பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆதிக் குடிகள்

368

ஆதிக் குடிகள்

கும் ஒரு தலைவனிருப்பான். பொதுக் காரியங்களைக் கவனிப்பதும், முறை வழங்குவதும், மக்களைக் காப்பதும் அவனுடைய பொறுப்புகள். அவனுக்கு

தொதவர்கள் நீலகிரி மலைவாசிகளான
உதவி: என். எம். சுவாமிநாதன், சென்னை.

ஆலோசனை கூறத் தொகுதிப் பெரியார்கள் (Elders) ஒரு சிறு நிருவாக சபைபோல் கூடுவார்கள். தொகுதியின் உறுப்பினர்களுக்குள்ளும் வேலைப்பாகுபாடு உண்டு. பெண்கள் குழந்தைகளைப் பராமரிக்கவும், வேறு முக்கிய வேலைகளைச் செய்யவும், ஆண்கள் வேட்டையாடவும் சண்டையிடவும் தயாராயிருக்க வேண்டும். தொகுதி வாழ்க்கையில் பல முக்கியச் சடங்குகளுமுண்டு.

உலக மக்கள் எல்லோரும் ஏதாவதொரு காலத்தில் இது போன்ற தொகுதி வாழ்க்கையின் கீழ் வசித்துத்தானிருந்தார்கள்.

ஆதிக்குடிகள் ஆட்சிமுறை வரலாறு: முதன்முதலாக ஆட்சிமுறை எப்படித் தோன்றியது என்பது பற்றிப் பலவிதக் கொள்கைகள் உள்ளன. அவைகளில் இரண்டை இங்குக் கவனிப்பது அவசியமாகிறது. குடும்பத் தலைவன் அதிகாரமே இராச்சிய அதிகாரத்துக்கு

காசிகள்
(அஸ்ஸாம் இராச்சிய வாசிகள்)

வழி காட்டியாயிருந்தது என்பது ஒரு கொள்கை (The Patriarchal Theory). அதாவது, பண்டைக்காலத்தில் மக்கள் தனிக்குடும்பங்களில் வாழ்க்கை நடத்தினார்கள். குடும்பத்தில் மூத்த ஆண்மகனே தலைவன். குடும்பத்தைச் சேர்ந்த மற்ற ஆண்கள், பெண்கள், வேலையாட்கள், அடிமைகள் எல்லோரும் அவனுக்குக் கீழ்ப்படிதல் வேண்டும். அவனுடைய கட்டளையை மீறி அவர்கள் நடக்க முடியாது. ஆண்வழி வந்தவர்களெல்லாரும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனும் முறைப்படி குடும்பம் வளர்ச்சியடையும். அப்படி விரிவடைந்த பெரிய குடும்பத்துக்கும் வயது வந்த ஒரு தலைவன் (The Patriarch) இருப்பான். அவன் தலைமையும் குடும்பத் தலைவன் தலைமையைப் போலவே வெளிப்படும். நாளடைவில் இனங்கள், தொகுதிகள் ஒன்றாகி அரசாங்கமென ஏற்பட்டால், அதன் தலைவனாகிய அரசனது அதிகாரமும் பழைய குடும்பத் தலைவனது போலவே விளங்கும். எனவே அரசியல் அதிகாரத் துக்கு முதலில் வழிகாட்டியது குடும்பத்தலைவன் செலுத்தி வந்த அதிகாரமாகும். ரோமானியர், ஆரியர், எல்லோரிடையும் இத்தகைய சமுதாய வாழ்க்கை அமிசங்கள் பரவியிருந்தன.

பல இடங்களில் குடும்பத் தலைவன் அதிகாரமுறை அமலிலிருந்தாலும் எல்லா ஆதிக்குடிகள் தொகுதிகளிலும் காணப்படவில்லை. ஆஸ்திரேலியா, மலேயா போன்ற நாடுகளில் பண்டைய மக்கள் வாழ்க்கை ஆராய்ச்சியாளர்கள் அங்கெல்லாம் ஆதியிற் குடும்பமென்ற பிரிவே இல்லாது மக்கள் அநேகர் கூட்டங்கூட்டமாக (Horde or pack) வசித்தார்களென்றும், அவர்களுக்குள் உறவும் தொடர்பும் ஆண்கள் மூலம் நிருணயிக்கப்படாமல் பெண்கள் வழியே வந்தன என்றும் எடுத்துக்காட்டி யிருக்கிறார்கள். இவ்விதக் கூட்டமே ஆதிகால மக்கள் வாழ்க்கை நிலையாம். பின்னர் இது இனங்களாகப் பிரிந்து, இனங்கள் தனிக்குடும்பங்களாகப் பிரிவுற்றன. இதைப் 'பெண்வழித் தாயக் கொள்கை' (The Matriarchal Theory) என்னலாம்.

மேலே கவனித்த இரு கொள்கைகளிலும் ஓரளவு உண்மை இருக்கிறது. பண்டைத் தொகுதிகளெல்லாம் ஒரேவகையில்தான் அமைய வேண்டு மென்பதில்லை. பல பகுதிகளில் குடும்பத்திலிருந்து தொடங்கி, இனங்களும் தொகுதிகளும் வளர்ந்தன. சில இடங்களில் கூட்டம் முதலில் தோன்றிப் பிறகு இனங்களும் குடும்பங்களுமாகப் பிரிவுற்றன.

பண்டைய மக்கள் தொகுதிகளில் மக்களை ஒன்றுபடுத்தும் ஆற்றல்கள் சில இருந்தன. மக்கள் தொகுதியி லுள்ளவர்களெல்லோரும் உறவினர் என்ற நம்பிக்கை அவர்கள் ஒற்றுமை உணர்ச்சியை வலுப்படுத்தியது. உண்மையில் உறவிலோ, உறவு என்ற ஐதிகத்திலோ (The band of kinship, real or assumed) நம்பிக்கையே முக்கியமானது. பல இடங்கள் தங்களுக்கிருக்கும் உறவைப் புது வழிகளில் வெளியிட்டன. ஓர் இனம் ஏதாவதொரு மிருகத்தையோ, செடியையோ அதன் அடையாளமாக (Totem) வைத்துக் கொள்ளும். இனத்தினர் அம்மிருகத்தைக் கொன்று தின்பதில்லை. ஒரே சின்னத்தை உடையவர்கள் உறவினராகக் கருதப்பட்டபடியால்