பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/588

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இணைந்த சுற்றுக்கள்

539

இணைப்பார்வைக் கருவிகள்

லாம். இணைதல்மானிகள் பல வகைகளில் பௌதிக ஆராய்ச்சியில் பயனாகின்றன. ஒளிக் கதிர்ப் பகுதிகளில் ஒன்றன் பாதையில் மட்டும் ஒரு பொருளை வைத்துப் பாதை வேற்றுமையை விளைவித்து, இணைதல் மாறுதல்களை அளவிட்டுப் பொருளின் ஒளிக்கோட்ட எண்ணை அளவிடலாம். மிக நெருக்கமாக உள்ள நிறமாலைவரைகளைப் (பார்க்க: நிறமாலையியல்) பிரித்தறியவும் இக் கருவி பயனாகிறது. குறிப்பிட்டதொரு ஒளியைத் திட்டமாகக் கொண்டு, அதன் அலைநீளத்தைத் திருத்தமாக அளவிட்டு, நீள அலகை அளவு திருத்தவும், சிறு தொலைவுகளையெல்லாம் மெல்லிய பொருள்களின் தடிப்புக்களையும் திருத்தமாக அளவிடவும் இக் கருவி பயன்படுக்கிறது கிறது.

வானவியலாராய்ச்சியில் இணைதல்மானி மிகப் பயனுள்ள சாதனமாகும். இரட்டை நட்சத்திரங்களை ஆராயவும், பெரிய நட்சத்திரங்களின் விட்டத்தை அளவிடவும் இது உதவுகிறது.


இணைந்த சுற்றுக்கள் (Coupled circuits): மின்சுற்றுக்கள் இரண்டை ஒன்றில் நிகழும் விளைவுகள்

இணைந்த சுற்றுகள்
த: மின்தடை சு: தூண்டு சுருள் க:கண்டென்சர்

இன்னொன்றைப் பாதிக்குமாறு அமைத்தால் அவை இணைந்த சுற்றுக்கள் எனப்படும். இணைப்புக்களில் இருவகையுண்டு. அவை ஏற்புத்திறன் இணைப்பு (Capacity coupling), தூண்டு தடை இணைப்பு (Inductance coupling) எனப்படும். இரு சுற்றுக்களுக்குப் பொதுவாக ஒரு மின்கண்டென்சர் இருப்பின் இதன் வழியே ஒன்றிலிருந்து மின்விளைவுகள் இன்னொன்றை அடையும். அல்லது இரு தூண்டுதடைச் சுருள்கள் அருகருகே இருந்தாலும், அவற்றின் பரஸ்பரத் தூண்டுதடையால் விளைவுகள் ஒரு சுற்றிலிருந்து இன்னொன்றை அடையலாம். இத்தகைய இணைந்த சுற்றுக்களிற் சில படத்தில் காட்டப்பட்டுள்ளன.


இணைப்பார்வைக் கருவிகள் (Stereoscopic instruments) ஒரே சமயத்தில் இரு கண்களாலும் பார்க்கக்கூடிய ஒளியியற் கருவிகள். வானத்திலுள்ள பொருள்களைக் காணவும், தட்டையாகத் தெரியும் ஒரு காட்சியின் ஆழத்தை உணரவும் இவை பயன்படுகின்றன. நாம் ஒரு பொருளை ஒரு கண்ணால் காண்பதைவிட இரு கண்களாலும் பார்ப்பதால், நமது கண் திரைகளில் ஏறக்குறைய ஒரே மாதிரியான இரு படிவங்கள் தோன்றுகின்றன. இவ்விரு படிவங்களையும் நமது மூளை ஒன்று கலந்து காட்சியின் பொருண்மையையும் ஆழத்தையும் உணர்கிறது. இது இணைப்பார்வை எனப்படும். இது எவ்வாறு என்பதை இங்குக் காட்டியுள்ள படம் விளக்கும். இத் தத்துவத்தைப் பயன்படுத்திப் பல ஒளியியற் கருவிகள் இயங்குகின்றன. ஒரு பொருளை இரண்டு கண்களாலும் பார்க்கும் பொழுது அதன் இரண்டு கோடிகள் வழியாகப்போகும் பார்வை அச்சுக்களை வலப்பக்கப் படத்தில் காட்டியிருக்கிறது. வல, இடக் கண்களின் அச்சுக்கள் ஒன்றையொன்று ஒவ்வொரு கோடியிலும் வெட்டுவதால் அவ்விடங்கள் நிலைத்துவிடுகின்றன. இவ்வாறே அந்தப் பொருளிலே நமது கண்களுக்குக் காணும் ஒவ்வோர் இடமும் நிலைத்து விடுகிறது. அப்போது பொருளின் உண்மையான பருமன் வடிவம். ஆழம். தூரம் ஆகிய பண்புகள் உள்ளவாறு ஒரே படித்தாக நம்முடைய உணர்வில் தோன்றும், அதே பொருளை ஒரே கண்ணால் பார்க்கும்போது பார்வையச்சுக்களில் நிலைத்த இடங்கள்

இணைப்பார்வை

உண்டாவதில்லை என்பதை இடப்பக்கப்படம் காட்டுகிறது. அதனால் வலப்பக்கப் படத்தில் காட்டியுள்ள பொருளே, கேள்விக் குறிகள் இட்ட வடிவங்கள்போல, அளவிலும் தொலைவிலும் வேறுபட்டுத் தோன்றலாம். (கண் என்னும் கட்டுரையையும் பார்க்க).

இணைப்பார்வை டெலிஸ்கோப்பு: இதில் ஒரே மாதிரியான இரு டெலிஸ்கோப்புக்களை அமைத்து

இணைப்பார்வை டெலிஸ்கோப்பு
க. கண்கள் க.லெ. கண் லென்ஸ் மு. முப்பட்டைகள் பொ. லெ. பொகஸ் லென்ஸ்