பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆற்றுப் பொறியியல்

470

ஆற்றுப் பொறியியல்

நீர் அதில் பாய்ந்து, வண்டலைப் படிவித்து அதைத் தூற்றிவிடுமாறு செய்யலாம். ரவி நதியின் போக்கை இவ்வாறு குறுக்கு வழிகளாலும், கிளைமேடுகளாலும் மாற்றியமைத்தார்கள்.

பாயும் ஆற்றின் குறுக்கே அணை கட்டும்போது அதன் இரு கரைகளிலும் கட்டடம் கட்டத் தொடங்கி, அந்த இரு பகுதிகளையும் கட்டிக்கொண்டே வந்து, இடைவெளியைச் சிறிதாக்கிக் கடைசியாக இந்த இடை வெளியை மூடுகிறார்கள். இவ்வாறு செய்யும்போது இடைவெளி குறுகலாக உள்ளபோது அணையின் மேற் புறத்திலுள்ள நீர் அடைபட்டு, வெகு விரைவாக இடை வெளியில் பாய்ந்து, அதன் அடித்தரையை அரித்து அணைக்கே சேதம் விளைவித்துவிடும். இவ்வாறு நேரா மல் அணையின் இடைவெளியில் பாயும் நீரை வேறொரு பாதையில் செலுத்தி இதைத் தவிர்க்கலாம். அணையி னருகே ஆற்றடியை உறுதிப் படுத்தி, அதில் தேய்வு நேராமல் தடுப்பது இன்னும் நல்ல முறையாகும். இடைவெளி குறிப்பிட்ட அளவை அடைந்ததும், அதில் மணல் மூட்டைகள் முதலியவற்றை ஒரு தூம்பு போல் அமைத்து, இது நீர்மட்டத்திற்கு மேல் உள்ள வாறு செய்து, பிறகு அணை கட்டும் வேலையைத் தொடர்ந்து செய்யலாம்.

ஆற்றின் போக்கை மாற்றியமைத்து, அதைப் போக்குவரத்திற்கு ஏற்றதாகச் செய்யும் முறைகளும் வழக்கத்தில் உள்ளன. இம்முறையில் ஆற்றின் ஆழத்தை அதிகமாக்கி, அதன் போக்கைச் சீராக்க வேண்டும். நீரோட்டத்தின் அகலத்தைக் குறைத்து இதைச் செய்யலாம். ஆற்றின் கரைகளில் கிளை மேடு களையும் சுவர்களையும் அமைத்து அதை இவ்வாறு திருத்தலாம். இச் சுவர்களுக்கும் மேடுகளுக்கும் இடை யிலுள்ள பகுதிகளில் காலப்போக்கில் வண்டல் படிந்து, ஆற்றின் அகலம் நிலையாகக் குறைந்துவிடும். இவ்வாறு செய்யும்போது ஆற்றின் அகலத்தைக் குறைப்பதால் அதன் நீர்மட்டம் உயர்ந்து, வெள்ளம் தோன்றாமலும், அதன் வேகம் அதிகமாகாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆற்றொழுக்கு அதிகமாக மாறாத அதன் கீழ்ப் பகுதிகளுக்கே இத்தகைய முறைகள் ஏற்றவை. கால்வாய்களிலும் ஆறுகளிலும் தூர் எடுக்கும் முறை யும், அவற்றின் போக்குவரத்து வசதிகளை அதிகமாக்கு கிறது (பார்க்க: தூர் எடுத்தல்). விரைவோட்டங்கள் கொண்ட ஆற்றில் போக்குவரத்து வசதிகள் செய்ய, இவை உள்ள இடங்களில் தூம்புகளையும் அடைப்புக் களையும் அமைப்பதுண்டு.

ஆற்றின் ஆழத்தை அதிகமாக்கி அதன் அகலத்தைக் குறைப்பதால் அதன் கால்வாய்களில் படியும் வண்டலைக் குறைக்கலாம்.

ஆற்றின் அகலத்தைக் குறைக்கும் வழி

இதை நோக்கமாகக் கொண்டும் ஆற்றின் அகலத்தைக் குறைக்கும் வேலைகள் செய்யப் படுவதுண்டு. ஆற்றின் ஒழுக்குக் குறைவான காலத்தி லும் போக்குவரத்து வசதிகளை அளிக்க, அதன் நடுவில் மட்டும் ஆழமான கால்வாயை அமைத்து, அதில் ஆழம் அதிகமாக உள்ளவாறு செய்யலாம். இம்முறை ரோன், ரைன் ஆகிய ஐரோப்பிய ஆறுகளில் கையாளப்படுகிறது.

நதிமுகத்துவார வேலைகள்: கடலுக்குக் கொண்டு செல்லும் சிறு நதிமுகத்துவாரங்களின் கரை யோர நீரோட்டங்கள் மணலையும் கூழாங்கற்களையும் கடத்திவந்து முகத்துவாரத்தையே அடைத்துவிடக் கூடும். இதிலுள்ள சிறு இடைவெளிகளில் நீர் கடலை அடையும். அல்லது ஆறு கடலை அடையும் இடமே இத னால் மாறி அதன்போக்குப் பாதிக்கப்படலாம். இத்த கைய ஆறுகளில் இதனால் போக்குவரத்துத் தடைப் படும்.நதியின் முகத்துவாரத்தின் இருபுறங்களிலும் இரு செய்கரைகளை (Jetties) வளைவாக அமைத்து, முகத் துவாரத்தில் படியும் பொருள்களின் மேல் நீரோட்டத் தைச் செலுத்தி அத்தடையை நீக்கலாம். ஏற்றவற்றங்க ளால் பாதிக்கப்படும் ஆறுகளில் அவை தடைப்படாத வகையில் இச் செய்கரைகளை அமைக்கவேண்டும்.

கழிமுகத்தீவுகளை அமைத்துப் பல கால்வாய்களின் வழியே கடலை அடையும் ஆற்றின் நீரிலுள்ள வண்ட லும் மணலும் சிறிது தூரத்தில் நீண்ட அணைகள் போன்ற தடைகளை (Bars) அமைக்கும். போக்குவரத் திற்குத் தடையாகும் இப்படிவுகளை நீக்க,ஆற்றின் கால் வாய்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து. அவற்றின் இரு கரைகளிலும் கடலில் சிறிது தூரம் வரை இணையான செய்கரைகளைக்கட்டி, அதன்முன் தோன்றும் படிவு களைக் கரைக்கலாம். கரையோர நீரோட்டங்கள் கால் வாயிலிருந்து படியும் பொருள்களை அடித்துச் செல்லும் இடங்களுக்கு இம்முறை ஏற்றது. ஆனால் காலப்போக் கில் கழிமுகத்தீவு வளர்ந்து இச்செய்கரைகளின் பயனைக் குறைத்துவிடும். ஆற்றுநீர் பல கால்வாய்களில் செல்வதைத் தடுத்துக் கட்டுக்கரைகள் கொண்ட ஒரே கால்வாயின் வழியே கடலை அடையுமாறு செய்யும் முறையும் ஓரளவு பயனளிக்கிறது. ஆனால் இதனால் நிலையான பயன் இல்லை. கால்வாயில் அடிக்கடி தூர் எடுத்து, அதன் ஆழம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஐரோப்பாவிலுள்ள டான்யூபிலும், அமெரிக்காவிலுள்ள மிசிசிப்பியிலும் இத்தகைய செய் கரைகள் அமைத்துப்போக்குவரத்து வசதி குறையாமல் பாதுகாக்கிறார்கள்.

ஏற்றவற்ற ஆறுகளில் போக்குவரத்து: கடலிலிருந்து உள்ளே பாயும் வெள்ளம் கடலின் ஏற்றம் எனப்படும். இது ஆழங்குறைவான நீரையோ கரை யையோ அடைந்து மேலெழுகிறது. புனல்போன்ற வடிவுள்ள அகன்ற கழிமுகத்தில் (Estuary) இவ்விளைவு அதிகமாக நேரும். ஓர் ஆற்றில் கடலின் ஏற்றம் நிகழும்போது அதில் உள்ள வளைவுகளும் மணல் திட்டுக் களும் அதைத் தடை செய்தால், நீரோட்டம் செங்குத் தாக மேலெழுந்து, நீர்மட்டத்தில் திடீரென மாறுதலைத் தோற்றுவிக்கும். போக்குவரத்திற்குப் பெருந்தடை யான இவ்விளைவு ஒரு பெரிய அலைபோல் பாய்வதால் அலையேற்றம் (Bore) எனப்படும். ஹுக்ளி நதியில் இத்தகைய அலையேற்றங்கள் மிகச் சாதாரணமாகத் தோன்றும். ஆற்றிலுள்ள தடைகளை நீக்கியும், அதன் போக்கைச் சீராக்கியும் இவற்றைக் குறைக்கலாம். ஏற்றவற்ற ஆறுகளின் போக்கை மாற்றவோ, ஆழ மாக்கவோ, மற்ற ஆறுகளில் கையாளப்படும் முறை களையே பயன்படுத்தலாம். தூர் எடுக்கும் முறையையும் கையாளலாம். ஏற்றவற்றங்கள் நதியின் பாதையிலுள்ள வண்டலை அடித்துச்சென்று பாதையைச் சீராக்குவதால் அவற்றின் போக்கிற்குத் தடைவராத வகையில் இதற்கான அமைப்புக்களைக் கட்டவேண்டும்.