பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆப்க்கியாப்டெரிக்ஸ்

406

ஆர்க்கேடியா

இறக்கை யெலும்புகள் சாதாரணப் பறவைகளில் மேற்கை யெலும்பு ஒன்று, முன் கை யெலும்புகள் இரண்டு, மணிக்கட்டு எலும்புகள் இரண்டு தெரியும். அகங்கை யெலும்புகள் மூன்றே உண்டு ; அவையும் ஒன்றாகக் கூடியிருக்கும்; மூன்று விரல்கள் உண்டு. ஆர்க்கியாப்டெரிக்ஸில் அகங்கை யெலும்புகள் தனித்தனியாக இருக்கின்றன. நான்கு விரல்கள் காண்கின்றன. அவற்றில் இரண்டிற்கு உகிர்கள் உண்டு. இரண்டிற்கு விரல்களின் நுனியைக் காணோம். மார்பு

ஆர்க்கியாப்டெரிக்ஸ்

தோள் வளையம்: cl. காறையெலும்பு. sC. தோள்பட்டை யெலும்பு. co. காரக்காய்டு (காக்கை ) யெலும்பு.
இறக்கை : h. மேற்கை யெலும்பு. r. ஆர எலும்பு. u. முழங்கை எலும்பு. C. மணிக்கட்டு எலும்பு. I. II. III. விரல்கள்.
கால் : I. II. IiI. IV. விரல்கள்.
ஷ்டைன்மன்: டேடர்வன் என்பவர்களைப் பின்பற்றி, சிட்டெல்
எழுதிய தொல்லுயிர் நூலிலிருந்து எடுத்தது:

உதவி : மாக்மில்லன் கம்பெனி லிமிடெட், லண்டன்

எலும்பு இன்னதென்று தெளிவாக தெரியவில்லை. எலும்புகள் கட்டியாக இருக்கின்றன. இக்காலப் பறவைகளில் பல எலும்புகள் குழாயாக இருக்கும்.

ஆர்க்கியாப்டெரிக்ஸ் நன்றாகப் பறக்க முடியாது. மரத்துக்கு மரம் தாவிப் போயிருக்கலாம். இரக்கையின் விரல்களிலுள்ள உகிர்களால் மரக்கிளைகளைப் பற்றி ஏறி இருக்கலாம். தரையில் நடந்தும் நன்றாக ஓடியும் இருக்கலாம். இக்காலப் பறவைகளுக்குப் பல் இல்லை. ஆர்க்கியாப்டெரிக்ஸின் தாடைகளில் கூர்மையான முனையுள்ள கூம்பு வடிவப் பற்கள் இருக்கின்றன. தாடையெலும்பிலுள்ள குழிகளிலிருந்து அவை எழுகின்றன.

தலையோட்டின் வடிவம், தாடையில் அலகுகளில்லாமல் பற்கள் இருத்தல், எலும்புகள் சிலவற்றின் இயைபு, அங்கை எலும்புகள் தனித்தனியாகப் பிரிந்திருத்தல், எலும்புத் தொடராலான நீண்ட வால் ஆகிய பண்புகளில் ஆர்க்கியாப்ரெடிக்ஸ் ஊர்வனவற்றை ஒத்திருப்பினும் இறகுகளின் அமைப்பு, இறக்கையிறகுகள் முன்கை எலும்புகளோடு பொருந்தியிருத்தல் காலடியின் அமைப்பு ஆகிய தன்மைகளால் இது பறவையே எனத் தெளிவாகின்றது. இறகு பறவையின் முக்கியக் குறி, ஆகவே ஆர்க்கியாப்ரெடிக்ஸ் எல்லாப் பறவைகளிலும் மிகப் பழையதாகும். ஊர்வனவற்றிற்கும் இக்காலப் பறவைகளுக்கும் உள்ள பரிணாமத் தொடர்பைக் காட்டும் அடையாளமாக இந்தப் பறவை விளங்குகிறது.

ஆர்க்கினி தீவுகள் (Orkney Islands) ஸ்காட்லாந்துக்கு வடக்கே ஆறு மைல் தூரத்தில் உள்ளவை மொத்தம் 67 தீவுகள். மக்கள் 30 தீவுகளிலேயே வசிக்கிறார்கள். முக்கியமானவை குன்றுகள் நிறைந்தவை. இவை மிதமான தட்பவெப்ப நிலையில் மண்வளமும் உடையவை. இங்கு பயிர் செய்தலும் மீன் பிடித்தலும் முக்கியமான தொழில்கள். கால்நடை, மீன், முட்டை முக்கியமான ஏற்றுமதி சரக்குகள். குளிர்காலத்தில் சூரிய வெளிச்சமும் கோடையில் இரவும் இல்லை. கர்க்வால் என்பது தலைநகரம்; முக்கியமான கடற்படைத் தளம். மொத்தப் பரப்பு 376 சதுர மைல். மக்;சு.21,600 (1946).

ஆர்க்கேஞ்சல் சோவியத் ரஷ்யாவின் வடகோடி பகுதியில் உள்ள ஒரு நகரம். இது இப்பெயருள்ள மாவட்டத்தின் தலைநகரம்; ஆர்க்டிக் வட்டத்திற்கு சு. 100 மைல் தெற்கே துவீனா நதி வெண்கடலோடு கலக்குமிடத்தில் இருக்கிரது. 1584-இல் நிறுவப்பட்டது. இத்துறைமுகம் பெரிய வியாபாரத்தலமாக விளங்குகின்றது. இரண்டாம் உலக யுத்தத்தில் இதன் வழியாக பல பண்டங்களும் சோவியத் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டன. ஆண்டில் ஆறு மாதம் இத்துறைமுகத்தில் பனி உறைந்துவிடுன்றது. இங்கிருந்து தெற்கேயுள்ள இடங்களுக்கு ரயில் பாதை செல்கிறது. இங்கு நடைபெறும் முக்கிய கைத்தொழில் மரமறுத்தல். மக்.சு.2,81,000(1939).

ஆர்க்கேடியா (Arcadia) பண்டைக் கிரேக்கர்கள் பெலப்பனீஸசின் நடுப்பகுதியில் உள்ள அழகான மலைப்பிரதேசத்திற்குக் கொடுத்த பெயராம். அது போர் விளையும் ராச்சியமாக இருந்தது. கிமு 6ஆம் நூற்றாண்டில் பெலப்பனீசஸின் சங்கத்துடனும் கிமு 66ஆம் நூற்றாண்டில் தீப்ஸுடனும் சேந்து போரிட்டது. ரோமானியர் கிரீசை வென்ற பின் அவர்கள் படையில் ஆர்க்கேடியர்கள் சேர்ந்தனர். பான்-