பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆர்த்தாசர்சிஸ்

410

ஆர்மடா

பகுதியில் இரும்பும் நிலக்கரியும் கிடைக்கின்றன. பள்ளத்தாக்குகள் செழிப்பானவை.

ஆர்த்தாசர்சிஸ் : இப்பெயர் 'அர்த்த க்ஷத்ர' என்பதன் சிதைவு. இப்பெயருள்ள பல பாரசீக மன்னர்கள் இருந்திருக்கின்றனர்.

ஆர்த்தாசர்சிஸ் I கி. மு. 460 -ல் தந்தை சர்சிஸுக்குப் பின் பாரசீக மன்னனானான் ; பாக்டிரியாவிலும் எகிப்திலும் கலகங்களை யடக்கினான். இவன் காலத்தில் அதீனியர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கைப் படி அயோனிய நகரங்களையும் திரேசையும் பாரசீகம் இழந்துவிட்டது. இவன் 40 ஆண்டுகள் ஆண்டான்.

ஆர்த்தாசர்சிஸ் II தந்தையான II-ம் டரையசுக்குப் பின் கி.மு.404-ல் பட்டமெய்தினான். ஸ்பார்ட்டா நகரின்மீது நடத்திய போரில் ஆசியாவிலுள்ள கிரேக்க நகரங்களையும் சைப்ரசையும் திரும்பப் பெற்றான். இவன் கி.மு.359-ல் இறந்தான்.

ஆர்த்தாசர்சிஸ் III மேற்கூறியவனுடைய மகன். கி.மு. 359-ல் பட்டமெய்தினான். ஆசியா மைனரிலும் பினீஷியாவிலும் உண்டான கலகங்களை யடக்கினான். ரோட்சு தீவைச் சேர்ந்த மென்டார் என்னும் சிறந்த வீரன் இவனுடைய படைத் தலைவன். இவ்வரசன் கொடியவன். இவனுடைய வேலையாளான பாகோஸ் என்பவன் இவனையும் இவன் மூத்த மக்களையும் கி. மு. 338-ல் நஞ்சூட்டிக் கொன்றுவிட்டான். பாரசீக மன்னர்கள் வெளி நாட்டிலிருந்து திரும்பி வரும்போது. அந்நாட்டு மகளிர்க்கு ஒவ்வொரு பொற்காசு அளிக்க வேண்டும் என்பது அவர்களுடைய ஒரு மரபு. III-ம் ஆர்த்தாசர்சிஸ் ஒரு முதிர்ந்த உலோபியாகையால் தன் வெளிநாட்டிலேயே வாழ்க்கையின் பெரும்பகுதியை கழித்தான் என்று ஒரு வரலாறு கூறுகிறது.

ஆர்த்ரொபோடா இறால், நண்டு, பூரான், பூச்சி, தேள், சிலந்தி முதலிய எண்ணிறந்த உயிரினங்களடங்கிய மிகப் பெரிய பிராணித் தொகுதி. இந்தப் பெயருக்கு கணுக்களாலான கால்களுள்ளவை என்று பொருள். பார்க்க: கணுக்காலிகள்.

ஆர்தர் இங்கிலாந்து நாட்டுப் பிரசித்திபெற்ற புராண வீரர். இவர் கி. பி. ஆறாம் நூற்றாண்டில் பிரிட்டானியரை ஆண்டதாகக் கூறுவர். இவர் மனைவி கினிவர் ராணி. இவருக்குத் துணைவர் மந்திரவாதி மெர்லின். இவருடைய வீரர்கள் நாட்டில் தீயோரை அழித்து நல்லோரைக் காத்து வந்தனர். இவருடைய மருமகனுடன் நடந்த போரில் இவர் காயமுற்று ஆவலோன் தீவுக்குச் சென்றார் என்பர். இவரைப் பற்றிய கதைகளைச் சர் தாமஸ் மாலரி 1485-ல் சேகரித்து எழுதினார். டெனிசன் போன்ற ஆங்கிலக் கவிகள் இக் கதைகளை அடிப்படையாக வைத்துப் பல அழகிய பாடல்கள் செய்துளர்.

ஆர் நதி (Aar) சுவிட்ஸர்லாந்திலுள்ள ஆறுகளில் மிகப் பெரியது. அது இடையில் பிரீன்ஸ் ஏரியாகவும் தூன் ஏரியாகவும் பெருகிக்கொண்டு சென்று இறுதியில் ரைன் நதியில் சேர்கிறது. பிரீன்ஸ் ஏரி கப்பல் போகக் கூடிய ஆழமுடையது. ஆர் நதியின் நீளம் 181 மைல். சுவிட்ஸர்லாந்தின் பெரிய நகரங்களிலொன்றான பெர்ன் இவ்வாற்றின் கரையிலிருக்கிறது.

ஆர்பியஸ் கிரேக்கப் புராணக் கவிஞன்; அற்புதமாக இசை பாட வல்லவன். யூரிடிசீ என்பவளை மணந்தான். ஆனால் ஹைமன் வாழ்த்தாததால் அவள் பாம்பு கடித்து இறந்தாள். ஆர்பியஸ் பாதாளலோகம் சென்ற போது அதன் அரசனும் அரசியும் இவனுடைய இசைக்காக யூரிடிசீயை இவனுடன் பூலோகத்துக்கு அனுப்பிப் பின்னால் திரும்பிப் பாராமல் செல்லுமாறு அனுப்பினர். ஆனால் இவன் பின்னால் திரும்பிப் பார்க்கவே மனைவி மறைந்தாள். பக்கான்டீஸ் என்னும் பெண்களின் காதலை இவன் மறுக்கவே அவர்கள் இவனைக் கொன்றனர். இறந்தபின் இவன் பாதாளம் சென்று தன் மனைவியை அடைந்தான்.

ஆர்பீலா வடகிழக்கு ஈராக்கில் மலையடிவாரத்தில் உள்ள ஒரு நகரம். இது மிகப் பண்டையது. மோசூலிலிருந்து பக்தாதிற்குப் போகும் வழியில் உள்ளது. இவ்விடத்தில்தான் அலெக்சாந்தர் பாரசீக மன்னனான டரையசைத் தோற்கடித்ததாகக் கருதி, அப்போரை ஆர்பீலாப் போர் என்று கூறுவது சிலர் மரபு. ஆனால் உண்மையில் அப்போர் நிகழ்ந்தது கோகமாலா என்னுமிடத்தில்தான்.

ஆர்ம்ட்ஸ்ராங்கு, எச். ஈ. (1848-1937) ஆங்கில ரசாயன அறிஞர். இவர் 1874ஆம் ஆண்டில் பேராசிரியரானார். 1876-ல் ராயல் சொசைட்டி. உறுப்பினரானார். கரிம ரசாயனத்தில் இவர் பல ஆராய்ச்சிகள் நடத்தினார். டெர்ப்பீன்கள், நாப்தலீன்கள் ஆகிய கரிமக் கூட்டுவகைகளை இவர் ஆராய்ந்தார்.

ஆர்ம்ஸ்ட்ராங்கு, வில்லியம் ஜார்ஜ், பிரபு (1810-1900) ஆங்கிலப் பொறியியலறிஞர். இவர் டைன் நதிக்கரையிலுள்ள நியூகாசில் நகரில் பிறந்து, சட்டக் கல்வி பயின்று, வழக்கறிஞராக இருந்தார். ஆனால் விஞ்ஞான ஆர்வம் மிக்கு, இவர் அத் துறையிலிருந்து விலகிப் புதுப் பொருள் ஆக்கத்தில் முனைந்தார். நீரின் இயக்கத்தால் மின்சாரத்தைத் தோற்றுவிக்கும் பொறியையும் வேறு பல நீரியல் எந்திரங்களையும் இவர் கண்டுபிடித்து எல்ஸ்விக் (Elswick) என்னுமிடத்தில் இவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவினார்.

1885-ல் இவர் அமைத்த புதுவகைப் பீரங்கி, ஆயுதங்களின் தயாரிப்பில் பெரும் புரட்சியை விளைவித்தது. இப்பீரங்கியின் குழாய் சுருளான தவாளிப்பும், பின்னிருந்து குண்டு போடும் அமைப்பும், உறுதியான வளையங்களையும் கொண்டு மிக்க திறமையாக வேலை செய்தது. இத்துறையில் செய்த பணிக்காக இவர் 1887-ல் பிரபுவாக்கப்பட்டார்.

ஆர்மடா: இச்சொல் 'பெரிய படைத் தொகுதி' என்று பொருள்படும். ஆயினும் 1588-ல் ஸ்பெயின் மன்னனான II-ம் பிலிப் இங்கிலாந்து மீது ஏவிய பெரிய கப்பற்படையையே இப் பெயரிட்டழைப்பது மரபு. ஸ்காட் அரசி மேரியின் சாவிற்குப் பழி வாங்கவும், இங்கிலாந்தைக் கத்தோலிக்க நாடாக்கவும் விரும்பிய II - ம் பிலிப் இங்கிலாந்தை வெல்லக்கருதிப் பெரிய கப்பற்படை யொன்றைத் திரட்டினான். இப்படையில் 130க்கு மேற்பட்ட கப்பல்கள் இருந்தன. இப்படையை நடத்திச் சென்றவன் மெடினா சிடோனியா பிரபு என்பவன். இப்படை தென் ஸ்பெயினிலிருந்து புறப்பட்டுக் கலே துறைமுகத்திற்குச் சென்று, அங்குக் காத்திருந்த பார்மா பிரபுவின் நிலப் படையை ஏற்றிக்கொண்டு இங்கிலாந்து மீது படையெடுக்க வேண்டும் என்பது அவர்களுடைய ஏற்பாடு. ஆயினும் இப்படை இங்கிலீஷ் கால்வாயை அணுகியபோது இங்கிலீஷ் கப்பற் படையைச் சார்ந்த சிறு கப்பல்கள் தொலைவிலிருந்தே பீரங்கிகளால் சில ஆர்மடாக் கப்பல்களைச் சேதப்படுத்தின. காற்றும் ஆர்மடாவிற்கு விரோதமாக இருந்ததால் அது வட கடல் வழியே ஓடிப் பிரிட்டிஷ் தீவுகளைச் சுற்றிக்கொண்டு ஸ்பெயின்