பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆலமரம்

442

ஆலமரம்

விழுதுகள் 464. அது நிற்கும் நிலப்பரப்பு 1½ ஏக்கர். சத்தாரா மாவட்டத்தில் வைசத்கர் கிராமத்தில் ஒரு மரம் கி- மே 442 அடி, தெ-வ 595 அடி, முடியின் சுற்றளவு 1587 அடி. இருந்தது என்றும், ஏழாயிரம் மக்கள் தங்கக்கூடிய ஒரு மரம் நருமதை யாற்றுத் திட்டு ஒன்றில் இருந்ததென்றும், இருபதினாயிரம்

ஆலமரம்
உதவி : பிரமஞான சபை, சென்னை.

மக்களுக்கு நிழல் தரக்கூடிய மரம் ஆந்திராப் பள்ளத் தாக்கில் இருந்தது என்றும் அறியப்படுகின்றன.

ஆலமரம் சாதாரணமாகப் பனை முதலிய வேறு மரங் களின் மேல் விழும் விதைகளிலிருந்து முளைக்கின்றது. கட்டடங்களின் மேலும் முளைத்து, அதனால் அவை இடிந்து விழுந்து பாழாவதையும் காணலாம். இப்படி முளைத்த ஆலங்கன்றின் வேர்கள் ஆதாரமாக இருக்கும் மரத்தைப் பாம்புபோல நெளிந்து சுற்றிக்கொண்டு பூமியை நோக்கி யிறங்கும். முதலில் வேர் நிலத்தில் ஊன்றினவுடன் விரைவில் பெரிதாக வளர்ந்து விடும். அதன் கனம் தாங்காமல் ஆதாரச்செடி பட்டுப் போகும். ஆலமரம் தரையிலிருந்து முளைத்தெழுந்தது போலவே தோன்றும். தொடக்கத்தில் தொற்றுச் செடியாக இருந்து, பிறகு நிலத்தின்மேல் வளரும் இதுபோன்ற தாவரங்கள் அரைத் தொற்றுச் செடிகள் (Hemi-epiphytes) எனப்படும். இளம் பருவத்தி லும் இவைகள் ஒட்டுண்ணிகளல்ல ; சுதந்திரமாக வாழ்பவையே.

ஆலமரம் அத்திச்சாதியைச் சேர்ந்தது. இதில் எந்தப் பாகத்தை முறித்தாலும் வெண்மையான பால் வடி யும். பாலில் ரப்பர் பொருளுண்டு. இலை தனியிலை; மாறி யமைந்தது; இலையடிச் செதில்களுள்ளது. இச்செதில்கள் நுனிக்குருத்தைப் போர்த்துக்கொண்டிருக்கும். விரை வில் உதிர்ந்துவிடும். இலையின் நீளம் 4-8 அங்குலம், அகலம் 2-5 அங்குலம். அலகு அண்டவடிவானது. நரம்பு கைவடிவில் அமைந்திருக்கும்; மேற்பாகம் வழு வழுப்பாகவும் அடிப்பாகம் நுண்மயிர் போர்த்ததாக வும் இருக்கும். தளிர் சிவப்பாக இருக்கும். பூக்கள் நுண்மையானவை. வெளியே தோன்றாமல் குடம் போன்ற மஞ்சரித்தண்டின் உட்சுவரில் ஒட்டியிருக்கும். அத்தி மஞ்சரியாக இருக்கும். ஓர் இலைக்கணுச் சந்துக்கு இரண்டு அத்திமஞ்சரிகள் இருக்கும். ஆண்பூ, பெண் பூ, மலட்டுப்பூ மூன்றும் எண்ணிறந்தவை மஞ் சரியிலிருக்கும். பழம் முதிர்ந்தபோது பவளம்போலச் சிவப்பாகும். பலவகைப் பறவைகளும், வௌவால், அணில், ஆடு, மாடு, பன்றி முதலிய விலங்குகளும் பழத்தைத் தின்னும். மனிதரும் உண்பதுண்டு.

ஆலமரப் போத்துக்களைச் சாலைகளில் நட்டு வளர்ப் பார்கள். பல நூற்றாண்டுகள் நல்ல நிழல் தரும். மரம் திறமான வேலைக்குப் பயன்படாது, விறகும் நன்றாக எரியாது. ஆனால் நீரில் எளிதில் மடிவதில்லை யாதலால் கிணற்றுக்குமேலே சட்டமாக உபயோகமாகிறது. பெட்டி, கதவு, நுகத்தடி, கூடாரக்கால் முதலியன செய்வார்கள். அடிமரத்தைவிட விழுதுகள் பலமாக இருக்கும். இலையைத் தைத்து உண்கலமாக உபயோகிப் பார்கள். இதை ஆடு விரும்பி உண்பதில்லை. யானைக்கு இதைத்தான் தீவனமாகப் போடுகின்றனர். பாலும் பட்டையும் மருந்துக்கு உதவும். விழுது மென்மை யான நாரும் துவர்ப்பான பாலும் உடையதாகையால் பல்லுக்கு உறுதியைத் தரும் குச்சியாகும். நார் சிலவிடங் களில் தீவட்டிச் சூட்டாக உதவுகிறது.

இம்மரத்திற்குப் பல பெயர்களுண்டு. கீழ்நோக்கி வளரும் வேராலான அடிமரமும், மேலே செல்லாமல் சற்றுக் கிடைமட்டமாக வளரும் கிளைகளும் உடைமை யின் நிக்குரோதம் (கீழ்நோக்கி வளர்வது) என்றும், தனிமரமே தோப்புப்போல வளர்வதால் கான்மரம் என்றும், பல நூற்றாண்டுகள் வாழ்வதால் தொன்மரம் என்றும், எண்ணிறந்த பழம் பழுப்பதால் பழுமரமென்-