பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/568

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இசை

519

இசை

காற்றூதப்படுகிறது. இம் முறையில் தூய சுரங்களைப் பெறலாம். இரண்டாம் வகுப்புக் கருவிகளில் ஓர் ஊதுகுழலிற்கு எதிராக உதடுகளை அசைத்து ஒலி தோற்றுவிக்கப்படுகிறது. இவற்றில் உரத்ததும் மென்மையானதுமான சுரத்தைப் பெறலாம். மூன்றாம் வகுப்புக் கருவிகளில் இரு ஊது குழல்கள் அதிரவைக்கப்படுகின்றன. இவ்வகைக் கருவிகள் மூக்கில் ஒலிப்பது போன்ற காதைத் தொளைக்கும் ஒலியைத் தோற்றுவிக்கும்.

1. பசூன்
2. ஓபோ
3. கிளிரினெட்
4. குழல்

பல்லிய இசையில் உலோகத்தினாலான தொளைக் கருவிகளில் ஒலியே அதிகமாக இருக்கும். எக்காளம் (Trumpet), பிரெஞ்சுக் கொம்பு (French horn), டிராம்போன் (Trombone), டியூபா (Tuba) ஆகியவை இவ்வகையைச் சேர்ந்தவை.

முரசு, ஜாலரா, செண்டை, மணி போன்ற தோற்கருவிகளும் கஞ்சக் கருவிகளும் பல்லிய இசையில் பயன்படுகின்றன. இவை இசைக்குத் தாள அழுத்தத்தைத் தரும். பல்லிய இசையில் பல வேறு இசைக் கருவிகளைப் பயில்வோரது இருப்பிடங்கள் அடுத்த பக்கத்திலுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளன.

பல்லிய இசையில் ஹார்ப், ஆர்கன், பியானோ ஆகிய

1. கொம்பு
2. கார்னெட்
3. டியூபா
4. டிராம்போன்

மூன்று கருவிகளும் பயனாகலாம். ஹார்ப்பின் தந்திகளை விரைவாக

கெட்டில் முரசு

இழுத்து அலை அலையாக வரும் சுரங்களை எழுப்பலாம். மாதாகோயிலுக்கு ஆர்கன் மிகவும் ஏற்ற இசைக் கருவி. இதிலுள்ள குழாய்களில் காற்றை ஊதுவதால் இது ஒலிக்கிறது. ஆனால் இதைப் பியானோவைப் போல் கட்டைகளின் உதவியால் வாசிக்கிறார்கள். மற்றெல்லாக் கருவிகளையும்விட இதை அதிகமான ஸ்தாயிகளில் வாசிக்கலாம். பாக் இயற்றிய பக்திப் பாடல்களை இதில் கேட்பது ஒரு சிறந்த அனுபவமாகும்.

பலதிறப்பட்ட இசை வகைகளையும் வாசிக்க மிகவும் ஏற்ற கருவி பியானோ. பாட்டாசிரியர்களுக்கும் வீடுகளுக்கும் இது ஏற்றது.

மேனாட்டு இசை 12 சம அளவுள்ள அரைச் சுரங்களாகப் பிரிக்கப்பட்ட மேளங்களைக் கொண்டது. இவற்றுள் ஏழு சுரங்கள் அடிப்படையானவை. மேனாட்டு டயடானிக் மேளம் சங்கராபரண மேளமான 1+1+½+1+1 +1+½ என்ற படிகளும், கீர்வாணி மேளமான 1+1+1+1+1+1}+1 என்ற படிகளும் கொண்டது. இவை முறையே மேஜர் மேளம் என்றும், மைனர் மேளம் என்றும் கூறப்படும். நடைமுறையில் மைனர் மேளத்தில் 6ஆவது, 7ஆவது சுரங்களில் சிறிது வேறுபடும் மேளங்கள் உள்ளன. மேஜர் மேளத்தையும் மைனர் மேளத்தையும் 12 மேஜர் மேளங்களாகவும், 12 மைனர் மேளங்களாகவும் மாற்றியமைத்து 24 மேளங்களைப் பெறலாம். ஒரு சுரத்துடன் அரைச் சுரத்தைச் சேர்த்துத் தீவிரத்தையும் (Sharp), அரைச்சுரத்தைக் குறைத்துக் கோமளத்தையும் (Flat) பெறலாம்.

ஹார்ப்

இசை மேளத்தின் ஏழு படிகளைக் கொண்டு மூன்று அல்லது அதற்கும் மேலான சுரத்தொகுதிகளை அமைக்கலாம். இவை கார்டுகள் எனப்படும். இவ்வொத்திசைத் தொகுதிகளின் உதவியால் இசையின் இனிமையை அதிகமாக்கலாம். இவை இசைக் குறியீட்டு முறையில் ஐந்து வரிகளில் குறிக்கப்படுகின்றன. (பார்க்க: இசைக் குறியிடல்). இத்தொகுதிகளில் ஷட்ஜம் (Tonica) பஞ்சமம் (Dominant) ஆகிய இரண்டும் முக்கியமானவை. இவை முறையே முதற் சுரத்தையும் ஐந்தாம் சுரத்தையும் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படுகின்றன. முக்கியக் கார்டுகளைத் தவிர, மற்றச் சுரங்களைக் கொண்டு வேறு கார்டுகள் அமைக்கப்படும். ஆகையால் மேளத்தின் ஒவ்வொரு சுரமும், அதற்கேற்ற கார்டுகளுடன் ஒத்திசைக்கும்படி செய்யலாம். கார்டுகளின் தொடர்ச்சி, சுரங்களின் இரட்டிப்பு முதலியவை அனைத்தும் ஒத்திசை விதிகளை ஒட்டி இருக்கும். ஒத்திசை ஒரு மேளத்திலிருந்து மற்றொன்றிற்கு மாறுவது மாடுலேஷன் (Modulation) எனப்படும். இரு மேளங்களுள் தொடர்பிருந்தால்தான் அவற்றினிடையே சுருதி மாற்றம் செய்ய முடியும். இரு மேளங்களின் வேறுபாடு பஞ்சமமாக இருந்தால், அவை நெருங்கிய தொடர்புள்ளவைகளாக இருக்கும். ஒத்திசை விதிகளைவிடச் சுருதி மாற்ற விதிகள் சிக்கலானவை. ஒத்திசையாக் கலையையும் சுருதி மாற்றத்தையும் ஒருவர் திறம்படக் கற்றபின் இன்னிசைகளின் தொகுப்பை அறியவேண்டும். இது எதிர்த்தானம் (Countervoint) எனப்படும். இணையான பஞ்சமங்களையும் அஷ்டமங்களையும் தவிர்த்தே இசை இயற்றவேண்டும். ஓர் உருப்படியைக் கலையழகு நிறைந்ததாகச் செய்ய இசையை இயற்றி, அதை ஒத்திசையாக்கினால் மட்டும் போதாது. அதைச் சமச்சீர் வடிவுள்ளதாகவும் செய்ய வேண்டும். உருப்படி வகைகளில் முக்கியமானவைகளுள்