பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/569

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இசை

520

இசை

சொனாட்டா வகையும் (Sonata form) ஒன்று. இது சாதாரணமாக மூன்றங்க நாடகம். இப்பெயரால் அழைக்கப்படும் உருப்படிகளைத் தவிர, நான்கு கலைஞர்கள் வாசிக்கும் உருப்படிகளும் கோஷ்டி கானங்களும் இதே வடிவுள்ளவை. இவற்றைத்தவிர மாற்ற வடிவு(Variation form), பியூஜ் வடிவு முதலிய உருப்படிகளும் உண்டு.

மேல்நாட்டுப் பல்லிய இசையரங்கு அமைப்பு

மேனாட்டு இசை முறையில் வழங்கும் தாளங்கள் ஓர் ஆவர்த்தம் (Bar) 2, 3, 4 அல்லது 6 அடிகள் கொண்டவை. இடையில் ஒரு தாள அமைப்பிலிருந்து வேறொன்றிற்கு மாறும் உருப்படிகளும் உண்டு. (முக்கிய இசைக்கருவிகளுக்குத் தனிக் கட்டுரைகள் உண்டு). தி. லி.


பிறநாட்டு இசையும் இந்திய இசையும்

இந்தியாவின் வரலாற்றில் எவ்வளவு பழங்காலத்திலிருந்து பார்த்தாலும் இந்திய இசை நன்றாக முன்னேறிய நிலையில் இருக்கக் காண்கிறோம். மனித வரலாற்றைப்பற்றிய உண்மைகள் அதிகமாகத் தெரியத்தெரிய இந்திய நாடே இசையின் தாயகமாகவும், நாகரிகத்தின் பிறப்பிடமாகவும் விளங்கியது என்ற உண்மை தெளிவாகிறது.

இந்தியாவின் விஞ்ஞான அறிவு வளர்ச்சியையும் கலை வளர்ச்சியையும் ஆராயும்போது தெளிவான உண்மைகள் கிடைக்காமல் தடை செய்ய ஒரு காரணம் உள்ளது. வழிவழியாக இந்நாட்டின்மேல் படையெடுத்து வந்தவர்களும், சீர்திருத்தவாதிகளும் இந்தியப் பண்பாட்டின் அபிவிருத்திகளுக்குத் தாமே காரணம் என ஒவ்வொருவரும் நிலைநாட்ட முயன்றனர். ஆனால் விருப்பு வெறுப்பின்றி இதை ஆராய்ந்தால், இவர்கள் அனைவரும் தொன்றுதொட்டு நாட்டின் பரம்பரைச் சொத்தாக வந்த அறிவையே மீண்டும் கண்டுபிடித்துத் தந்தார்களே ஒழியப் புதிதாக ஒன்றையும் ஆக்கிவிடவில்லை என்ற முடிவிற்கு வருவோம்.

சாதாரணமாக பாடகா தொகுதி 000 கான்ட்ராபாஸ் ஹார்ப் கிளாரினெட் பசூள் ஓபோ 88 முதல் வயலின் 00 செல்லோ ஆர்கள் பாடகர் தொகுதி 000 பிரெஞ்சுக் கொம்பு இசை

இந்நாட்டின் வரலாற்றிலே சில சமயங்களில் இந்தியா வேறு நாடுகளை ஆட்கொண்டு, தனது பண்பாட்டையும் கலைகளையும் அந்நாட்டில் பரப்பியது. வேறு சில சமயங்களிலோ அது சுருங்கி நின்று வேற்று நாட்டுத் தொடர்பின்றித் தனித்திருந்தது. அச்சமயங்களில் அயல் நாட்டு முறைகளை அது ஏற்றதும் உண்டு. ஆனால் இவற்றை இந்தியா பிறர்க்களித்ததன் எதிரொலிகளே எனலாம். ஐரோப்பாவிலும் சீனாவிலும் காணப்படும் இசையின் தற்கால அமிசங்கள் சிலவற்றைத் தவிர, இந்திய உபகண்டத்தில் சிறந்த வகையில் காணப்படாததெதுவும் உலக இசையில் எக்காலத்திலும் இருந்ததாகத் தெரியவில்லை.

ஏதோவொரு வகையில் இந்திய இசையினால் பாதிக்கப்படாத மக்களே உலகின் எப்பகுதியிலும் இல்லை எனலாம். இந்நாட்டில் பல இசை முறைகள் தோன்றி வளர்ந்துள்ளன. அவை வளர்ந்த வகையையும், அவை ஒன்றையொன்று எவ்வாறு பாதித்தன என்பதையும் ஆராய்ந்தால், இந்திய மொழியும், தத்துவ நூலும் உலகத்திற்கு வழிகாட்டி நின்றதைவிட அதிகமான அளவிற்கு இந்திய இசை வேறு நாடுகள் பண்பாட்டில் முன்னேற உதவியது என்பது தெளிவாகும்.

வேத இசை: சாமவேதத்தைப் பாடும் முறையைக் கவனித்தால், அது வேதமொழியின் அமைப்பை ஓரளவு மாறுபடுத்துவது தெளிவாகும். வேறு வகையில் தோன்றிய பண்முறை அதில் ஈடுபடுத்தப்பட்டது என இதிலிருந்து ஊகிக்கலாம். ஆரியர்கள் இந்தியாவை அடைந்தபொழுதே பழைமையானதும், நல்ல வளர்ச்சியடைந்ததுமான இசைமுறை இங்கே வழங்கி வந்தது என்பதை மேற்கூறிய உண்மையும் இசைக்கருவிகளைப் பற்றி வேதங்களில் காணப்படும் குறிப்புக்களும் தெளிவாக்குகின் ன. அந்த முறையை ஆரியர்கள் சிறிது சிறிதாக ஏற்றுக்கொண்டனர்.