள்ளதாகச் செய்யப்பட்டதோர் உருளையின் நிறை. 4° வெப்ப நிலையிலுள்ள 1 கன டெசி மீட்டர் நீரின் நிறை என இது ஆதியில் வரையறுக்கப்பட்டது. மெட்ரிக் முறையின் பருமன் அலகும், இதை யொட்டி 4° வெப்ப நிலையிலுள்ள 1 கிலோகிராம் நீரின் பருமன் என வரையறுக்கப்பட்டது. ஆனால் பின்னர்ச் செய்யப்பட்ட திருத்தமான அளவுகளால் ஒரு கிலோ கிராம் நீரின் பருமன் 1.000028 கன டெசிமீட்டர் என அறியப்பட்டது.

ராத்தலுக்கும் கிலோகிராமுக்கும் உள்ள தொடர்பு, 1 கிலோகிராம்=2.2046223 ராத்தல் எனச் சட்டப்படி வரையறுக்கப்பட்டுள்ளது. 1 ராத்தல் =0.45359237 கிலோகிராம்.

நிறைத் திட்டத்திற்கேற்ற பொருள்கள் : கதிரியக்கம் (த. க.) என்ற விளைவினால் பொருளின் நிறை காலப்போக்கில் மாறுகிறது. இந்த மாறுதல் மிகக் குறைவாயுள்ள பிளாட்டினத்தையும், பிளாட்டின -இரிடியத்தையும் நிறைத் திட்டத்திற்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஆனால் இவை மிக விலையுயர்ந்த பொருள்களாகையால் இவற்றைச் சாதாரணமாகப் பயன்படுத்த முடியாது. மேலும் இவை கனமான பொருள்கள். இதனால் இவை சிறிது தேய்ந்தாலும் நிறை அதிகமாக மாறிவிடும். பித்தளை எடைகளுக்கு அரக்குச் சாயம் பூசியும், தங்கமுலாம் பூசியும் சாதாரணமாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் பித்தளை எடைகளின் நிறை காலப்போக்கில் மாறுகிறது. அரக்குச் சாயம் பூசிய எடைகள் ஈரநிலை மாறுதல்களால் பாதிக்கப்படுகின்றன.

நிறையை ஒப்பிடல் : திருத்தமான தராசுகள் கொண்டு எடையை ஒப்பிடுவதாலேயே நிறையை ஒப்பிடவேண்டும்.

தற்காலத்தில் வழங்கும் திருத்தமான தராசுகள் மிகச் சிக்கலான அமைப்புள்ளவை. தராசு உள்ள அறையின் வெப்ப நிலை மாறிவிடாமல் கட்டுப்படுத்துவது அவசியம். தராசிலிருந்து எட்ட நின்றுகொண்டோ , அல்லது அந்த அறைக்கு வெளியிலிருந்துகொண்டோதான் அளவீடுகளைச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நிறுப்பவரின் கவர்ச்சியினால், அளவிடும் நிறை சிறிது பாதிக்கப்படும்.

நிறைகளைக் காற்றில் ஒப்பிடும்போது காற்றின் மிதப்பு விளைவிற்கேற்ற திருத்தத்தைச் செய்துகொள்ள வேண்டும். பொருளின் நிறை m என்றும், அதன் அடர்த்தி P என்றும், இப்பொருளை ஈடு செய்யும் எடைகளின் உண்மையான நிறை m என்றும், எடை களின் அடர்த்தி P என்றும், காற்றில் அடர்த்தி ⚬ என்றும் கொண்டால்

என்றாகும்.

இத்திருத்தத்தைத் தவிர்ப்பதற்காகத் தற்காலத்தில் நிறைகளை வெற்றிடத்தில் ஒப்பிடுகிறார்கள்.

இந்திய அலகியல் : புது டெல்லியில் தேசிய பௌதிக ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்டபின் இந்திய நாட்டிலும் அடிப்படையான அலகியல் ஆராய்ச்சி தொடங்கியது. இந்த நிலையத்தின் அலகியற் பிரிவு இதற்குத் தேவையான சிறந்த கருவிகளை அமைத்து வருகிறது. இந்தியாவில் பயனாகும் அளவுகளுக்கும் நிறைகளுக்கும் உரிய திட்டங்களைப் பாதுகாத்து வைப்பதும், அவற்றைத் திருத்தியமைப்பதும், சிறந்த அலகியல் முறைகளை வகுப்பதும் இப்பிரிவின் வேலையாகும். லா. சி. வெ.

நூல்கள் : R. T. Glazebrook, Dictionary of Applied Physics; K. J. Hume, Engineering Metrology.

அலங்காரக் கடை (Beauty Shop): மாதர்களது வெளித் தோற்றத்தை அழகுபடச் செய்யும் நிலையங்கள் மேனாடுகளில் இப்பெயரால் வழங்குகின்றன. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மட்டும் இத்தகைய கடைகள் 60,000 உள்ளன என மதிப்பிடப்பட்டுள்ளது. தலை மயிரையும், தோலையும், கைகளையும், பற்களையும் அனைவரும் அழகு எனக் கருதும் வகையில் திருத்தி அமைப்பது இக்கடையில் நடைபெறும் வேலையாகும். அலங்காரப் பொருள்களைப் பயன்படுத்தும் கலை மிகத் தொன்மையானது. ஆனால் இதைக் கடைகளில் செய்யும் வழக்கம் இந்த நூற்றாண்டில் தோன்றியது.

அலங்கார சாஸ்திரம் : அலங்காரம் என்ற சொல்லிற்கு நன்றாய்ச் செய்வது, அழகுபடுத்துவது என்று பொருள் ; உடலையும் உருவத்தையும் அழகுபடுத்துவது போலவே, சொல்லை அழகுபடுத்துவதற்கும் அலங்காரம், அணி என்ற பெயர்கள் ஏற்படுகின்றன. சமஸ்கிருத இலக்கியத்தில் முதனூலாயிருக்கும் ரிக் வேதம் முழுவதிலும் சொல்லை அழகுபடுத்தும் முறை