பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆல்கஹால்கள்

428

ஆல்கஹாலும் கைத்தொழிலும்

களைக் கரைக்க மெதிலேற்றிய சாராயம் பயனாகிறது.

95 சதவிகிதம் அடர்வுள்ள ஆல்கஹாலை வாலைவடித்தாலும் 443 சதவிகிதம் நீருள்ள கலவை கிடைக்குமே தவிர,நீரற்ற தனி ஆல்கஹாலைப் பெற இயலாது. சுட்ட சுண்ணாம்பின்மேல் வாலைவடிப்பதால் இந்நீரை அகற்றலாம். ஆனால் நடைமுறையில் ஆல்கஹாலைப் பென்சீனுடன் கலந்து இம்முக்கூட்டுப் பொருளை வாலைவடித்துத் தனி ஆல்கஹாலைப் பெறுகிறார்கள்.

அனேகமாக உலகில் எல்லா நாடுகளிலும் மதுவகைகளின் மேல் வரி போடப்படுகிறது. இவ்வரி மதுவின் ஆல்கஹால் இருப்பைப் பொறுத்திருக்கும். ஒரு மது வகையில் ஆல்கஹால் இருப்பைக் கண்டுபிடிக்க அது திட்டச் சாராயம் (Proof spirit) என்னும் பொருளுடன் ஒப்பிடப்படும். இங்கிலாந்தில் திட்டச் சாராயத்தில் பருமனளவில் 571 சதவிகிதம் ஆல்கஹாலும். 429 சதவிகிதம் நீரும் இருக்கும்.

மெதில் ஆல்கஹால்(C H3O H): இது மெதனால் (Methanol), கார்பினால், மரநாப்தா. மரச்சாராயம் என்னும் பெயர்களிலும் வழங்குகின்றது. இது இயற்கையில் தனி நிலையிற் கிடைக்காது. ஆனால் இதன் வழிப் பொருள்கள் பொதுவாக வழங்குகின்றன. பல சார எண்ணெய்கள் மீதைல் எஸ்டர்களைக் கொண்டவை. வின்டர்கிரீன் எண்ணெயில் மீதைல் சாலி சிலேட்டும், மல்லிகை எண்ணெயில் மீதைல் ஆந்திரனிலேட்டும் உள்ளன.

தயாரிப்பு: அண்மைவரை எங்கும் இது மரத்தை வாலைவடிப்பதால் தயாரிக்கப்பட்டு வந்தது. 15 முதல் 20 சதவிகிதம்வரை ஈரமுள்ள உலர்ந்த மரத்தை இரும்பு வாலைகளில் 350° சூட்டில் காற்றை யகற்றிச் சுமார் 30 மணிநேரம் காய்ச்சினால் ரசாயன விளைவுகள் நிகழ்ந்து பின்வரும் பொருள்கள் தோன்றும்:

1. எரியுந் தன்மை வாய்ந்த பல வாயுக்களின் கலவை. இது மரவாயு எனப்படும்.

2. பைரோலிக்னிய அமிலம் (Pyroligneous acid) என்னும் திரவம். இதில் 2 முதல் 4 சதவிகிதம் வரை மெதில் ஆல்கஹாலும், 0.5 சதவிகிதம் வரை அசிட்டோனும், சுமார் 10 சதவிகிதம் அசிட்டிக அமில்மும் மற்றப் பொருள்களும் இருக்கும்.

3. மரத்தார். 4. வாலையில் தங்கும் மரக்கரி.

இதிற் கிடைக்கும் பொருள்களின் தன்மையும் அளவும் மரத்தின் தன்மை, அதை வாலைவடிக்கும் நிலை இவற்றைப் பொறுத்திருக்கும். இவற்றுள் மரவாயுவைக் குழல்களின் மூலம் கடத்தி எரிக்கலாம். பைரோலிக்னிய அமிலம் தாருடன் ஆவியாக வெளிப்படுகிறது. இதைக் குளிர்வித்துப் பழுப்பு நிறமான திரவத்தைப் பெறலாம். இதைச் செப்புப் பாத்திரத்தில் வாலை வடித்து, வெளிவரும் ஆயச் சூடான சுண்ணாம்பு நீரிற் செலுத்தினால், இதிலுள்ள அசிட்டிக அமிலம் கால்சியம் அசிட்டேட்டாக மாறும். மெதில் ஆல்கஹாலும். அசிட்டோனும், நீரும் வெளிப்பட்டுக் குளிரும். சுட்ட சுண்ணாம்புடன் இதை மீண்டும் வாலைவடித்துப் பகுத்தால் மீதைல் ஆல்கஹால் பிரியும். இப்போது கிடைக்கும் பொருள் மரநாப்தா எனப்படும். இதில் 70 சதவிகிதம் ஆல்கஹால் உள்ளது. இதை மீண்டும் வாலை வடிப்பதால் 98 சதவிகிதம் சுத்தமான மெதில் ஆல்கஹால் கிடைக்கிறது.

இவ்வாறு மரத்தை வாலைவடிக்கும் தொழிற்சாலை யொன்று மைசூரில் பத்திராவதியில் உள்ளது.

ஆனால் தற்காலத்தில் மெதில் ஆல்கஹால் பெரும்பாலும் கல்கரியிலிருந்து கிடைக்கும் நீர்வாயுவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. சுத்தப்படுத்தப்பட்ட நீர்வாயுவை அதைப்போல் அரைப்பங்குப் பருமனுள்ள ஹைடிரஜனோடு கலந்து 200 காற்று மண்டல அழுத்தத்தில் ஓர் ஊக்கியின்மேற் செலுத்தினால் மெதில் ஆல்கஹால் கிடைக்கும். இதிற் பயன்படும் ஊக்கி நாகம், குரோமியம் இவ்விரண்டு உலோக ஆக்சைடுகளின் கலவை. இதை 450° சூட்டில் வைக்கவேண்டும். இம்முறையில் 20 முகல் 25 சதவிகிதம்வரை ஆல்கஹால் கிடைக்கும். இதிற் பயன்படும் நீர்வாயு நீராவியைச் செந்தழலான கரியின்மேற் செலுத்துவதாற் பெறப்படும். ஆகையால் இம்முறையை முழுத்தொகுப்பு முறையெனலாம். இது ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பெரிதும் வழங்குகிறது.

இயல்புகள்: மெதில் ஆல்கஹால் நிறமற்ற திரவம். இதன் ஒப்பு அடர்த்தி 0.792; கொதிநிலை 64·5°. கொடிய நஞ்சான இதை உட்கொண்டால் கண் குருடாகும்; பைத்தியம் பிடிக்கும்; சாவும் நேரும். எதில் ஆல்கஹாலின் தன்மையைக் கெடுத்து, அதை அருந்தத் தகாததாய்ச் செய்ய இது வாணிபத்தில் பயனாகிறது. இவ்வாறு பெறப்படும் பொருள் 'மெதிலேற்றிய சாராயம்' எனப்படும்.

பயன்கள்: பார்மால்டிஹைடு, நிறப்பொருள்கள். மருந்துகள், மெருகெண்ணெய்கள், மெழுகுகள் முதலியவற்றைத் தயாரிக்க இது பயனாகிறது. எஸ். ரா. கோ.

ஆல்கஹாலும் கைத்தொழிலும்: ரசாயனத் தொழிற்கும் மருந்துத் தொழிற்கும் ஆல்கஹால் ஒரு முக்கியமான மூலப்பொருள் என்பதைப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அறிந்தார்கள். ஆல்கஹால் தயாரிப்பிற்கு அடிப்படையான நொதித்தல் என்னும் விளைவின் தன்மையைப் பாஸ்ட்டர் விளக்கினார். பின்பு தொடர்ச்சியாக ஆல்கஹாலைத் தயாரிக்கும் முறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆல்கஹால் தயாரிப்பில் பயனாகும் பாணி (Molasses) சர்க்கரைத் தொழிலில் மலிவாகவும் ஏராளமாகவும் கிடைத்தது; இதிலிருந்து ஆல்கஹாலை மலிவாகத் தயாரிக்க முடிகிறது. பெட்ரோலியம் வாயுக்களிலிருந்து கூடச் செயற்கையில் ஆல்கஹாலைப் பெறும் முறைகள் வழக்கத்திற்கு வந்தன. இம் முறையில் ஏராளமாக ஆல்கஹாலைத் தயாரிக்க முடிகிறது. இக் காரணங்களால் இக்காலத்தில் ஆண்டிற்கு ஆண்டு அதிகமாகத் தேவையாகும் ஆல்கஹாலை வேண்டிய அளவு உற்பத்திசெய்ய முடிகிறது.

நான்கு வகைப் பொருள்களிலிருந்து ஆல்கஹால் பெறப்படுகிறது. 1.பாணி, 2. தானியங்கள், உருளைக் கிழங்கு போன்ற மாப்பொருள்கள், 3. மரம், விவசாயக் கழிவுகள் போன்ற செல்லுலோஸ் உள்ள பொருள்கள், 4. ஹைடிரோகார்பன் வாயுக்கள்.

முதல் மூன்று முறைகளில் ஆல்கஹாலைப் பெறுகையில் நொதித்த திரவத்தில் 6-8% ஆல்கஹால் இருக்கும். இதை வாலைவடித்து 96.4% ஆல்கஹால் உள்ள திரவத்தைப் பெறலாம். இது தொழிலில் திருத்தப்பட்ட சாராயம் (Rectified spirit) என்ற பெயரால் வழங்குகிறது. இத்திரவத்திலுள்ள நீரைப் பூரணமாக நீக்கித் தனி ஆல்கஹால் (Absolute alcohol) என்ற பொருளைப் பெறுகிறார்கள். பிராந்தி, விஸ்கி போன்ற மதுபானங்களைப்போல் ஆல்கஹாலை நீரோடு கலந்து குடிக்கலாம். இவ்வாறு செய்வதைத் தடுக்க ஒரு முறை கையாளப்படுகிறது. அதனுடன் மரநாப்தா (Wood naphtha), பிரிடீன் (Pyridene), நாப்தலீன்(Naptha - lene) போன்ற நச்சுப் பொருள்களையும் சாயங்களையும் கலந்தே தொழில்களுக்கு விற்கிறார்கள். தொழிலில்