பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆஸ்திரேலியா

490

ஆஸ்திரேலியா

பண்பாடுகள் பெரும்பாலும் தோட்டம் போடுதல்,பன்றி வளர்த்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் பல வேறுபாடுகள் உடையனவாக இருக்கின்றன. அதற்குக் காரணம் அத் தொழில்கள் பலவிதமான நிலைமைகளில் செய்யப்பட்டமையும், வேறு மக்களின் குடியேற்றம், வியாபாரம், போர்

ஆஸ்திரேலிய ஆதிக்குடிகளின் நடனம்
உதவி : ஆஸ்திரேலிய ஹை கமீஷனர், புதுடெல்லி.

இவை வாயிலாகத் தொடர்பு டஏற்பட்டமையுமாம். அதனால் நியூகினியும் மெலனீசியாவும் பலவிதமான பண்பாடுகள் சேர்ந்தவை என்பது புலனாகும்.

ஆதிக்குடிகள் கரிய பழுப்பு நிறமுடையவர்கள். தென் இந்திய திராவிடர்களுக்கு முற்பட்ட மலைச்சாதியாரைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகின்றனர். இவர்கள் அறிவு குறைந்தவர்கள் என்று எண்ணிவந்த கருத்துக்கு ஆதாரமில்லை. மூளையின் பருமனும் அறிவுத் திறனும் ஐரோப்பியர்களிடத்தில் காணும் வீச்சளவிலேயே காணப்படுகின்றன.

அவர்கள் வாழ்க்கை வசதிகளில் எளிமையான பண்பாடுடையவர்கள்; ஈட்டி, வேல், வளரித்தடி, கேடயம், கற்கோடரி, கற்கத்தி, வலை, கூடை முதலியவற்றைக் கொண்டு காட்டில் உணவு தேடியும் வேட்டையாடியும் பிழைத்து வருகிறார்கள். இயற்கையைப் பற்றி அவர்களுக்குள்ள அறிவு அதிகமாகும்.

அவர்களுடைய சமூக அமைப்பு அவர்களுடைய வாழ்க்கை முறைக்குத் தக்கதாக இருக்கிறது. சமூகத்தின் அடிநிலை வேட்டையாடும் சிறு குழுவாகும். அதில் உடன் பிறந்தார் குடும்பங்களும் அவர்களுடைய நில புலன்களும் அடங்கும். இத்தகைய சிறு குழுவினர் வாரிசு வாயிலாகவும் மணம் வாயிலாகவும் உறவு உடையவர்களாகிப் பெருங் குழுவாவர் (Tribe). ஒரு குழுவினரிடையே உள்ள பழக்க வழக்கங்களும் கருத்துக்களும் மொழியும் பொதுவாகக் காணப்படும். ஒவ்வொரு குழுவும் பல பிரிவுகள் சேர்ந்ததாயிருக்கும். ஒவ்வொரு ஆண்மகனும் தீட்சை பெறுவான். மக்கள் மூத்தவர்கள் சொற்படி கேட்பார்கள். அதற்குத் தீட்சை துணைசெய்யும்.

அவர்களுடைய மதத்தில் முற்பிறப்பு, நித்தியக் 'கனவு' என்னும் கொள்கைகள் காணப்படுகின்றன. மரணம் ஏற்படுவது மந்திரவாதத்தால் என்றும், அதை மந்திரவாதிகள் அல்லது உயர்ந்தோர் அறிவார் என்றும் கருதுகிறார்கள். மந்திரவாதிகள் மனோவசியம் முதலிய பல வித்தைகளை அறிந்தவர்கள் என்று நம்புகிறார்கள்.

ஐரோப்பியர்கள் 1788-ல் ஆஸ்திரேலியாவுக்கு வந்து குடியேறிய காலத்தில் இந்த ஆதிக்குடிகள் தொகை 3,50,000. 1952-ல் சுத்த ஆதிக்குடிகள் 60 ஆயிரம்; கலப்பு ஆதிக்குடிகள் 30 ஆயிரம். இனி அவர்கள் தொகை குறையாது என்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. ஏ.பி.எ.

வரலாறு: 17ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாக் கண்டம் என ஒன்று இருப்பதை அறிந்து, ஐரோப்பிய நாடுகள் அதைக் கண்டுபிடிக்க முயன்றன. மாலுமி டாரிஸ் (Torres) நியூகினிக்கும் ஆஸ்திரேலி