பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறுவடை எந்திரங்கள்

270

அறுவடை எந்திரங்கள்

கப்பட்ட இவற்றில் போரடிக்கும் உருளையானது பல்லிணையால் இணைக்கப்பட்டுத் திறமையாக வேலை செய்தது. தற்கால எந்திரங்கள் 5-6 அடி. அகல

போரடி எந்திரம்

முள்ளவை. இவை வார்ப்பட்டையால் டிராக்டர் கப்பியுடன் இணைக்கப்பட்டு, 15-20 குதிரைத் திறன் ஆற்றலுடன் இயங்கும்.

போரடி எந்திரத்தின் முக்கிய உறுப்புக்கள்: கொட்டும்புனல் (Feed hopper), அடி அறை (Beater chamberi) வைக்கோல் ஆட்டி (Straw shaker). ஊதி, வகைப்படுத்தும் சல்லடைகள், மூட்டை கட்டும் உறுப்பு ஆகியவை. புனலின் வழியே பயிரைக்

கொட்டினால் அது அடி அறையை அடைகிறது. அங்கு நிமிடத்திற்கு 1000 செலுத்தித் தானியத்தைப் பிரிக்கிறது. வைக்கோலானது ஆட்டியை அடைந்து, ஒன்று சேர்ந்து, எந்திரத்தின் பின்புறத்தை அடைகிறது. தானியமும் பதரும் அறையிலிருந்து வெளிவரும்போது ஊதியானது காற்றை ஊதிப் பதரைப் பிரிக்கிறது. தானியமும், கனமான அசுத்தங்களும் வகைப்படுத்தும் சல்லடைகளின் வழியே சென்று, துப்புரவாகிச் சுத்தமான தானியம் வெளியே வந்து, ஓர் உயர்த்தியின் பட்டையை அடைந்து மூட்டைக்குள் கொட்டப்படுகிறது. இந்த எந்திரத்தின் வேலைத்திறன் இதன் அகலத்தைப் பொறுத்தது. இரண்டடி அகலமுள்ள எந்திரம் சுமார் 16-20 நிமிடங்களில் ஒரு மூட்டைத் தானியத்தை அளிக்கும்.

கூட்டு எந்திரம் (Combine) : 1900ஆம் ஆண்டு வாக்கில் மோட்டார் எஞ்சின் விவசாயத்தில் வழக்கத்திற்கு வந்தது. அதிலிருந்து விவசாய எந்திரங்கள் விசேஷ அபிவிருத்திகளை அடைந்தன. புல்வெட்டி, பயிர்வெட்டி, பயிர்கட்டி, போரடி எந்திரம் ஆகிய எந்திரங்கள் அனைத்தின் தத்துவங்களையும் கொண்ட கூட்டு எந்திரம் தோன்றியது. அமெரிக்காவில் இது முதல் உலகப்போருக்குப் பின்னும், பிரிட்டனில் 1928ஆம் ஆண்டிலும் வழக்கத்திற்கு வந்தது. ரஷ்யா முதலிய வேறு பல நாடுகளிலும் இலட்சக்கணக்கான கூட்டு எந்திரங்கள் தற்போது வழக்கத்தில் உள்ளன. இந்த எந்திரத்தை அறுவடைக்குத் தயாரான வயலின்மேல் ஓட்டிச் சென்றால், இது பயிரை அறுத்துப் போரடித்துத் தூற்றித் துப்புரவு செய்து தானியத்தை மூட்டை கட்டிவிடுகிறது.

கூட்டு எந்திரங்கள் இருவகைப்படும். அவற்றில் ஒரு வகை எந்திரம் தானாக இயங்குகிறது. இதன் வேலைத்திறன் மண்ணின் தன்மையையும் பயிரின் தன்மையையும் பொறுத்து வேறுபடும். எந்திரத்தின் அகலத்தில் ஓர் அடிக்கு எட்டு மணி நேரம் வேலை செய்து, 1222 ஏக்கர் நிலம் அறுவடை செய்யலாம். போரடிக்கப்பட்ட வைக்கோல் வயலில் விடப்படும்.

வைக்கோல் துடைப்பங்களும் சேகரிகளும் (Hay sweeps and rakes) : புல் வெட்டியானது புல்லை வெட்டி வயலில் கிடத்துகிறது. கூட்டு எந்திரம் போரடித்த வைக்கோலை வயலில் விட்டுவிடுகிறது. இந்த வைக்கோலை ஒன்றாகச் சேகரிக்கத் துடைப்பங்களும் சேகரிகளும் பயனாகின்றன.

வைக்கோல் துடைப்பம் டிராக்டரின் முன்னால் பொருத்தப்படும் சீப்புப்போன்ற உறுப்பு. டிராக்டர் முன்னேறும்போது வைக்கோலும் புல்லும் முன்னால் சேரும். இதைத் தூக்கி ஒரு மூலையில் குவித்துவிடலாம். சேகரி என்ற அமைப்பு, குதிரையுடனோ, டிராக்டருடனோ இணைக்கப்படுகிறது. இது புல்லையும் வைக்கோலையும் ஒன்றாகச் சேகரித்து, வயலில் அங்கங்கே சீராகக் குவித்து வைக்கும். இதில் ஒருவகை எந்திரம் வைக்கோலைச் சீரான வரிசையாகக் குவித்து வைக்கும்.

புல் கட்டி(Hay baler) : இது இருவகைப்படும். முதலாவதை வைக்கோல் குவியலின் அருகே நிலையாக