பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/535

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆஸ்திரேலியா

487

ஆஸ்திரேலியா

பெரும்பிரிவுத் தொடர்களுக்கு அடங்கிய தென்கிழக்குப் பிரதேசத்தில் கோதுமை விளைகிறது. இங்கு மழை சு.25 அங்.; நியூ சவுத் வேல்ஸிலும், விக்டோரியாவிலுமுள்ள கீழ் மரி ஆற்றுப் பிரதேசத்திலும், தென் ஆஸ்திரேலியாவிலும் கூடக் கோதுமை பயிராகிறது; மேற்கு ஆஸ்திரேலியாவிலும் சிறிது கோதுமை விளைகிறது. கால்நடைகளுக்குத் தீவனத்திற்காக ஓட் பயிரிடப் படுகிறது. தென் குவீன்ஸ்லாந்தின் கரைப்பிரதேசத்திலும் வட நியூ சவுத்வேல்ஸிலும் மக்காச் சோளம் பயிராகிறது. தென் குவீன்ஸ்லாந்தின் குறுகிய கரைப் பிரதேசத்தில் கரும்பு சாகுபடியாகிறது: இங்கு மழை அதிகம்; வெப்பநிலை 70° பா.க்கு மேற்பட்டிருக்கிறது. வெள்ளைத் தொழிலாளிகளை நம்பியே பயிர்த்தொழில் நடைபெறுகிறது. கண்டத்திலுள்ள மொத்தத் திராட்சைத் தோட்டங்களில் பாதி தென் ஆஸ்திரேலியாவில் இருக்கிறது. நீர் வசதி மிகுந்த ஆஸ்திரேலியாவில் பலவகைப் பழங்கள் உற்பத்தியாகின்றன. வடகுவீன்ஸ்லாந்தில் மாம்பழங்களும், தென் பகுதியில் ஆப்பிள், பேரிக்காய், எலுமிச்சைச் சாதிப் பழங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

கால்நடை வளர்ப்பு: ஆடுமாடு மேய்த்தல் ஆஸ்திரேலியாவின் மிகப் பழைய தொழில். விவசாய வருமானத்தைக் காட்டிலும் (1,510 இலட்சப் பவுன் மதிப்பு) மேய்ச்சல் நிலவருமானமே (3,350 இலட்சம் பவுன் மதிப்பு) மிகுதியாகவுள்ளது.

மாடுகள்
(10 இலட்சம்)

ஆடுகள்
(10 இலட்சம் )

நியூ சவுத் வேல்ஸ் 3.44 53.3
விக்டோரியா 2.23 19.2
குவீன்ஸ்லாந்து 6.31 17.2
தென் ஆஸ்திரேலியா .46 9.5
மேற்கு ஆஸ்திரேலியா .87 10.9
________ ________
மொத்தம் (வடஆஸ்திரே
லியாவும், டாஸ்மேனி
யாவும் உள்பட)
14.37 110.7
________ ________

தென்விக்டோரியாவிலும், நியூ சவுத்வேல்ஸ், குவீன்ஸ்லாந்து எல்லையிலும் மிக அதிகமாகக் கால்நடைகள் காணப்படுகின்றன. வடக்கேயுள்ள சவானா புல்வெளிகளில் மாமிசத்திற்காக வளர்க்கப்படும் கால்நடைகளே மிகுதியாக உள்ளன. நீர் வசதியுள்ள கீழைக்கரையிலும் பெரிய நகரங்களுக்கருகிலும் உள்ள புல்வெளிப் பிரதேசங்களில் பால் பண்ணைக்காக மாடுகள் வளர்க்கப்படுகின்றன. உலகத்திலேயே மிக அதிகமான ஆடுகள் இக் கண்டத்தில் உள்ளன ; இங்கு உற்பத்தி செய்யப்படுகிற ஆட்டு ரோமம் அளவிலும் தரத்திலும் உலகிலேயே முதலிடம் வகிக்கிறது. இவ்வாடுகள் பெரும்பாலும் தென்கிழக்கே நியூ சவுத் வேல்ஸிலும் விக்டோரியாவிலும் 20"-30" சம மாரிக் கோடுகளுக்கு இடையே காணப்படுகின்றன. மெரினோ வகை ஆடுகளே இங்கு அதிகம். விவசாயப் பண்ணைகளில் குதிரைகள் வளர்க்கப்படுகின்றன ; ஆயினும் இவற்றின் எண்ணிக்கை 1918-ல் 25 இலட்சமாயிருந்து, 1950-ல் 10 இலட்சமாகக் குறைந்துவிட்டது. இதற்கு விவசாயம் எந்திரங்களைக் கொண்டு நடைபெறுவதும், மோட்டார் போக்குவரத்து மிகுந்துவிட்டதுமே காரணங்கள். வெண்ணெய் உற்பத்தி 1,68,432 டன் ; பாலடைக் கட்டி 44,823 டன்; ஆட்டு ரோமம் 11,079 இலட்சம் டன்; மாமிசம் 10·5 இலட்சம் டன்.

மீன் பண்ணைகள் : மரி காட் (Murray Cod) என்னும் மீன் பிடித்தலும், அயன மண்டலக் கடல்களில் முத்துக் குளித்தலும் தவிர மீன் பண்ணைத் தொழில் அவ்வளவு முக்கியமானதன்று.

தாதுப் பொருள்கள்: மேற்குப் பீடபூமியின் பண்டைய பாறைகளிலும் தென் கிழக்கேயுள்ள மலைகளிலும் தாதுப் படிவங்கள் உள்ளன.

இலட்சம் பவுன்
பெறுமானம்

தங்கம் 108.11
வெள்ளியும் காரீயமும் 202.71
செம்பு 20.76
வெள்ளீயம் 10.81
நாகம் 53.93
நிலக்கரி 188.05

முன்பு தங்கம் ஒன்றே இங்குக் கிடைக்கும் முக்கியத் தாதுப் பொருளாயிருந்தது. இப்போது வெள்ளியும் காரீயமும் அதிக முக்கியமாகிவிட்டன. மேற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள கால்கூர்லி, கூல்கார்டி தங்கக் கனிகளில் தங்கத்திற் பெரும்பகுதி தற்பொழுது கிடைக்கிறது. உலகிலேயே தங்கம் கிடைக்கும் நாடுகளில் ஆஸ்திரேலியா ஐந்தாவது. புரோக்கன் குன்று (Broken Hill) படிவுகளில் வெள்ளி, காரீயம், நாகம் ஆகியவை அதிகமாகக் கிடைக்கின்றன. கிளான்கரி, மார்கன் குன்றுக் கனிகளில் இன்றும் செம்பு கிடைக்கிறது. நியூ சவுத் வேல்ஸிலுள்ள நியூ இங்கிலாந்து பகுதியில் வெள்ளீயம் அதிகமாகக் கிடைக்கிறது. ஸ்பென்சர் வளைகுடாவிற்கு மேற்கேயுள்ள ஒரு குன்றில் நல்ல இரும்புத்தாது கிடைக்கிறது. தென் அர்த்த கோளத்தில் உள்ள மற்றெல்லா நாடுகளையும்விட ஆஸ்திரேலியாவிலேயே அதிகமாக நிலக்கரி கிடைக்கிறது. நியூ சவுத் வேல்ஸில் உள்ள சிட்னி நகரின் சுற்றுப்பிரதேசத்தில் பெரிய நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளன ; இந்நாட்டு உற்பத்தியில் 80% இங்கேயே கிடைக்கிறது. குவீன்ஸ்லாந்திலுள்ள இப்ஸ்விச் பிரதேசம் அடுத்தபடியாக நிலக்கரி யளிக்கிறது. மட்டரகமான கரி மெல்போர்னருகில் ஏராளமாகக் கிடைக்கிறது. ஆண்டுதோறும் 141 இலட்சம் டன் நிலக்கரி உற்பத்தியாகிறது.

கைத்தொழில்கள்: கோதுமை, ஆட்டுரோமம், பழங்கள் முதலியவற்றுடன் தொடர்புள்ள கைத்தொழில்களும் மோட்டார் டயர்த் தொழிலும் நடைபெறுகின்றன. நியூ சவுத்வேல்ஸும் விக்டோரியாவும் முக்கியமான கைத்தொழில் இராச்சியங்கள். நியூ சவுத் வேல்ஸ் நிலக்கரிக் கனிகளைச் சுற்றிக் கனக் கைத்தொழில் நடைபெறுகிறது; நியூகாசில், கெம்பிலா துறைமுகம், லித்கோ ஆகியவை முக்கியமான கைத்தொழில் கேந்திரங்கள். தேனிரும்பு உற்பத்தி 10·01 இலட்சம் டன்; எஃகு 12.46 இலட்சம் டன். விக்டோரியா நெசவுத் தொழிலில் முதலிடம் வகிக்கிறது; பெரும்பாலும் கம்பளி நெசவு நடைபெறுகிறது.

போக்குவரத்து: மொத்தம் 5 இலட்சம் மைல் சாலைகளும், 27,053 மைல் ரெயில் பாதைகளும் உள்ளன. ஒவ்வோர் இராச்சியத்திலும் ரெயில் பாதைகள் தலை நகரத்தில் வந்து சேர்கின்றன. ரெயில் பாதைகளின் அகலம் வெவ்வேறிடங்களில் வேறுபட்டு இருப்பதால் ரெயில்வேக்களை ஒன்றுபடுத்த முடியவில்லை. ஆண்டிற்கு ஆறு மாதம் நீர் குறைந்துவிடுவதால் ஆறுகளில் உள்நாட்டுக் கப்பல் போக்குவரத்து அதிகம் நடைபெறுவதில்லை. முக்கியமான இடங்கள்