பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆடை அணிகள்

355

ஆடை அணிகள்

நாடாவால் கட்டியனவாயும் காணப்படுகின்றன. பெண்கள் விசிறி போன்ற தலைப்பாகை அணிந்துள்ளார்கள். மொகஞ்சதாரோ அழிந்து ஆரியர் குடி புகுவதற்கு இடையில் இந்திய நாட்டின் நாகரிகத்தை அறியச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆரியர்கள் குடியேறிய பிறகு வேத நாகரிகம் தொடங்கி, ஆயிரம் ஆண்டுகள் (கி. மு. 1500-கி.மு. 500) வளர்ந்து வந்தது. ஆயினும், முதல் எண்ணூறு ஆண்டுகளில் மிக்க மாறுதல்கள் இல்லை. ஆரியர்கள் தங்கள் ஆடை வகைகளையே மிகுதியாக அணிந்துவந்தபோதிலும் இங்கிருந்த மக்களின் ஆடைகளைப் போலவும் அணியலாயினர். அன்னவர் தோல், புல், மரவுரிகளாலான ஆடைகளை

ஆடைகள்-படம் 2
முதல் வரிசை - அமராவதிச் சிற்பம் (கி.பி. 3-4 ஆம். நூ.); இரண்டாம் வரிசை-சாளுக்கியச் சிற்பம் (கி.பி. 5-7ஆம்.நூ.)
உதவி : வை, மு. நரசிம்மன்

உபயோகித்தார்கள் வேத இலக்கியங்களில் ஆடையின் ஒவ்வோர் உறுப்பிற்கும் ஒவ்வொரு தேவதை இருந்ததாகச் சொல்லப்படுகிறது. துணிகளில் கொச்சு முதலிய வேலைப்பாடுகள் இருந்தன. அடுத்த மகாஜனபத காலத்தில், சைசுநாகர், நந்தர் முதலியோரிடத்து (கி.மு.642-320) இந்திய நாகரிகம் இன்னும் சற்று முன்னேறியது. இக்காலத்தில், காசிப்பருத்தி மிகப் பிரசித்தமாக இருந்தது. மக்கள் பட்டுத் துணிகளையும் உடுத்து வந்தனர். செருப்பு அணியும் வழக்கமும் இருந்தது. அக்காலத்துப் பௌத்த நூல்களில் துணிகளை வெட்டுதல் தைத்தல் என்னும் செயல்களைக் குறிக்கப் பல சொற்கள் காணப்படுகின்றன. மௌரியர் காலத்துச் (கி.மு.400 - கி. மு 200) சிற்பங்கள் சில கிடைப்பினும், இலக்கியங்களே பெரிதும் உதவுகின்றன.கௌடிலிய அர்த்த சாத்திரத்தில் தோலைப்பற்றி அதிகமாகக் கூறப்படுகிறது. அதில் பத்துவிதமான கம்பளத் துணிகளைப்பற்றிச் சொல்லியிருக்கிறது. அக்காலத்தில் காட்டு மிருகங்களின் மயிரிலிருந்து துணி நெய்யப்பட்டது. மரப்பட்டைகளினாலும் ஆடைகள் செய்யப்பட்டன. காசியும் ரபுண்டரமும் பட்டிற்கு மிகப் பிரசித்தமாக இருந்தன. துணி நெய்வதற்குத் தனிப்பட்ட தொழிற்சாலைகளை அரசர்கள் ஏற்படுத்-