பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கிலோ-எகிப்திய சூடான்

333

ஆச்சாமரம்

Theatre); சென் குப்தாவின் பெர்னார்டு ஷாவின் கலை (Art of Bernad Shaw); கே. ஆர். ஸ்ரீநிவாசய்யங்காரின் லிட்டன் ஸ்டிராச்சி; ரஞ்சி சஹானியின் இந்திய நோக்கில் ஷேக்ஸ்பியர் (Shakespeare Through Indian Eyes) ; ஹுமாயூன் கபீரின் பொயட்ரி, மோனட்ஸ் அண்டு சொசைட்டி (Poetry, Monads and Society). வேதாந்த விஷயங்களைப் பொருத்தமாகவும் இலக்கியச் சுவை திகழும்படியும் டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதுகிறார்.

நகைச்சுவைத் துறையில் இரண்டொரு பத்திரிகைகள் தொண்டு செய்து வருகின்றன. எஸ். வீ. வி. (எஸ். வீ. விஜயராகவாச்சாரி)யின் நகைச்சுவைக் கட்டுரைகள் படிப்போருக்கு உவகை அளிக்கக்கூடியவை. ஆர். பங்காரு ஸ்வாமியின் மைலாடு குக்குடூன்குன் என்ற நூலும் குறிப்பிடுவதற்கு உரியது. கோ. ரா. ஸ்ரீ.

ஆங்கிலோ-எகிப்திய சூடான் கிழக்கு ஆப்பிரிக்காவில் எகிப்துக்கு மேற்கேயுள்ள பகுதி. 1899-ல் இங்கிலாந்தும் எகிப்தும் செய்துகொண்ட உடன்படிக்கைப்படி பிரிட்டனது உடன்பாட்டுடன் எகிப்து நியமிக்கும் கவர்னர்-ஜெனரல் இதை ஆள்கிறார். இப்பிரதேசம் இவ்விருநாடுகளின் கூட்டு ஆதிக்கத்தில் உள்ளது. 1951 அக்டோபரில் எகிப்து இந்த உடன்படிக்கையைப் புறக்கணித்து, இந்நாடு தனது ஆளுகைக்குட்பட்டதென அறிவித்தது. இந்த அறிக்கையைப் பிரிட்டன் ஏற்கவில்லை. நைல் ஆற்றின் மேற்பகுதி இதன் வழியாக ஓடி எகிப்தில் பாய்கிறது. பரப்பு : 9.67,500 ச. மைல். மக் : 80.79.800 (1949). வடபகுதியில் மக்கள் அனைவரும் முஸ்லிம்கள். ஐரோப்பியரும் எகிப்தியரும் கிரேக்கரும் பட்டணங்களில் வாழ்கின்றனர். பருத்தி, தந்தம், கருவேலம்பிசின் முக்கியமான ஏற்றுமதிப் பொருள்கள். கெபய்ட் என்னுமிடத்தில் தங்கம் கிடைக்கிறது. தலைநகரம் கார்ட்டூம். மக் : 75,000. மற்ற முக்கிய நகரங்கள் : வாத்மெதாவி. மக்: 57.300.எல் ஒபேய்து மக்: 70.100.

ஆங்கிலோ-சாக்சன் சட்டங்கள் நார்மானியர் இங்கிலாந்தை வெல்வதற்கு முன்பு அந்நாட்டில் பயின்ற சட்டங்கள். இவை பிற நாட்டு ஆதிக்கமின்றியே ஏற்பட்டவை ஐரோப்பியச் சட்டங்களெல்லாம் லத்தீனில் எழுதப்பட்டிருக்க, இவையெல்லாம் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டுள்ளன. இவ்வாங்கிலோ-சாக்சன் சட்டங்கள் மூவகைப்படும்: 1. அரசாங்கத்தாற் பிறப்பிக்கப்பட்ட சட்டங்கள் ; 2. மரபையொட்டிய விதிகள்; 3. சட்டத் தொகுப்புக்கள். இவை பொது அமைதியைப் பாதுகாக்கும் முறையில் அமைந்தன. தந்தை, எசமானன், பிரபு முதலியவர்களுக்குப் பல உரிமைகள் அக்காலத்தில் இருந்தனவாயினும், மன்னனுடைய ஆட்சியின் முக்கியத்துவம் மற்ற அதிகாரங்களிலும் சிறந்ததாயிருந்ததால் நாட்டில் அமைதி நிலவிற்று. தனியாள் பாதுகாப்பு உரிமை, சொத்துரிமை, மணம், வாரிசுரிமை முதலியவையும் சட்டவாயிலாகக் கட்டுப்படுத்தப்பட்டன. 10,11ஆம் நூற்றாண்டுகளிலிருந்து ஆங்கிலோ-சாக்சன் சட்டங்கள் படைமானியச் சமூக ஏற்பாட்டையொட்டி மாறியமைந்தன.

ஆங்கோர் ஆசியாவில் கம்போடியா நாட்டின் பழைய தலைநகரம்; இப்பொழுது சிதைந்து கிடக்கிறது. இதைச் சூழ்ந்து உயரமான சுவர்கள் உள்ளன. இதன் பரப்பு ஏறக்குறைய இரண்டு சதுர மைல். இதற்கு ஐந்து வாயில்கள் உள்ளன. இதிலுள்ள அரண்மனைகள் தென்ஹா என்னும்கம்போடியாசுதந்திரம் பெற்றஆறாம் நூற்றாண்டில் இந்துச் சிற்ப முறையைத் தழுவிக் கட்டப் பெற்றவை. இங்கு வாழ்ந்த மக்கள் கெமர் (Khmer) நாகரிகத்தினர் எனப்பெறுவர். தலைநகரத்தை ஆங்கோர்தோம் என்றும், அதன் தெற்கே ஒரு மைல் தூரத்திலுள்ள பௌத்தக் கோயிலை ஆங்கோர்வாட் என்றும் கூறுவர். இந்த நகரத்தைத் தாய்லாந்து மன்னனுடைய சேனைகள் 1431-ல் அழித்தன.

ஆங்கோர்வாட் (Angkor Vat) கம்போடியாவிலுள்ள ஊர். இங்கே கெமர் கலையின் விரிவைக் காணலாம். கி. பி. 12ஆம் நூற்றாண்டில் சூரியவர்மன் கட்டிய பெரிய கோயில் கெமர் கலையில் ஒரு மணி போன்றதாகும். இதன் அணியிட்ட கைப்பிடிச் சுவர்களுக்கும் கோபுரங்களுக்கும் இணையாக இந்து இதிகாசக் கதைகளைச் சித்திரிக்கும் வேலைப்பாடுகள் உடைய நீண்ட பிரகாரங்களையே கூறலாம். இங்கே இராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்களின் கதைகள் எல்லாம் சித்திரிக்கப்பட்டிருப்பதோடு அக்காலத்து அரசிகளுடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளும் சித்திரிக்கப் பட்டிருக்கின்றன. இந்தச் சித்திரங்கள் உயிருடனுள்ளவைபோலவே காணப்படுகின்றன. சீ. சி.

ஆங்ஸ்ட்ராம் (Angstrom) ஒளியின் அலை நீளத்தை அளவிடும் அலகு. நிறமாலை (த.க.) அளவுகளில் முதன் முதலில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகளில் ஒருவரது பெயரால் இது வழங்குகிறது. இது 10-10 மீட்டர் நீளமுள்ளது. சோடிய ஆவி வெளிவிடும் ஒளியின் நிறமாலையில் மஞ்சள் நிறவரையின் அலைநீளம் 5,390 ஆங்ஸ்ட்ராம்கள்.

ஆச்சாமரம், சாலமரம், மராமரம், ஷோரியா ரொபஸ்டா (Shorea robusta), டிப்டிரோகார்ப்பேசீ

ஆச்சா

1. கிளை 2. பூங்கொத்து 3. பூ 4. கனி

இரட்டைவிதையிலைக் குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத்தைச் சேர்ந்த மரங்கள் இந்தியக் காடுகளில்