பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிதிறன்‌

262

அறிதிறன்‌

பயன்படுத்தப்பெறும் சோதனைகள் “செயல் சோதனைகள்” (Performance tests) என்று பெயர் பெறும். இத்தகைய சோதனைகளின் வாயிலாகச் சோதிக்கப் பெறுபவர் எதையும் வாய் மொழியாகச் சொல்ல வேண்டியதில்லை, செய்து காட்டினால் போதும். உதாரணமாகப் பல வடிவக் கட்டைகளை அவற்றிற்கேற்ற துவாரங்களில் இடுதல், ஒரு படத்தின் துண்டுகளைச் சேர்த்து முழுப்படமாக்கல், படப்பிதிர்களுக்கு விளக்கம் காணுதல், மனிதனுடைய உருவத்தை எழுதுதல் போன்ற செயல்களைச் செய்யும் சோதனைகள் நடைபெறும்.

இதுகாறும் கூறிய சோதனைகள் அனைத்தும் பொது அறிதிறன் சோதனைகளாகும். இவை தவிரச் சிறப்பு இயற்கைத் திறமைச் சோதனைகள் என வேறு வகைச் சோதனைகளும் உள : உதாரணமாக இசை, பேச்சு, கணிதம் போன்ற சிறப்பு இயற்கைத் திறமைகளைக் காணக்கூடிய சோதனைகள். இந்த இருவகைச் சோதனைகளும் பிறவித் திறத்தையே அளந்து கூறக் கூடியவை. கல்வி வாயிலாகப் பெறும் அறிவை அளந்து கூறக்கூடிய சோதனைகளையும் உளவியலார் வகுத்துளர். இவை அறிவுச் சாதனைச் சோதனைகள் (Achievement tests) எனப் பெயர்பெறும்.

அறிதிறன் சோதனைகள் எழுத்து வாசனையுள்ளவர்க்குரியவை யாயினுஞ்சரி, எழுத்து வாசனையில்லாதவர்க்குரியவை யாயினுஞ்சரி, அவற்றிற்குப் பல கிளைச் சோதனைகள் (Sub-tests) உண்டு.

எழுத்து வாசனையுடையவர் சோதனைகளுள் சில:
1. கீழ்க்கண்ட சொற்களை வாக்கியமாக அமைத்து, அதன் பொருள் சரியா தவறா என்று கூறுக:
முட்டைகள் வாழ்கின்றன கிளிகள் உண்டு. சரி-தவறு.
2. கீழ்க்கண்ட இணைச் சொற்கள் ஒரே பொருளுடையனவா அல்லது வேறு பொருளுடையனவா?

வணக்கம்சலாம் ஒன்றுவேறு
திருட்டுபுரட்டுஒன்றுவேறு
பினே சிறப்பாக ஆற்றிய உதவி, மன வளர்ச்சி வயது (Mental age) என்று ஒன்றுளதாகக் காட்டியதாகும். எட்டு வயது குழந்தை, பத்து வயது குழந்தைக்குரிய சோதனையில் வெற்றிபெறுமானால் மனவளர்ச்சி வயது பத்தாகும். பல குழந்தைகளைச் சோதித்து, ஒவ்வொரு வயதுக்கும் தக்க சோதனைகள் வகுக்கப்பட்டுள்ளன. இக்காலத்தில் அறிதிறனை அறிதிறன் ஈவு (Intelligence quotient) என்பதன் வாயிலாக மதிப்பிடுகிறோம். அறிதிறன் ஈவு என்பது அறிதிறன் வயதை ஆண்டு வயதால் வகுத்து வரும் பின்னமேயாம். அறிதிறன் ஈவு பின்னமாக இருப்பதைவிட முழு எண்ணாக இருந்தால் சொல்வதற்கு எளிதாக இருக்குமாதலால் அந்தப் பின்னத்தை நூறால் பெருக்குவார்கள். அந்தப் பெருக்குத் தொகையே அறிதிறன் ஈவு (அ . ஈ.) ஆகும். இந்தப் பயன்படு கருத்தைக் கூறியவர் ஸ்டெர்ன் என்னும் ஜெர்மன் உளவியலார் ஆவர். ஆகவே எட்டு வயது குழந்தை, பத்து வயது குழந்தையின் அறிதிறன் சோதனைகளில் வெற்றி பெறுமாயின் அதன் அ. ஈ. X 100 அல்லது 125 ஆகும். சராசரி அறிதிறன் ஈவை 100 என்னும் எண்ணால் குறிப்பிடுவார்கள். அதனால் 100க்கு மேற்பட்டதானால் அறிதிறன் கூடியதாகவும், 100க்குக் கீழ்ப்பட்டதானால் அறிதிறன் குறைந்ததாகவும் கொள்ளப்பெறும்.

அறிதிறன் ஈவை வைத்து மக்களைக் கீழ்க்கண்டவாறு பிரிப்பர் :

அ.ஈ.
மேதை (Genius) 140க்கு மேல்
கூரறிவுடையோன் (Superior) 120 140
சமநிலை (Normal) 90 110
சமநிலைக்குக் கீழ் (Low normal) 80 90
குறை அறிவுடையோன் (Moron) 50 70
மிகக் குறைந்த அறிவுடையோன் (Imbecile) 25 50
பிறவி முட்டாள் (Idiot) 0 25

ஒருவனுடைய அறிதிறன் பெரும்பாலும் மாறுவதில்லை. ஒரு குழந்தையை இரண்டாவது வயதில் சோதிப்பர். அதன் அ.ஈ.100. அது ஆண்டு வயதுப் படியே அறிதிறன் வயதுள்ள சராசரிக் குழந்தை. அதனால் எப்போது சோதித்தாலும் அதன் அ. ஈ. 100 ஆகவே இருந்துவரும்.

ஒருவர் வாழ்வில் வெற்றி பெறுவது அறிதிறன் ஈவை மட்டும் பொறுத்ததன்று. அவருடைய சிறப்பு ஆற்றல்களையும் (Special abilities) பொறுத்ததாகும். அறிதிறன் ஈவு சிறப்பு ஆற்றல் இரண்டையும் பெருக்கிய தொகையை வைத்தே அவருடைய வெற்றியை மதிப்பிடவேண்டும். அறிதிறன் ஈவு மாறாதிருக்கும். ஆனால் சிறப்பு ஆற்றல் நாளுக்குநாள் மிகுதியாகக் கூடும். அதனால் நாளடைவில் அவர் அதிக வெற்றி அடையலாம்.

எவரும் தம்முடைய அறிதிறன் ஈவைப் பெரிதாகும்படி செய்ய இயலாதாயினும், அது குறைந்துவிடாதவாறு கவனித்துக் கொள்ளுதல் இன்றியமையாததாகும். அதற்கு இடைவிடாப்பயிற்சியும், கண்ணுங் கருத்துமாயிருத்தலும், விடாமுயற்சியும் தேவையாகும்.

அறிதிறன் ஈவு மிகுவதில்லை என்பதை முதன்முதல் கண்டவர் அமெரிக்க உளவியலாரான டெர்மன் என்பவராவர். மிகும்படி செய்ய முடியுமா என்று அமெரிக்காவிலுள்ள அயோவாப் பல்கலைக் கழகத்து அறிஞர்கள் பல சோதனைகள் செய்தனர். ஆனால் சிலர்க்குச் சிறிதளவு மிகுந்ததாகத் தோன்றினும், மிகும்படி செய்யமுடியும் என்று உறுதியாகக் கூறக்கூடிய நிலைமை இன்னும் உண்டாகவில்லை.

அறிதிறன் சோதனையால் கண்ட இரண்டாவது உண்மை, கல்வியறிவுகொண்டு தொழில் செய்பவர்களின் குழந்தைகளுடைய சராசரி அ.ஈ. பெரியதாக இருப்பதாகும். அக்குழந்தைகட்கு அடுத்த படியிலுள்ளவர்கள் அலுவலகத் தலைவர்கள், கணக்கர், வியாபாரிகள், திறமைபெற்ற தொழிலாளர் ஆகியோரின் குழந்தைகள். திறமை பெறாத தொழிலாளர் மக்கள்தாம் அறிதிறன் மிகக் குறைந்தவர்கள்.

அறிதிறன் சோதனையாளர்கள் கண்ட மூன்றாவது உண்மை, மக்களிற் பெரும்பாலோர் சராசரி அறிதிறன் உடையவர் என்பதும், அறிதிறன் மிகுந்தோர் எத்தனை பேர் உளரோ அத்தனை பேருக்குச் சமமான எண்ணிக்கையுடைய குறைந்தோர் உளர் என்பதுமாகும்.

இந்தச் சோதனைகள் வாயிலாக அளந்து காணும் மன ஆற்றல்தான் அதாவது அறிதிறன்தான் யாது? அறிதிறன் என்பது திறமையாக எண்ணமிடுதலைப் பொறுத்தது; திறமையாக எண்ணமிடுதல் கற்றுக் கொள்ளவும், நினைவில் வைத்துக் கொள்ளவும், சூழ்நிலைக்குத் தக்கவாறு நடந்துகொள்ளவுமுள்ள ஆற்றலைப் பொறுத்ததாகும். அறிதிறன் முக்கியமல்லாதவற்றை நீக்கிவிட்டு, இன்றியமையாதவற்றையே கருதும் ஆற்றலையும், அருமையான தொடர்புகளைக் காணும் ஆற்றலையும், தாராள மனப்பான்மையுடன் கருதும் ஆற்றலையும்கூடப் பொறுத்ததாகும். அனைத்-