பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆர்க்டிக் சமுத்திரம்

407

ஆர்கன்

(Pan) என்னும் தேவதையை இடையர்கள் முதன் முதலில் வழிபடத் துவங்கியது ஆர்க்கேடியாவிலேயே. அதிலிருந்து ஆர்க்கேடியா என்பது சாந்தமான கிராம வாழ்க்கை என்று பொருள் பெறலாயிற்று. சர் பிலிப் சிட்னி ஆர்க்கேடியா என்ற கதைக் காவியம் எழுதியுள்ளார்.

ஆர்க்டிக் சமுத்திரம் வடதுருவத்தைச் சுற்றியுள்ள சமுத்திரம். ஐரோப்பா, ஆசியா, கிரீன்லாந்து, கானடா, அலாஸ்கா முதலிய நிலப்பரப்புக்களின் இடையே இது அமைந்துள்ளது. இதிலிருந்து பேரிங் ஜலசந்தியைக் கடந்தால், பசிபிக் சமூத்திரத்தையடையலாம். மக்கன்சி, ஒபு, லீனா, யெனிசெய் முதலிய ஆறுகள் இச்சமுத்திரத்தையடைகின்றன. முர்மான்ஸ்கிலிருந்து இதன் வழியாகவே பேரிங் ஜலசந்திவரை வேனிற் காலத்தில் கப்பல்கள் செல்வதற்குச் சோவியத் அரசாங்கத்தார் வசதிகள் ஏற்படுத்தியுள்ளனர்.

இந்தச் சமுத்திரத்தை ஒட்டிய நிலப்பகுதிகளில் குளிர் மிகுதியாயினும், கோடைக்காலத்தில் மனிதர்கள் வசிக்க முடியும். குளிர்காலத்தில் இங்கு -90° பா. வரை வெப்பநிலை குறைகிறது. இங்கு வாழும் மக்கள் எஸ்கிமோக்கள் (த.க.). வெண்கரடிகளும், சீல் முதலிய நீர் விலங்குகளும் இங்கு உள்ளன.

ஆர்க்டிக் வட்டம் (Arctic circle) வடக்கேயுள்ள மிதசீதோஷ்ண மண்டலமும் வடக்கே ஆர்க்டிக் பிரதேசமும் பிரியும் இடம். இவ்விடத்தைப் பூமத்திய ரேகையைப்போல ஒரு கற்பிதக்கோட்டைக் கொண்டு நிருணயிப்பது மரபு. இக்கோடு சுற்றி வந்து ஒருவட்டமாக முடியும். வட ரஷ்யா, கிரீன்லாந்து, நார்வே, சுவீடன், வட கானடா, அலாஸ்கா வழியாக இக்கோடு செல்வதாகக் கற்பிதம். வடதுருவத்திலிருந்து இவ்விடம் வரையுள்ள பிரதேசத்தில் ஒவ்வொரு ஆண்டிலும் ஒரே ஒரு நாள் (பெரும்பாலும் ஜுன் மாதத்தில்) 24 மணிநேரமும் பகலாகவேயிருக்கும்; அதே போல டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் 24 மணி நேரமும் இரவாயிருக்கும். இவ்வட்டத்திற்கு உட்பட்ட பிரதேசத்தை ஆர்க்டிக் பிரதேசம் என்றும் கூறுவதுண்டு. இந்த வட்டத்திற்கே உரிய சீதோஷ்ண நிலையும் தாவர விலங்கியல் சிறப்புப் பண்புகளும் மிகுந்துள்ள இடத்திற்கு ஆர்க்டிக் மண்டலம் என்று பெயர்.

ஆர்க்ரைட்டு, சர் ரிச்சர்டு (Arkwright, Sir Richard 1732-92) புதுப்பொருள் ஆக்கிய அறிஞர். இவர் இங்கிலாந்திலுள்ள பிரஸ்டன் என்னுமிடத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். அதிகமாகக் கல்வி பெற வசதியற்ற இவர் நாவிதரானார். தமது முப்பத்தைந்தாவது வயதில் தற்செயலாக ஒரு நாள் இவர் ஹார்கிரீவ்ஸ் (த. க.) என்ற அறிஞரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் அமைத்திருந்த நூற்கும் ஜென்னி என்ற பொறியைப்பற்றி இவர் அறிந்தார். அதைத் திருத்தியமைக்க வேண்டும் என்ற ஆவல் மேலிட இவர் தமது தொழிலைவிட்டுப் புதுப்பொருள் ஆக்கத்தில் இறங்கினார். அதன் பயனாக இவர் 1769-ல் நூற்கும் சட்டம் என்ற அமைப்பைக் கண்டுபிடித்தார். அதை ஹார்கிரீவ்ஸின் பொறியில் பொருத்திவிட்டால் அதைக் கொண்டு தேவையான தடிப்புள்ள பல நூல்களை ஒரே சமயத்தில் நூற்கலாம். தாம் கண்டுபிடித்த அமைப்பைச் செய்து விற்கப் போதிய மூலதனம் இல்லாமல் இவர் தொல்லைப்பட்டார். எந்திரங்களுக்கு எதிராக நடந்த கலகங்களிலும் இவர் அவதியுற்று ஊரையே விட்டுப்போக நேர்ந்தது. தம் உரிமைகளுக்காகப் பல வழக்குக்கள் நடத்தி, அவற்றை நிலை நாட்டிய பின்னர் இவர் பணக்காரரானார்.

ஆர்கண்டி (Organdy) மிக இலேசாகவும், கம்பி போன்ற விரைப்பான தன்மையும், ஒளி புகவிடும் திறனும் உள்ள ஒருவகைத் துணி. எல்லாத் துணிவகைகளிலும் இதுவே மெல்லியது. மேனாடுகளில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற ஆடைகளின் விளிம்பில் இது வைத்துத் தைக்கப்படுகிறது. இதைப் பல நிறங்களில் சாயமேற்றியும், சித்திர வடிவங்களை அச்சடித்தும் விற்கிறார்கள். இதை மெர்சரித்து இதற்குப் பளபளப்பான தோற்றம் அளிப்பதும் உண்டு.

ஆர்கலிஸ் (Argolis) : 1. இது கிரீஸ் நாட்டின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள ஒரு ஜில்லா.

2. இது ஈஜியன் கடலைச்சார்ந்த தென்கிழக்குக் கிரீஸிலுள்ள ஒரு வளைகுடா.

ஆர்கன் (Organ) : மேனாடுகளில் முக்கியமாக மாதாகோயில்களில் பயனாகும் ஓர் இசைக்கருவி. இது அழுத்தமான காற்றினால் இயக்கப்படும் பல குழாய்களைக் கொண்டது. இக்குழாய்கள் (Organ tubes) ஒவ்வொன்றும் ஒரு சுரத்தைத் தோற்றுவிக்கும். கி.மு. 2ஆம் நூற்றாண்டிலேயே எளிய வடிவுள்ள ஆர்கன் வழக்கத்தில் இருந்ததாகத் தெரிகிறது. இதில் காற்று நிறைந்த பெட்டியின்மேல் பல குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு துருத்தியின் உதவியால் பெட்டிக்குள் காற்றைச் செலுத்தி, அது குழாய்களின் வழியே சென்று அவற்றை ஒலிக்குமாறு செய்தார்கள். ஏதாதொரு குழாயை ஒலிக்காமற் செய்ய அதன் வாயைக் கையினால் மூடிக்கொண்டு மற்றக் குழாய்கள் ஒலிக்குமாறு செய்வார்கள். ஓர் உலோகத் தகட்டின் உதவியால் குழாய்களை மூடும் வழக்கம் பின்னர்த் தோன்றியது. 5ஆம் நூற்றாண்டில் எருசலேம் நகரில் இருந்த ஆர்கன் பன்னிரண்டு குழாய்களும் பதினைந்து துருத்திகளும் கொண்டிருந்தது. இதன் ஒலி ஒரு மைல் தொலைவுவரை கேட்கும். மாதா கோயில்களில்

ஆர்கன்

கோஷ்டி கானத்திற்கு 7ஆம் நூற்றாண்டில் இதைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். குழாய்களின் நாதத்தையும் பண்பையும் மாற்றி அமைக்கும் வழக்கம் இப்போது தோன்றியது. கட்டைகளை அழுத்தித் தேவையான குழாய்களின் வழியே மட்டும் காற்றைச் செலுத்தி, அவற்றை ஒலிக்குமாறு செய்யும் வழக்கம் தோன்றியது. ஆனால் அக்காலத்தில் வழங்கிய கட்டைகள் நீண்ட நெம்பு கோல்களைப்போல் இருந்தன. ஒவ்-