பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/514

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள்

466

ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள்

கிறார்கள். இந்தியாவிலும் ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள் மூலம் இதைச் செய்ய முடியும். சென்ற சில ஆண்டுகளாக இந்தியாவில் ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்களை நிறைவேற்ற முயற்சி நடந்து வருகிறது. சுமார் 160 திட்டங்கள் தற்போது நிறைவேற்றப்பட்டோ, ஆராயப்பட்டோ வருகின் றன. இவற்றிற்கு 1279 கோடி ரூபாய் செலவாகும். இவை நிறைவேறினால் 3-12 கோடி ஏக்கர் நிலம் புதிதாகச் சாகுபடிக்கு வரும். உணவு உற்பத்தி 103 கோடி டன் பெருகும். 85 இலட்சம் கிலோவாட் மின்சாரம் அதிக மாக உற்பத்தியாகும். வெள்ளத்தினால் விளையும் சேதம் குறைந்து, நீர் வழிப்போக்குவரத்து அதிகமாகும்.

நிறைவேற்றப்பட்டுவரும் திட்டங்கள்

காகரபார் திட்டம் (பம்பாய்): 1949-ல் தொடங்கப்பட்ட இது இரு நிலைகளில் நிறைவேற்றப்படும். 1952-53-ல் முடிவடையும் முதற்படியில் தபதி ஆற்றின் குறுக்கே அணைபோட்டு, 10 இலட்சம் ஏக்கர் அடி நீரைத் தேக்கி, 50,000 ஏக்கர் நிலத்திற்கு ஆண்டு முழுதும்,5,50,000 ஏக்கர் நிலத்திற்கு ஒரு பருவத்தில் மட்டும் பாசன வசதி அளித்து, 24,000 கிலோவாட் மின்சாரச் சக்தியையும் தோற்றுவிக்கும். இதற்கான செலவு 12 கோடி ரூபாய். 1956-57-ல் முடிவடையும் இரண்டாம் படியில் அணையை உயர்த்தி, 35} இலட்சம் ஏக்கர் அடி நீரைத் தேக்கி 1,00,000 ஏக்கர் நிலத்திற்குப் பாசனமும், 2,00,000 கிலோவாட் மின்சாரமும் பெறப்படும். செலவு 31 கோடி.

கோதாவரித் திட்டம் (ஐதராபாத்): கோதாவரியின் குறுக்கே இரண்டு அணைகளும், கதம் (Kaddam), மனாயர் (Manair) ஆகிய உப நதிகளின் குறுக்கே இரு அணைகளும், 30 இலட்சம் ஏக்கர் அடி நீர் தேக்கி, 20 இலட்சம் ஏக்கர் நிலத்திற்குப் பாசனமும், 1,75,000 கிலோவாட் மின்சாரமும் பெற உதவும். மொத்தச் செலவு 75 கோடி ரூபாய். இது 1955-ல் முடிவுறும். துங்கபத்திரைத் திட்டம் (ஆந்திரா) : இது ஆந்திரா, ஐதராபாத், மைசூர் அரசாங்கங்களால் கூட்டாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதில் கிருஷ்ணா நதியின்

துங்கபத்திரைத் திட்டம்
உதவி : மராமத்து இலாகா, சென்னை

உபநதியான துங்கபத்திரையின் குறுக்கே 160 அடி உயரமும், 7.942 அடி நீளமும் உள்ள ஓர் அணை போடப்பட்டு, 26 இலட்சம் ஏக்கர்-அடி நீர் தேக்கப்படும்.

இதன் பிரதம கால்வாய் 225 மைல் நீளம் கொண்டு பெல்லாரி, கர்நூல் ஜில்லாக்களில் 3,00,000 ஏக்கருக்குப் பாசன வசதி அளிக்கும். இதன் செலவு மதிப்பு 17 கோடி. ரூபாய். இத்திட்டம் 1953-ல் முடிவடையும். ஐதராபாத் இராச்சியத்தின் பக்கத்தில் கால்வாய் 140 மைல் நீளம் கொண்டு, 6,71,000 ஏக்கருக்குப் பாசனம் அளிக்கும்.1,50,000 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி யாகும். இதன் செலவு மதிப்பு 12.1கோடி ரூபாய். இது 1954-ல் முடிவடையும்.

கீழ்பவானித் திட்டம் (சென்னை) : மேட்டுப் பாளையத்திலிருந்து 20 மைல் தொலைவில் பவானி யாற்றில்

கீழ்பவானித் திட்டம்
உதவி : மராமத்து இவாகா, சென்னை,

160 அடி உயரமும், 1,520 அடி நீளமும் உள்ள அணையைக் கட்டி, இதன் வலது பக்கத்தில் 121 மைல் நீளமுள்ள கால்வாய் வெட்டிக் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2,00,000 ஏக்கருக்குப் பாசனவசதி அளிக்கப்படும். செலவு 8-2 கோடி ரூபாய். இது 1954-ல் முடிவடையும்.

மச்குந்துத் திட்டம் (ஆந்திரா): விசாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆந்திரா, ஒரிஸ்ஸா இராச்சியங்களின் எல்லையில் உள்ள மச்குந்து நதியில் தோதுமா நீர் வீழ்ச்சியினருகே இந்நதியைக் கட்டுப்படுத்தி, 1,00,000 கிலோவாட் மின்சாரத்தைப் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது. செலவு முதலில் 484 கோடி ரூபாயும், படிப்படியாக அதிகமாகிப் பத்தாண்டுகளுக்குப்பின் 7·59 கோடி ரூபாயும் ஆகும். இச்செலவை இரு இராச்சியங்களும் பகிர்ந்துகொள்ளும்.

மலம்புழைத் திட்டம் (சென்னை): பாலக்காட்டிற்கு அருகே மலம்புழை ஆற்றில் 60 அடி உயரமுள்ள கல்லணை ஒன்றைக் கட்டி, 20 மைல் நீளமுள்ள கால்வாயும் வெட்டி, பாலக்காடு தாலுகாவில் 40,000 ஏக்கருக்கு இரண்டாம் போகத்திற்கும், 13,000 ஏக்கருக்கு மூன்றாம் போகத்திற்கும் பாசன வசதி யளிக்கப்படும். செலவு 3.8 கோடி ரூபாய். இது 1954-ல் முடிவடையும்.

மணிமுத்தாற்றுத் திட்டம் (சென்னை): திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணியின் உபநதியான மணிமுத்தாற்றில் 145 அடி உயரமுள்ள அணை கட்டிச் சுமார் 30 மைல் நீளமுள்ள கால்வாயும் வெட்டிச் சுமார் ஓர் இலட்சத்து மூவாயிரம் ஏக்கர் பாசனவசதி அளிக்கப்படும். செலவு 3.98 கோடி ரூபாய்.

மோயாற்றுத் திட்டம் (சென்னை) : இதில் பைக்காரா மின்னாக்க நிலையத்திற்கு ஏழு மைல் கீழே -