பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஜ்மீர்

285

அஜந்தா

களில் நன்றாக வளர்கின்றன. நெட்டிலிங்கம் தோட்டங்களிலும் சாலைகளிலும் வைக்கும் மரம்; கூம்பு வடிவமாக உயர்ந்து வளர்வது. மனோரஞ்சிதம்

சீத்தா
முழுக்கனி
கனி : நெடுக்கு வெட்டு
1. கிளை
2. பூங்கொத்து
3. பூ: நெடுக்கு வெட்டு
4. பூவின் உறுப்புக்கள்
5. 6. 7. கேசரம் முன், பின், பக்கத் தோற்றங்கள்

ஒரு கொடி. அதன் பூ மிகுந்த வெடிப்பான மணமுள்ளது. இந்தோ-மலேயா, பிலிப்பீன் முதலிய இடங்களில் இலாங்-இலாங் என்னும் கனங்கா பயிர் செய்யப்படுகிறது. இதிலிருந்து மக்காசார் எண்ணெய் எடுக்கப்படுகிறது. ஆப்பிரிக்காவின் அயனமண்டலத்தில் வளரும் மானோடோரா மிரிஸ்டிகா (Monodora myristica)வின் விதை சாதிக்காய் போலப் பயன்படுகிறது. பார்க்க: சீத்தா, நெட்டிலிங்கம், கனங்கா, செரிமோயா, மனோரஞ்சிதம்.

அஜ்மீர் இந்திய யூனியனிலுள்ள சீ.பிரிவு இராச்சியங்களுள் ஒன்று. இது முன்னர் அஜ்மீர்-மீர்வாரா என்ற பெயர் கொண்டிருந்தது. இதன் பரப்பு 2,425 ச.மைல்; மக்: 6,92,506 (1951). ஆரவல்லி மலைத்தொடர் இதன் வழியே சென்று மீர்வார் பீடபூமியையும், மார்வார் சமவெளியையும் பிரிக்கிறது. இது மழை குறைவான பகுதியாகையால் இங்குப் புன்செய் நிலச்சாகுபடியே அதிகமாகச் செய்யப்படுகிறது. சோளம், பார்லி, பருத்தி, எண்ணெய் வித்துக்கள், கோதுமை முக்கியமான விளைபொருள்கள். அஜ்மீர், மீர்வார், கேக்கி ஆகியவை இதன் முக்கிய நகரங்கள். கடைசி இரண்டும் வியாபாரத்தலங்கள். இந்த இராச்சியத்தில் பல பஞ்சாலைகளும் நெசவாலைகளும் உள்ளன. பிரதம கமிஷனரின் ஆளுகையின் கீழுள்ள இந்த இராச்சியத்திற்கும் 30 உறுப்பினர் கொண்ட சட்டசபையொன்றுண்டு. மக் : 1,96,633(1951).

அஜந்தா (Ajanta) ஐதராபாத் இராச்சியத்திலுள்ள ஒளரங்கபாத்திலிருந்து வடக்கே ஒரு மைல் தூரத்திலுள்ள கிராமம். இங்கிருந்து மூன்றரை மைல் தொலைவில் உலகப் புகழ் பெற்ற பல பௌத்த குகைக் கோயில்கள் உள்ளன. இவற்றில் எல்லாம் ஓவியங்கள் தீட்டப்பெற்றிருக்கின்றன. ஓர் அருவியையடுத்துள்ள செங்குத்தான பாறையில் இக் குகைகள் குடையப்பட்டுள்ளன. பாறையின் மீது ஏறிச் செல்லும் போதே பல குகைகளின் வாயில்கள் காணப்படும். மொத்தம் 29 கோயில்களும் குகைகளும் உள்ளன. இவற்றை யிணைப்பதற்குப் பாதைகளும் படிகளும் இருக்கின்றன. இவை வெவ்வேறு காலங்களில் கி. பி. முதல் நூற்றாண்டிலிருந்து 7ஆம் நூற்றாண்டுவரை உண்டாக்கப்பட்டவை.

சில குகைகள் குப்த மன்னர் காலத்தைச் சேர்ந்தவை. 16, 17ஆம் குகைகள் சுமார் கி. பி. 500-ல் ஏற்பட்ட விஹாரங்கள். இவை தூண் மண்டபங்கள். பின்னாலுள்ள சுவரில் ‘பிரலம்பபாத’ ஆசனத்தில் வீற்றிருக்கும் புத்த உருவங்கள் காணப்படுகின்றன. இத்தூண்களின் அழகும் வகையும் குறிப்பிடத்தக்கவை. இரண்டு குகைகளிலும் உள்ள தூண்கள் வெவ்வேறு வகையைச் சார்ந்தவை. இங்குள்ள தூண்கள் ஒன்றைப்போல மற்றொன்று இருப்பதில்லை. இவை வாகாடக மன்னர்கள் காலத்தவை. குப்த காலத்து ஓவியங்கள் இவற்றிலும் 19ஆம் குகையிலும் காணப்படுகின்றன. புத்தர் வாழ்க்கையைப்பற்றிய ஓவியங்கள் இவை.

பௌத்த ஓவியங்களில் மிக முக்கியமானவை அஜந்தாவில் காணப்படுவன. சுதை ஓவியங்கள் (Fresco Paintings) நன்கு பாதுகாக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஒரு மாளிகையின் முன்புறத்தே தாழ்வாரத்தின் மறைவில் இரண்டு காதலர்கள் உட்கார்ந்திருப்பதாக 17ஆம் குகையின் வலப்புறத்தில் சித்திரித்திருக்கிறது. பல வேலைக்காரர்கள் தொடர்ந்துவரத் தோட்டத்து வழியே செல்லும் ஓர் அரச குமாரனையும் அவன் மனையாளையும் ஒரு ஜன்னல் வழியே இரு காதலர்கள் பார்ப்பதாக இடப்புறத்தில் சித்திரித்திருக்கிறது. இவ்விரண்டும் மிக அழகான சுதை ஓவியங்கள்.

19ஆம் குகை நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. சுமார் 550-ல் கட்டப்பட்ட வழிபாட்டு அறையில் புத்தர் படிமங்களும் ஏனைய பௌத்தப் படிமங்களும் தோற்றமளிக்கின்றன. இக்குகை பண்டைய முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டிருப்பினும், முகப்பு வேறு மாதிரியாக அமைந்துள்ளது. மகாயான உருச் சிற்பத்தின் வளர்ச்சியை இது காட்டுகிறது. இரட்டை மடிப்பு உச்சியுள்ள தூண்கள் முகப்பைத் தாங்குகின்றன. இம் முகப்பில் சுற்றுப்புறமெல்லாம் சித்திரத் தலைகள் அமைந்த சைத்தியப் பலகணிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை ஆந்திரர் சிற்ப வகையைச் சார்ந்தவை ; குப்தர்களால் கையாளப்பட்டவை.

1 முதல் 5, 21 முதல் 26 ஆகிய குகைகள் எல்லாம் விஹாரங்கள் அல்லது மடங்கள்; ஒரு குகைமட்டும் சைத்தியம் எனப்படும் வழிபாட்டுக்கூடம். இவை 7ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. 7ஆம் நூற்றாண்டைச் சார்ந்த 4, 24ஆம் குகைகள் பூர்த்தியாகாதவை; ஆயினும் இவை பூர்த்தியாகியிருந்தால் அஜந்தாக் குகைகள் யாவற்றுள்ளும் மிகச் சிறந்த வேலைப்பாடு அமைந்தவையாக இருந்திருக்கும். அதே நூற்றாண்டைச் சேர்ந்த முதற் குகையில் அவலோகிதேசுவரர் (போதிசத்துவர்) சித்திரம் ஒன்று மிக அழகாகக் காணப்படுகிறது. இது வைணீகம் என்னும் ஒரு முறை