பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/589

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இணைப்பார்வைக் கருவிகள்

540

இத்தத்

ஒரு திருகாணியின் உதவியால் அவ்விரண்டிலும் தெளிவான வடிவம் விழுமாறு செய்யப்படும். இப்போது இரு கண்களினால் அவற்றை நோக்கினால் ஆழமுள்ள படிவம் ஒன்று தெரிகிறது. இத்தகைய கருவிகள் வெகுநாட்களாகப் பயன்பட்டு வந்துள்ளன. ஆனால். தற்காலத்தில் அவை சீர்திருத்தப்பட்டுள்ளன. சாதாரண டெலிஸ்கோப்பின் குழல் மிகவும் நீளமாகையால் கருவியும் மிகப் பெரிதாய்விடும். ஆனால் குழலின் நீளத்தைக் குறைக்க இரு செங்கோண முப்பட்டைகளைப் பயன்படுத்தலாம். முப்பட்டைகள் ஒளியை இருமுறை வந்த வழியே திருப்பியனுப்பிக் குழலின் நீளத்தைக் குறைப்பதுடன் தலைகீழான படிவத்தையும் வேறு லென்ஸ்களின் உதவியின்றியே நேராக்குகின்றன. இம் முப்பட்டைகளைப் பயன்படுத்துவதால் கண் லென்ஸ்களின் இடையே உள்ள தொலைவைவிடப் பொருள்வில்லைகளை அதிகமான தொலைவில் அமைக்க முடிகிறது. இதனால் கருவியின் 'பொருண்மைத் திறன்' (Stereopower) அதிகமாகிறது. அதிற் காணும் காட்சிகளும் தெளிவான ஆழங்கொண்டு விளங்குகின்றன. இத்தகைய இணைப்பார்வை டெலிஸ்கோப்புக்கள் எறிபடையியலிலும், கப்பலிலும், தொலைவிலுள்ள பொருள்களைக் கண்டு, அவற்றின் தொலைவை மதிப்பிடவும் உதவுகின்றன.

இணைப்பார்வை மைக்ராஸ்கோப்பு: சாதாரண மைக்ராஸ்கோப்புக்கள் இரண்டை ஒரு பொருளை

இணைப்பார்வை மைக்ராஸ்கோப்பு
உதவி: பாஸ் & லாம், நியூயார்க்.

நோக்கியிருக்குமாறு செய்து, அவ்விரண்டிலும் தோன்றும் படிவங்களை ஒன்றாக்கிப் பார்க்குமாறு அமைத்தால் அவ்வமைப்பு இணைப்பார்வை மைக்ராஸ்கோப்பு எனப்படும். இதில் தெரியும் படிவம் தனி மைக்ராஸ்கோப்பில் தெரியும் படிவத்தைவிடத் தெளிவாக இருக்கும். தற்கால இணைப்பார்வை மைக்ராஸ்கோப்பில் இரு தனி மைக்ராஸ்கோப்புக்களில் தெரியும் படிவங்கள் செங்கோண முப்பட்டைகளால் நேராக்கப்படும். இம்முப்பட்டைகளைக் கருவியின் இருசைச் சுற்றி நகர்த்தி, இரு படிவங்களின் தொலைவையும் தேவைக்குத் தகுந்தவாறு சரிப்படுத்தலாம்.


இணைப்பு (Joint): பொறியியலில் இரு பகுதிகளை இணைக்கும் அமைப்பு இணைப்பு என்று அழைக்கப்படுகிறது. இது கல், மரம், உலோகம் ஆகிய பொருள்களினால் செய்யப்படுகிறது. காற்றும், நீராவியும், நீரும் வெளியே கசியாது தடை செய்யவும், ஒரு பக்கத்திலிருந்து இன்னொன்றிற்கு விசையைக்கடத்தவும் இணைப்புக்கள் பயனாகின்றன. இவை ஒரே இடத்தில் நிலையாகவோ அல்லது இயங்குமாறோ அமைக்கப்படலாம்.கற்களைக்கொண்டு கட்டட வேலை செய்யும்போது கற்களினிடையே காரையையோ, சிமென்டைய இட்டு இணைக்கிறார்கள். முளைகளையும் ஆப்புக்களையும் கொண்டு மர உறுப்புக்கள் இணைக்கப்படுகின்றன. ஆணிகளையும் மரைகளையும் கொண்டும் மரங்களை இணைக்கலாம். இத்தகைய இணைப்பின் இழு வலிமை குறைவு. இணைப்பைச் சுற்றி இரும்புத் தகட்டினால் மூடி, மரத்தில் இணைத்து இதன் இழுவலிமையை அதிகமாக்கலாம். உலோகங்களைக்கொண்டு மிகச்சிறந்த இணைப்புக்களை அமைக்கலாம். இவற்றைத் தேவையான வடிவில் அமைக்க முடியும். முளைகளையும், மரைகளையும், தறையாணிகளையும் (Rivets) கொண்டு இந்த இணைப்புக்கள் அமைக்கப்படுகின்றன. இணைப்புக்களின் வழியே திரவமோ, வாயுவோ கசியாமல் இருக்க இறுக்கமான வளையங்களும் உருளைகளும் அவற்றில் பொருத்தப்படுகின்றன.


இணைமணிமாலை தமிழ்ப் பிரபந்த வகைகளில் ஒன்று; வெண்பாவும் கட்டளைக் கலித்துறையுமாகவாவது, வெண்பாவும் அகவலுமாகவாவது அந்தாதித் தொடையில் நூறு செய்யுட்கள் அமைத்துப் பாடுவது.


இத்தத்: கணவன் மரணத்தின் காரணமாகவோ, விவாகரத்தின் காரணமாகவோ விவாக முரிவு ஏற்படுமானால், அந்த விதவையையோ, விவாகப் பந்தத்திலிருந்து விடுபட்ட பெண்ணையோ, மறு விவாகம் செய்துகொள்ள இஸ்லாமியச் சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், விவாக முரிவு ஏற்பட்டதிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகே மறு விவாகம் நடைபெற வேண்டும் என்ற விதியையும் அந்தச் சட்டம் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் தடைக் காலத்துக்குத்தான் இத்தத் என்று பெயர். இந்த விதியின் முக்கியமான நோக்கம், மறு விவாகத்துக்குப் பின்னால் அந்தப் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்குத் தகப்பன் முந்தின கணவன் அல்லன். மறு கணவனே என்பதை உறுதி செய்து கொள்வதேயாகும். விவாக முரிவுச் சமயத்தில் பெண் கருத்தரித்திருந்து, வெளியில் தெரியாமல் இருக்கும் கட்டத்தில் மறு விவாகம் நடைபெறுமானால், பின்னர் பிறக்கும் குழந்தையின் தந்தை உண்மையில் முந்தின கணவனாகவே இருக்க, மறு கணவனே அக் குழந்தையின் தகப்பனாகக் கருதப்படுவான். இக் குழப்பத்தை நீக்குவதே இவ்விதியின் நோக்கம். அதற்கு ஏற்பவே இந்த இத்தத்காலமும் வகுக்கப்பட்டிருக்கிறது.விவாக முரிவுச் சமயத்தில் கணவன் மனைவிக்கிடையே புணர்ச்சி ஏற்பட்டிருக்காவிட்டால், பெண் இத்தத் அனுஷ்டிக்காமலேயே மறு விவாகம் செய்து