பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆடை அணிகள்

361

ஆடை அணிகள்

பில் சேர்க்கப்பட்ட இடுப்பணி. தஞ்சைக் கல்வெட்டுக்களில் கடிசூத்திரம், பட்டிகை என வழங்கப்படுகிறது. சிற்பியின் வேலைத்திறம் முழுவதும் இந்த அணியில் காட்டப்படும். அதிலிருந்து தொங்கும் பல வளைவுகளைக் கொண்ட முத்துச் சரங்கள் ஊருதாமம் என்று சொல்லப்படும். இச் சரங்கள் தொடையின் கீழ்வரையில் தொங்கலாம். பல்லவ, முற்சோழர் காலச் சிற்பங்களில் ஒரே ஒரு முத்துச் சரந்தான் காணப்படும். ஆனால், பிற்காலச் சிற்பங்களில் ஒவ்வொரு தொடைமேல் இரண்டும், நடுவில் ஒன்றும் ஆக ஐந்து மாலைகள் காணப்படும்.

12. கால் அணிகள் காப்புக்கள், கொலுசுகள், தண்டைகள், சிலம்புகள், விரல்களுக்கு மோதிரங்கள். சாதாரணமாக, இவைகள் வெள்ளியில் செய்யப்படும். சிலம்புகளுக்குப் பாதசாலகம் என்று பெயர். இது சிறிய குழாய் போல வளைந்து கால்களில் படிய அணிவது. குழாய்க்குள் இரத்தினங்களோ, சிறிய மணிகளோ போடப்படும். அல்லது கெட்டியாகச் செய்யப்பட்டால் சிறிய மணிகள் அதில் தொங்கவிடப்படும்.

படம் 5. குண்டலங்கள்
உதவி : வை. மு. நரசிம்மன்

கம்பராமாயணம் (பாலகாண்டம் - கோலங்காண் படலம்), சீவகசிந்தாமணி (இலக்கணையாரிலம்பகம்) போன்ற தமிழ்க் காவியங்களிலும் பலவிதமான அணிகள் கூறப்பட்டுள்ளன. ஆனால், அவைகளில் சில இப்போது உபயோகத்தில் இல்லைபோலும். உதாரணமாகத் தங்கத்தினால் இயன்ற தோடு, சுறவுக் குழை, இரத்தினங்களினால் இயன்ற கடிப்பு அல்லது குதம்பை என்ற ஆண், பெண்கள் காதணிகள், பொன், முத்து, வைரம் இவைகளாலாகிய பல தோள் அணிகள், தாரகச்சும்மை என்ற நட்சத்திரத் தொகுதிபோல முத்துக் கூட்டத்தாலாகிய இடையில் அணியும் நகை இவைகளைக் கூறலாம். இக் காலத்தில் மூக்கில் அணியப்படும் திருகுகள், மூக்குத்திகள், புலாக்குகள், காதுகளில் மடலின் நடுவிலும் மேலும் அணியப்படும் நகைகள் பண்டைக்காலச் சிற்பங்களின்மேல் காணப்படவில்லை. அவைகள் அயல்நாட்டு வியாபார மூலம் ஏற்பட்டிருக்கலாம்.

முடிவு: மேலே முக்கியமான சில அணிகளே குறிக்கப்பட்டுள்ளன. பலவகையான பண்டைக்கால அணிகளை மிக அழகாகச் சிற்பிகள் பல சிற்பங்களின்மேல் செதுக்கிக் காட்டியுள்ளார்கள். கவிஞரும் இனிது வருணித்துள்ளார். சந்தர்ப்பங்களுக்கு ஏற்பச் சில அணிகளை அணிவதும் விலக்குவதும் வழக்கமாயிற்று. அரசர்கள் கிரீடங்களை விசேஷகாலங்களில் கட்டாயமாக அணியவேண்டும். மணிகளைக்கொண்ட ஒட்டியாணத்தையும் கால் தண்டையையும் கணவனைப் பிரிந்து வசிக்கும் மனைவியர் அணியலாகாது. நடிகைகள் எல்லா ஆடை அணிகளுடனும் காணப்படுவார்கள். கர்ப்பிணிகள் முக்கியமாகச் சில அணிகளையே அணிவர். சிற்பங்களின்