பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆல்பகர்க்

435

ஆல்பகோடா

வேறு எங்கும் காணமுடியாத அற்புதக் காட்சிகளாம். அது 650 மைல் நீளமும் 75 முதல் 160 மைல் வரை

ஆல்பஸ்–மற்றொரு தோற்றம்


உதவி: சுவிட்ஸர்லாந்து தூதுவர் நிலையம், புதுடெல்லி.

அகலமும் உடையது; அரை வட்டவடிவமானது. ஒரு கோடி பிரான்ஸிலுள்ள நீஸ் அருகிலும், ஒருகோடி. ஆட்ரியாடிக் கடற் கரையிலுள்ள டிரீஸ்ட் அருகிலும் உள. இம்மலைத்தொடர் சுவிட்ஸர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி நாடுகளில் 90 ஆயிரம் சதுரமைல் பரவியுள்ளது. முக்கியமான பகுதி சுவிட்ஸர்லாந்திலுள்ளது. அதன் சிகரங்களுள் மிக உயர்ந்தது மான்ட் பிளாங்க் (15,781 அடி). அடுத்தபடியாக உள்ளவை மான்டிரோயா (15.217 அடி), மாட்டர் ஹார்ன் (14.780 அடி). இம்மலையிலுள்ள மிகப் பெரிய பனிக்கட்டி ஆறு மெர்டிகினேஸ் எனப்பெறும். இம் மலைப்பகுதியில் பல பெரிய ஏரிகளும் ஆறுகளும் அருவிகளும் உள. இம்மலைத்தொடரில் முக்கால் பாகம் விளைநிலமாகவும் காடாகவும் இருக்கிறது. மலை உச்சிகளில் காணப்படும் செடிகளும் விலங்குகளும் ஐரோப்பாவில் வேறு எங்கும் காணப்படுவதில்லை. விலங்குகளுள் ஷாமாய் ஆடும் ஐபெக்ஸ் ஆடும் முக்கியமானவை. ஆல்ப்ஸ் மலையில் உலோகங்கள் மிகுதி. உலகில் வேறு எந்த மலையிலும் காணப்படாத போக்குவரத்து வசதிகள் ஆல்ப்ஸ் மலையில் உள்ளன. உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் ஆல்ப்ஸ் காட்சிகளைக் காண வருகிறார்கள். ஆல்ப்ஸ் என்பது வெண்மை என்று பொருள்படும் ஆல்ப் என்னும் கெல்டிக் சொல்லிலிருந்து பிறந்ததாம்.

ஆல்பகர்க் (Albuquerque.1453-1515)போர்ச்சுக்கல் நாட்டில் அலெக்சாந்திரியா என்னும் ஊரில் பிறந்தவன். 1503-ல் முதன் முறையாகக் கீழ்நாடுகளுக்குக் கப்பற் பிரயாணம் செய்தான். நன்னம்பிக்கை முனையைச்சுற்றி இந்தியாவின் மேலைக் கரையிலுள்ள கொச்சியையடைந்தான். அங்குப் போர்ச்சுக்கேசியர்களுக்குக் கோட்டை ஒன்றைக் கட்டிக்கொள்ளும் உரிமையைப் பெற்றான். 1506-ல் பாரசீக வளைகுடாவில் உள்ள ஆர்மஸ் என்னும் ஊரைக் கைப்பற்றினான். 1508-ல் மறுபடியும் மலையாளக் கரையையடைந்து, அங்குக் கவர்னராயிருந்த அல்மேடா என்பவனிடம் அவனுக்குப் பதிலாகத் தன்னைப் போர்ச்சுக்கேசிய இந்தியக் கவர்னராக நியமித்திருந்த உத்தரவுகளைக் காட்டினான். அல்மேடா இவனைச் சிறைப்படுத்திவிட்டான். ஆயினும் விரைவிலேயே விடுதலையடைந்து கவர்னர் பதவியை அடைந்தான். 1510-ல் கோவாவைக் கைப்பற்றினான். 1512-ல் அவன் கீழ்நாடுகளில் திரட்டிய செல்வத்தையெல்லாம் ஒரு கப்பலில் ஏற்றிக்கொண்டு, மலையாளக் கரையை நோக்கி வந்து கொண்டிருந்தான். கப்பல் கவிழ்ந்து செல்வம் எல்லாம் அழிந்தன; அவனும் சிரமப்பட்டு உயிர் தப்பினான். அவன் ஏடனைக் கைப்பற்ற முயன்றது பலிக்கவில்லை. 1515 டிசம்பர் 16-ல் அவன் கப்பற்பிரயாணம் செய்து கொண்டிருந்தபோதே இறந்தான்; கோவாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவன் கோவா ஆட்சியை நல்ல முறையில் நடத்தினான் என்றும், உடன்கட்டை ஏறுதலை அங்கே நீக்கினான் என்றும் புகழப்பெற்றவன். தே. வெ. ம.

ஆல்பகோடா (ஆலுபுக்காரா) சற்றுப் புளிப்பான சிறு பழம். வெளியே சதையும், உள்ளே பாதுமை போன்ற சிறிய கொட்டையும் அதற்குள்ளே பருப்பும் இருக்கும்.

ஆல்பகோடா

1. பழமுள்ள கிளை 2. பூக்கொத்து

இது வாதுமை, பீச்சு, ஏப்ரிக்காட், புரூன் அல்லது பிளம், ஆப்பிள் முதலிய வகைகளைச் சேர்ந்தது.