பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவரை

234

அவளிவணல்லூர்

செய்வார்கள். ஏக்கர் ஒன்றுக்கு 400 ராத்தல் வரையில் மொச்சைக்கொட்டை உண்டாகும். தோட்ட அவரை வகைகளில் ஒரு கொடியிலிருந்து 60-100 ராத்தல் காயைப் பெறலாம்.

மொச்சைப் பயிரில் விழும் பூச்சிகளில் அதிசூரா அட் கின்சனை (Adisura atkinsoni) என்னும் விட்டிலின்

அவரை-பல வகைகள்
உதவி : பருப்பு ஆராய்ச்சி நிபுணர்

புழு, காயையும் விதையையும் தின்றுவிடும். நாற்றமடிக்கும் பச்சை அவரைப்பூச்சி, இளங்கொடி, காய் இவைகளின் சாற்றை உறிஞ்சும். காமோக்சின் (Gam' moxene) என்னும் மருந்தைத் தூவினால் இப்பூச்சிகள் விழாமல் ஓரளவுக்குத் தடுக்கலாம். விதையில் பூச்சி உண்டாகாமல் இருப்பதற்கு அவ்வப்போது உலர்த்திச் சொத்தை விதைகளைப் புடைத்து எடுத்துவிட வேண்டும். விதைப்பதற்காக வைத்திருக்கும் மொச்சைக் கொட்டையைச் செம்மண் பூசி வைக்கலாம். மொச்சையும் அவரையும் நல்ல உணவுப் பொருள்கள். அவரையின் பசிய விதையையும், காய்ந்த கொட்டையையும், காய் முழுவதையும் கறி சமைக்கலாம். மொச்சையைக் கொட்டையாகவும் பருப்பாகவும் பயன்படுத்துகின்றனர்.

சீனதேசத்தில் இதிலிருந்து ஒருவித சேமியா செய்கிறார்கள். மொச்சைப்பொட்டு கால்நடைகளுக்கு நல்ல தீனி. அவரையிலையும் மஞ்சளும் அரிசிமாவும் கலந்து தோலில் உண்டாகும் கரப்பானுக்குப் பற்றுப் போடுவார்கள். காதுவலிக்கு இலையின் சாற்றையும் பிழிவதுண்டாம். காயின் சாற்றைக் காதுவலிக்கும் தொண்டைவலிக்கும் அஸ்ஸாம் நாட்டில் போடுகிறார்கள்.

குடும்பம்: லெகுமினோசீ (Leguminoseae); இனம் : டாலிகாஸ் லாப்லாப் (Dolichos lablab). டி. கே. பா.

அவரோஸ் (1126-1198) அரேபியத் தத்துவ சாஸ்திரி, கார்டோவா என்னுமிடத்தில் பிறந்தவர் கணிதம், மருத்துவம், தத்துவம் முதலிய பல கலைகளைக் கற்றார். கலீப் யூசுப் மன்னனுடைய நன்மதிப்பைப் பெற்றிருந்தார். இவர் வட ஆப்பிரிக்கா, ஸ்பெயின் முதலிய இடங்களிற் சுற்றுப்பிரயாணம் செய்தார். செவிலில் (1169-1170) வரையிலும், கார்டோவாவில் 1172.லும் காதியாக இருந்தவர். 1194-95-ல் இவர்மீது சினம் கொண்ட கலீப் யூசுப் இவரது நூல்களை யெல்லாம் எரித்துவிட்டார். ஆயினும் 1198-ல் அம்மன்னனால் மன்னிக்கப்பட்டு, மராகேஷ் என்னுமிடத்திற்குத் திரும்பிவந்த அவரோஸ் அதே ஆண்டில் இறந்தார். அவரோளின் நூல்களில் பெரும்பாலானவை கை யெழுத்துப் பிரதிகளாகவே யிருக்கின்றன. இவர் நூல்களிற் சிறந்தவை அரிஸ்டாட்டிலின் நூல்களுக்கு இவர் இயற்றிய உரைகளே. 13ஆம் நூற்றாண்டில் வளர்ந்த ஐரோப்பியத் தத்துவ ஞானத்துக்கு இவை நன்கு உதவின. 'மருத்துவக் கலைக்களஞ்சியம்' ஒன்று இவர் இயற்றினார்.

அவளிவணல்லூர் தஞ்சாவூர் ஜில்லா சாலிய மங்கலம் புகைவண்டி நிலையத்திற்கு அருகிலுள்ளது. காசிப முனிவர் பூசித்தது. அப்பர், சம்பந்தர் தேவாரங்கள் உண்டு. சுவாமி சாட்சி நாயகேசுரர். அம்மன் சௌந்தர நாயகி. தீர்த்தம் சந்திரபுஷ்கரிணி.