பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆடை அணிகள்

354

ஆடை அணிகள்

ஆடைகள் (சிற்பம், இலக்கியம்) : ஒவ்வொருகாலத்து ஆடைகளை, அவ்வக் காலத்துச் சிற்பங்களும் சித்திரங்களும் நன்றாகக் காட்டும். ஆடைகளின் வருணனையை இலக்கியங்களிலும் காணலாம். தமிழ் நாட்டில் கி.பி. ஏழாம் நூற்றாண்டிற் பல்லவர் காலத்திலிருந்துதான் சிற்பங்கள் அகப்படுகின்றன. ஆந்திரப் பகுதியிலுள்ள அமராவதி, ஜக்கய்யப்பேட்டை, நாகார்ஜுனகொண்டா போன்ற இடங்களில் அகப்பட்ட பௌத்த சிற்பங்கள், கி.மு. 200 முதல் கி.பி. 400 வரை இருந்த ஆடைகளைத் தெரிவிக்கின்றன. கி.பி. 400-ல் இருந்து கி.பி.650, 700 வரை உள்ள ஆடைகளைப் பற்றி, அக்காலத்தில் தென் இந்தியாவுடன் தொடர்புகொண்ட சாளுக்கிய இராச்சிய ஊர்களான பாதாமி, ஐஹோல் முதலிய இடங்களிலுள்ள சிற்ப வகைகள் காட்டுகின்றன. இதனால் சரித்திர காலத்திற்கு

ஆடைகள்-படம் - 1
அமாாவதிச் சிற்பங்கள்-முதல் வரிசை (கி.மு. 2ஆம் நூ.) : 2.வது வரிசை (கி. பி. முதல் நூ.) ; 3-வது வரிசை (கி. பி. 2ஆம் நூ.)
உதவி : வை. மு. ஈரசிம்மன்

முன்னிருந்து, கி. மு. 200 வரை உள்ள காலத்தை முதற் பகுதியாகவும், கி.மு.200-ல் இருந்து இக்காலம் வரை உள்ள காலத்தை இரண்டாம் பகுதியாகவும் வரையறுத்து, முதற்காலப் பகுதியில் இந்தியா முழுவதையும்பற்றிப் பொதுவாகக்கூறி, இரண்டாம் காலப் பகுதியில் தென் இந்தியாவையும், முதன்மையாகத் தமிழ்நாட்டையும்பற்றி விரிவாகச் சொல்லப்படும்.

கி.மு. 200 வரை: வரலாற்றுக் காலத்திற்கு முந்திய குகைச் சிற்பங்களில் வடிவங்கள் நிருவாணமாகத்தான் காணப்படுகின்றன. அடுத்தபடியாகச் சிந்து வெளி நாகரிகக் காலத்திய (கி.மு. 3500-கி. மு. 1500) மொகஞ்சதாரோவிலும், ஹாரப்பாவிலும் வெட்டியெடுக்கப்பட்டசிற்பங்கள் பெரும்பாலும் ஆடையற்றன வாயும், சில சல்லடம் (லங்கோடு) அணிந்தனவாயும், மற்றும் சில போர்வை போர்த்தனவாயும், மயிரை