பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/556

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இசை

507

இசை

னிசையே. ஒவ்வொரு மனிதனும் ஆயிரக்கணக்கான உணர்ச்சிகளும் அவற்றின் பலதிறப்பட்ட ஆழங்களும் நுட்பங்களும் தொகுத்துவைத்த ஒரு பிண்டமே. இக்காரணத்தினால்தான் இந்திய உள்ளத்தில் இசையின் இராகமுறை இவ்வளவு ஆழமாக வேரூன்றியிருக்கிறது.

இராகத்தைச் சுவைக்க மனிதனைப் புரிந்து கொள்ள வேண்டும். அன்றியும், வடஇந்தியாவில் இராகம் என்றும் இராகினி என்றும் இருவகையில் இசை விளங்குகிறது. மனிதனுடைய இருவகைக் குணங்களே இவ்விருவகைகளுக்குக் காரணம் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இது படைப்பின் அடிப்படையான உண்மை; பார்வதியும் சிவபிரானும் கூடி அர்த்தநாரீசுவரராக விளங்கும் தத்துவம் இதுவே. இராதாகிருஷ்ணர் கதையினும் இந்தத் தத்துவத்தை நாம் காண்கிறோம். இசையின் இந்த உண்மை இராக, இராகினியாக விளங்குகின்றது. வட இந்தியாவில் சங்கீத வித்வான்களேயன்றி ஓவியக்காரர்கள் கூட இந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு நூற்றுக்கணக்கான ஓவியங்களைத் தீட்டியிருக்கிறார்கள். இராக முறைவாழ்க்கையின் அடிப்படையான ஓர் உண்மையைக் காட்டுகிறது. அந்த உண்மை சத்தியத்தை நாடுகிற எவரையும் ஊக்கி வருகிறது.

மேனாட்டிசை கூட்ட உணர்ச்சியின் பிரசிபிம்பம். பலர் கூடி ஒன்றாகும் கத்துவத்தை அது காட்டுகிறது. இந்தியாவுக்கு வந்து, இந்தியத் தத்துவ சாஸ்திரத்தையும் இசையையும் கற்றுப்போன பைத்தாகரஸ் என்ற மகா ஞானியின் முறையைப் பின்பற்றியே மேல்நாட்டு இசை அளவிலும் பெருமையிலும் வளர்ந்திருக்கிறது. இந்திய இராகங்களை ஒட்டி வளர்ந்தனவாகிய மேளங்கள் சிலவற்றைக் கிரீஸுக்குக் கொண்டுசென்றவர் அவரே; அவற்றைக் கொண்டு கிரகோரியர்கள் பாடினார்கள்; அப்பாடல்களிலிருந்து ஒத்திசை பரிணாமமடைந்தது.

மானிடவருக்கம் பெற்றிருக்கும் பெருங்கொடை இசையாகும். அதன் வழியாகத் தெய்வீகக் கலை உலகில் வளர்கின்றது. மானிடன் உய்வதற்கு அருளப்பட்ட தெய்வக்கொடை இது.

இசைவகை: இசை மூன்று முக்கியமான பிரிவுகளாகி வளர்ந்திருக்கிறது. இன்னிசை, ஒத்திசை, தொகையிசை (Polyphony) என்பன அவை. சுரங்களைப் பல விதமாகச் சேர்ப்பதால் இசை பிறக்கிறதென்பது யாவரும் அறிந்ததே. ஒற்றைச் சுரங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து இனிமை பயக்கும் முறையில் வந்து இசைக்குக் காரணமாகும்போது அந்த இசையை இன்னிசை என்று கூறுகிறோம். இந்திய நாட்டு இசையில் அந்தச் சுரங்கள் ஏதாவது ஓர் இராகத்தின் சஞ்சாரக் கிரமத்தின்படி வரும். ஆகவே இந்திய நாட்டு இசை இன்னிசை யென்னும் வகையைச் சேர்ந்ததாகும்

இவ்வாறு தனித்தனிச் சுரங்கள் தொடர்ந்து வராமல் ஒத்த சுரங்களின் கார்டுகள் (Chords) ஒன்றையொன்று தொடர்ந்து வருவது ஒத்திசையாகும். ஒத்த சுரங்கள் என்றால் சேர்ந்து ஒலிக்கும்போது இனிமை பயக்கும் இணை, கிளை, நட்பு முதலிய சுரங்கள் என்று இங்கே கொள்ளவேண்டும். கார்டு என்பது இரண்டு அல்லது பல ஒத்த சுரங்களை ஒரே சமயத்தில் ஒலிப்பதால் ஏற்படுவது. ஒரு கார்டிலே ஒத்த சுரங்கள் பல இருக்கும். அவையெல்லாம் சேர்ந்து இன்பம் பயக்கும் இசையாகின்றன. எந்தச் சுரங்களைச் சேர்த்து இனிமை பயக்கும் கார்டுகள் உண்டாக்கலாம் என்று கீர்மானிப்பதில்தான் ஒத்திசையின் சிறப்பு இருக்கிறது. இன்னிசையில் தனித்தனிச் சுரங்கள் ஒன்றையொன்று தொடர்ந்து வருவதுபோல ஒத்திசையில் சுர அடுக்குக்கள் ஒன்றையொன்று தொடர்ந்துவரும். அவைகளிலும் எந்த அடுக்குக்கள் தொடர்ந்து வரவேண்டும் என்பதை நிருணயிக்க வேண்டும். பல விதமான இசைக் கருவிகள் உண்டான பிறகே ஒத்திசை வளர்ச்சியடைந்தது. பொதுவாகக் கூறுமிடத்து, மேல்நாட்டு இசை ஒத்திசையாகும். பாக் (Bach), மோசார்ட் (M zart}, (Wagner) பேதோவன் (Beeth ven). வாக்னர் ஆகிய நால்வரும் இக்காலத்தில் நிலவும் ஒத்திசையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியவர்கள்.

ஒவ்லொரு சுரத்திற்கும் வேறோர் இணைச்சுரத்தைச் சேர்த்து, இரண்டும் ஒரே காலத்தில் ஒலிக்கும்படி செய்வது தொகையிசையாகும். இவ்வாறு செய்யும்போது முதல் இசை தனியாகவும் இணைச் சுரங்களால் உண்டாகும் இசை தனியாகவும் கேட்கும். இவ்வாறு இணைச் சுரங்கள் பலவற்றைச் சேர்த்தால் பல இசைகள் ஒரே சமயத்தில் உண்டாகும். பாலெஸ்ட்ரீனா (Palestrina, 1526-1594) என்னும் இத்தாலிய இசைப்பாட்டாசிரியர் இம் முறையில் சிறந்த பாட்டுக்கள் எழுதியுள்ளார். தொகையீசையில் உள்ள ஒவ்வோர் இசைக்கும் தனி உருவம் உண்டு என்பதைக் கவனிக்க வேண்டும். ஆனால் ஒத்திசையில் இவ்வாறு இராது.

மேளங்கள் (Musical scales) : இவை உருவாவதற்கு இசையுடன் கூடிய ஒலி, சுரம் இசை இடைவெளிகள் முதலியவை அடிப்படையானவை.

இசை ஒலி (Musical sound) என்பது அதிரும் பொருள்களினால் உண்டாக்கப்பட்டுக் காற்றில் அலையாக நம் செவிகளை எட்டும்பொழுது நாம் இன்ப உணர்ச்சியுடன் அனுபவிப்பதாகும். இசைக் கவையில் (Tuning fork) எழும் ஒலியை (Tone) இசையொலி என்று சொல்லலாம். ஆனால் இசைக்கவை கலப்பில்லாமல் நாதத்தைக் கொடுக்கிறது. வீணைத் தந்தியோ அல்லது பிடில் தந்தியோ, கூட்டு நாதத்தை வெளியிடுகிறது. ஆதார சுருதியின் ஒலியைத் தவிர, அனுசுர ஒலியும் இணைந்து நம் செவிக்கு எட்டுகின்றன. சத்தம் செவிக்கு அருவருப்பைக் கொடுக்கும். இசை ஒலியோ சீரான அதிர்வுகளால் இன்பம் தருகிறது.

இசைச் சுரங்கள்: இவற்றில் மூன்று சிறப்பான குணங்களைக் காண்கிறோம். 1. சுருதி : இதில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு வேறுபாடுகள் அதிர்வெண்ணைப் பொறுத்தவை. 2. அழுத்தம் (Intensity): இதற்கு அதிர்வுகளின் வீச்சு (Amplitude) காரணமாகும். அதிர்வுகளின் சக்தி (Energy) காற்றிலே கொஞ்சம் கொஞ்சமாகப் பரவிக் குறைபடுகிறதால், வீச்சுக் குறைவுபட்டு நாதம் கேட்காமல் போகிறது. 3. ஒலிப்பண்பு (Timbre) என்பது குரலுக்கோ இசைக்கருவிகளுக்கோ ஏற்பட்டுள்ள ஒரு தனித் தன்மை யாகும். கண்ணால் பார்க்காமல்கூடப் பிடில், வீணை, குழல், நாகசுரம் என்று அறிந்துகொள்ளச் செய்யும் தனிப்பண்பு ஒலிப்பண்பு என்று கூறப்படுகிறது. ஒருவருடைய குரலுக்கும் மற்றொருவருடைய குரலுக்கும் இதனாலேயே வேறுபாடு தோன்றுகிறது.

இந்தியாவிலும் வேறு பல நாடுகளிலும் சுரங்களை ஏழு என்றே வகுத்திருக்கிறார்கள். மேல்நாட்டு இசையில் அவற்றை C D E F G A B என்று கூறுகிறார்கள். இந்திய இசையில் ஸ ரி க ம ப த நி என்று சொல்லுகிறோம். ஆனால் ஸ, ப என்ற சுரங்களைத் தவிர, மற்றச் சுரங்களான ரி, க, ம, த, நி கோமளமாகவோ, தீவிரமாகவோ மாறுதல் (விக்ருதி) அடை-