பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆஸ்திரேலியா

488

ஆஸ்திரேலியா

கரையோரமாயிருப்பதால், கரையோரக் கப்பல் போக்குவரத்து அதிகம். கண்டம் மிகப் பெரிதாகவும் பல பகுதிகளில் மக்கள் தொகை குறைவாகவும் இருப்பதால் தூரப் பிரயாணங்களுக்கு விமானங்களே மிகுதியாக உபயோகப்படுகின்றன. முறையான விமானப் பாதைகளின் நீளம் 48.999 மைல்.

ஆஸ்திரேலியாவின் ஆடுமேய்த்தல்
உதவி : ஆஸ்திரேலியா ஹை கமிஷ்னர், புதுதில்லி.

வியாபாரம்: சாதாரணமாக எற்றுமதி (6.137 இலட்சம் பவுன் மதிப்பு) இறக்குமதியைவிட (5,881.2 இலட்சம் பவுன் மதிப்பு) அதிகம். ஏற்றுமதியில் பாதி ஆட்டுரோமம். கோதுமை, கோதுமை மாவு, வெண்ணெய், மாமிசம், தோல் ஆகியவை மற்ற ஏற்றுமதிகள். நூல் ஜவுளிகளும், மோட்டார் வண்டிகளும், பெட்ரோலியமும் முக்கியமான இறக்குமதிகள். ஆஸ்திரேனிய எற்றுமதியில் 40% பிரிட்டனுக்கே செல்லுகின்றது ; இறக்குமதியில் 50% அங்கிருந்தே வருகிறது.

முக்கியமான நகரங்கள் (மக்: 1950-ல்) : சிட்னி 15.84 இலட்சம், மெல்போர்ன் 13·26 இலட்சம். பிரிஸ்பேன் 4.40 இலட்சம், அடிலேடு 4.30 இலட்சம், பெர்த் 3.09 இலட்சம். இவை இராச்சியத் தரைநகரங்கள். கூட்டாட்சித் தலைநகர் கான்பர்ரா. ஏ.வ

தாவரங்கள் : ஆஸ்திரேலியாவில் பெருங்காடுகள் இருக்கின்றன. அங்கு முக்கியமான மரங்கள் யூக்கலிப்டஸ் என்னும் நீலக் குங்கிலிய மரங்கள். அவை ஆஸ்திரேலியாவிற்கே உரியவை. இப்போது பல நாடுகளில் வளர்க்கப்படுகின்றன. ஜரா என்னும் ஒரு வகை யூக்கலிப்படஸ் உலகத்து வெட்டு மரங்களில் சிறந்ததொன்று. நீரில்லாத பாலைவனங்களில் குள்ளமான பூதப் பிசின் மரம் (Ghost Gum) வளர்கிறது. இங்குள்ள பாலைநிலத்துச் செடிகளில் பூவிதழ்கள் வர்ணங்கொடுத்த தோல் போலத் தோன்றும். இயற்கையாகவே நீர் குறைவாகிச் செதில்போல உலர்ந்து இருப்பதால் இவைகளைக் கொய்து, காகிதத்தால் செய்த பூவை வைத்திருப்பது போல நெடுநாளைக்கு வைத்திருக்கலாம். இங்குள்ள இன்னொரு செடி உப்புப் புதர் (Salt Bush) என்பது. இதன் இலைகளின் மேல் சாம்பல் நிறமான உப்புப் பூத்திருக்கும். மழை பெய்யாத வறட்சிக் காலங்களில் ஆடுகள் பல மாத காலம் இதையே தின்று வாழும். நீரும் புல்லும் நிரம்ப அகப்படும் காலத்திலும் இந்த உப்புப் புதர் ஆட்டுக்கு நல்ல உணவு எனக் கருதப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் பலவகைப் புல் விளைகின்றன. குவீன்ஸ்லாந்திலுள்ள மிச்சல் புல் என்பது மாடுகளுக்கு மிக உயர்ந்த உணவு.

விலங்குகள் : உலகத்தின் மற்றப் பாகங்களிலிருக்கும் விலங்குகளுக்கும் இவற்றிற்கும் புவி இடைக் காலத்திலிருந்து (Mesozoic) வேறுபாடிருப்பதாகத் தெரிகிறது. அக்காலத்துக்குப் பிறகும் தென் ஆசியாவோடும் தென் அமெரிக்காவோடும் ஆஸ்திரேலியாவுக்கு நிலத் தொடர்பு இருந்திருக்கலாம் என்று கருத இடமுண்டு. ஆயினும் ஆஸ்திரேலிய விலங்குகள் இடைப் பிராணியுகத்தவைகளாகவே காண்கின்றன. உலகத்தில் மற்றெல்லாப் பாகங்களிலும் உள்ள பூனையும் பன்றியும் இங்கு முன்பு இருந்ததில்லை. நிலப்பாலூட்டிகளில் ஒருவகை நாய், சிலவகை எலிகள், வௌவால்கள் தவிர மற்றவையெல்லாம் பலவிதமான மிகுந்த சிறப்பியல்புகளுள்ள பைப் பாலூட்டிகளும் (Marsupials) இரண்டு வியக்கத்தக்க மானோட்டிரீம்களும் (Mono-treme) ஆகும். ஆர்னிதொரிங்கஸ் (Ornithorhynchus), எக்கிட்னா (Echidna) என்னும் இரண்டு மானோட்டிரீம்களும் இப்போதுள்ள பாலூட்டிகளிலெல்லாம் மிகப் பழமையானவை. பை விலங்குகளில் முக்கிய