பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகில இந்திய ரேடியோ

23

அகோபிலம்


அகில இந்திய ரேடியோ (All India Radio): இந்தியவில் ஒலி பரப்புவதின் வரலாறு 1927 ஆம் ஆண்டு முதல் தொடங்குகிறது. அந்த ஆண்டில் இந்திய ஒலிபரப்புக் கம்பெனி என்பது ஏற்பட்டு ஒலிபரப்பும் நிலையங்கள். நிறுவி நடத்துவதற்கு அரசாங்கத்திடம் அனுமதி பெற்று பம்பாயிலும் கல்கத்தாவிலும் நிலையங்கள் அமைத்தது. ஆனால், அது பணத் தொல்லைகள் காரணமாக 1930-யில் ஒடுங்கவே, ஒலிபரப்பும் பொறுப்பை இந்திய அரசாங்கமே ஏற்று நடத்த முடிவு செய்து ,அதை அகில இந்திய ரேடியோ என்னும் பெயரால் 1936 ஜூன் மாதத்தில் அமைத்தது.

இந்தியப் பிரிவினைக்கு முன் இந்தியவில் 6 நிலையங்களே இருந்தன. பின்னர் புது நிலையங்கள் அமைந்ததாலும் சமஸ்தான நிலையங்களும் அகில இந்திய ரேடியோவின் ஆதிக்கத்தில் வந்துவிட்டதாலும் இப்போது இந்தியா முழுவதும் 21 நிலையங்கள் இருக்கின்றன. ஒலிபரப்பும் கலையை வளர்க்கும் பொருட்டு இப்போது ஐந்து ஆண்டுத் திட்டம் வகுக்கப்பட்டுளது, அதன்படி இப்போது குறைந்த சக்தியுடைய கருவிகள் உள்ள இடங்களில் மிகுந்த சக்தியுடைய கருவிகளை வைக்கவும், புதிய நிலையங்கள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

இந்திய மக்கள் நாளுக்குநாள் மிகுதியக ரேடியோவில் பிரியமுடையவர்களாக ஆகிவருகிறார்கள். லைசென்ஸ் பெற்ற ரேடியோக்களின் தொகை 1947-ல், 2,48,274 என்றிருந்தது 1951 டிசம்பரில் 6,58,508 ஆக ஏறியிருக்கிறது. பள்ளிக்கூங்களிலும் சிற்றூர்களிலும் தொழிற்சாலைப் பகுதிகளிலுமுள்ள பொது ரேடியோக்களின் தொகையும் மிகுந்து வருகிறது. அத்தகைய பொது ரேடியோக்கள் இப்போதுள்ளவை ஐயாயிரம். இவற்றுள் 250 தொழிற்சாலைப் பகுதிகளில் இருந்து வருகின்றன.

ஒலிபரப்பு வசதிகள் மிகுந்து வருவது போலவே ஒலிபரப்பு நிகழ்ச்சிகளும் மிகுந்து வருகின்றன. பொது நிகழ்சிகளுடன் பெண்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் தொழிலாளிகளுக்காகவும் தனி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன .இத்துடன் அரசங்க நிகழ்ச்சிகள் ,விழாக்கள், சர்வதேச விளையாட்டுப்போட்டிகள் போன்றவையும் ஒலிபரப்பப்படுகின்றன.

நாடோறும் பலமுறை செய்திகள் ஒலிபரப்பப்படுகின்றன. இவ்வாறு ஒலிபரப்பப்படுவது உள்நாட்டினர்க்கு 16 மொழிகளிலும் ஆசிய ஆப்பிரிக்க நாட்டினர்க்கு 12 மொழிகளிலும் நடைபெறுகிறது. மேற்கு ஐரோப்பிய நாடுகளிலுள்ளவர்க்கும் ஆங்கிலத்தில் ஒலிபரப்ப ஏற்ப்பாடு செய்யப்படுள்ளது. சீன மொழியிலும் வெளிநாட்டுச் செய்தி அனுப்பபடுகிறது. ஒரு நாளைக்கு 21 மணி நேரம் ஒலிபரப்பு நிகழ்ச்சிகள் வெளிநாடுகளுக்காகச் செய்யப்படுகின்றன.

நிகழ்ச்சிகளை முன்கூட்டி அறிவிப்பத்ற்காக ஆங்கிலத்திலும், ஆறு இந்திய மொழிகளிலும் இதழ்கள் வெளியிடப்படுகின்றன. வெளி நாட்டினர்க்காக ஆங்கிலத்திலும், அரபு, பாரசீக மொழிகளிலும் இதழ்கள் வெளியிடப்படுகின்றன.

நிகழ்ச்சிகள் கேட்க மக்கட்கு உண்டாகும் விருப்பத்தை ஆராய்வதற்கும் அளவிடுவதற்கும் ஆராய்ச்சிப்பகுதி ஒன்றும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

அகில பாரத சர்க்கா சங்கம் என்பது கையால் நூற்றுக் கையல் நெயும் கதர் உற்பத்தி வாயிலாக ஏழைகளுக்கு 1925-ல் நிறுவப் பெற்றது. சர்க்க என்பது கை ராட்டினம். இந்த நோக்கம் நிறைவேறும் போருட்டு இந்தச் சங்கத்தார் பருத்தி பயிரிடுதல் முதல் கதர் உற்பத்தி வரைய்ள்ள எல்லாச் செயல்களையும் கற்பிக்கப் பாடசாலைகள் நடத்துகிறார்கள்; கருவிகள் செய்துவழங்குகிறார்கள். இதன் தலைமை அலுவலகம் வர்தாவுக் கருகிலுள்ள சேவாக்கிராமம். இதன் கிளைகள் இந்தியாவின் எல்லா இராச்சியங்களிலும் இருக்கின்றன.

அகுதை பண்டைக்கலத்து மதுரையில் இருந்த ஒரு வள்ளல். ஏற்பார்க்கு யானை கொடுப்பவன். போரில் வல்லவன். இவனைப் புகழ்ந்து கபிலரும் வெலள்ளேருக்கிலையாரும் பாடியுள்ளனர். (அகம் :76; புறம்:233,347)

அகூட்டி அமேரிக்கக் கொறிக்கும் பிராணி. முயலளவுள்ளது. செம்பப்டை நிறம் மெல்லிய

அகூட்டி

கால்களும் சிறிய வாலுமுள்ளது. ஓடும்போது சிறுமான் ஓடுவதுபோலக் காணும். நீரில் நன்றாக நீந்தவல்லது. இரவில் சஞ்சரிப்பது. பகலில் மரப் பொந்துகளிலும் வேர்களின் சந்துகளிலும் பதுங்கிக் கிடக்கும். இது இலை, வேர் ,கிழங்கு, கொட்டை, கனி முதலியவற்றைத் தின்னும். கரும்புத் தோட்டங்களிலே இதனால் மிக்க கெடுதி விளைகிறது. இதன் இறைச்சி வெளுப்பானது. உண்பதற்கு நன்றாக இருக்கும். சீமைப் பெருச்சாளி வகையைச் சேர்ந்தது. கேவி என்றும் அழைப்பார்கள்.

பாகுபாடு: பாலூட்டி, கொறிக்கும் பிராணி. இனம்: டாசிப்ராக்டா அகூட்டி (Dasyprocta aguti)

அகோ (Akho) (1615-1675): அகோ என்னும் சாதியைச் சேர்ந்த ஒரு தட்டார். இவர் அகமதாபாதுக்குச் சமீபத்தில் இருக்கும் ஜேதல்புரத்தைச் சேர்ந்தவர். அங்கிருந்து அகமதாபாத்திற்குக் குடியேறினார். நெருங்கிய உறவினரின் நடநத்தை காரணமாக இவர் வாழ்க்கையில் வேறுப்படைந்து உண்மையான ஒரு குருவைத் தேடிப் புறப்பட்டார். காசியில் இருவருக்குப் பிரம்மானந்தார் என்ற பெயருள்ள சற்குரு கிடைத்தார். அகோ தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவராயினும் அவருடைய மனப்பான்னையைக் கண்டு மகிழ்ந்த குரு அவருக்குச் சத்திய ஞானத்தை உபதேசித்தார். அகோ அகே கீதா முதலிய வேதாந்தத்தைப்பற்றிய 10, 12, காவிய நூல்களும் சப்பே என்ற 6 அடிகள் கொண்ட சந்தப் பாக்கள் பலவும் இயறினர். இவருடைய சப்பே மிகப் பிரசித்தி பெற்றவை. இவர் குஜராத்தி இலக்கியத்திற்கு ஒரு புது வழியைக்காட்டி, ஒரு புது நடையையையும் கொடுத்திருக்கிறார். இவர் தத்துவ ஞானத்தை மக்களுக்குப் போதித்தார். பி. ஜி. தே.

அகோபிலம் கர்நூல் மாவட்டத்தில் சிரவேல் தாலுகாவில் உள்ள ஊர். மாவட்டத்தின் பெரிய விஷ்ணு கோயில் இங்குள்ளது. மலை உச்சியிலும் சரிவிலும் அடியிலுமாக மூன்று கோயில்கள் உள்ளன. அடியிலுள்ள கோயிற் சுவரில் தீட்டப்பெற்றுள்ள இராமாயணக் காட்சிகள் மிகச் சிறந்தவை. மண்டபத்தின் தூண்கள் 8 அடி சுற்றளவு உடையன. கோயிலைச் சேர்ந்த அகோபில மடம், ஆதிவளர் சடகோப சுவாமிகளால் அகோபிலம் என்னும் ஊரில் நிறுவப்பெற்றது. இது அழகியசிங்கர் மடம் எனவும் வழங்கும். இதன் கிளைகன் ஸ்ரீரங்கம் காஞ்சிபுரம் திருவள்ளூர் முதலிய ஊர்களிலும் இருக்கின்றன.