பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/626

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியப் பத்திரிகை உழைப்பாளர்...

575

இந்தியம்

சங்கங்கள் பலவற்றுடன் இணைந்துள்ளது. இதன் ஆதரவில் இரண்டு ஆராய்ச்சிப் பகுதிகள் நூல்நிலைய ஆராய்ச்சி செய்துவருகின்றன.


இந்தியப் பத்திரிகை உழைப்பாளர் சம்மேளனம் (Indian Working Journalists Federation)தொழிற் சங்க அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வகையில் இது தான் இந்தியா முழுமைக்கும் பொதுவான முதல் ஸ்தாபனம். தொழிற்சங்கங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ள இருபத்தொரு ஸ்தாபனங்கள் இதில் இணைந்திருக்கின்றன. ஆங்கிலத்திலும், இந்திய மொழிகளிலும் வெளியாகும் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும், செய்தி ஸ்தாபனங்களிலும் வேலை செய்யும் ஊழியர்களில் ஒரு சாரார் ஆங்காங்குச் சங்கம் அமைத்துக்கொண்டு இதில் சம்மேளனமாகச் சேர்ந்திருக்கிறார்கள். அந்த இணைப்புச்சங்கங்கள் அங்கத்தினர்களிடமிருந்து வசூலிக்கும் சந்தாவில் ஒரு பகுதியை இதற்குக் கொடுக்கவேண்டும். இரண்டாவது உலக யுத்தத்துக்குப் பிறகு பத்திரிகையாளர்களின் வேலை நிலைமை பல இடங்களில் மோசமாயிற்று. பல பெரிய நகரங்களில் சிறிய சங்கங்கள் தோன்றிப் பத்திரிகை நடத்துவோருடன் கலந்து பேசி, நிலைமையில் ஏற்றம் காண்பதற்குச் செய்த முயற்சிகள் போதிய அளவு பலிக்கவில்லை. எனவே, அகில இந்திய கட்டுப்பட்டு உழைப்பது என்ற கருத்து 1950-ல் பரவிற்று. உத்தரப் பிரதேசத்துப் பிரபல பத்திரிகையாளரான கோபிநாத் ஸ்ரீவாஸ்தவா இக் கருத்தை உருவாக்கி ஒரு மாநாடு டெல்லியில் கூடச்செய்தார். அவர் காலமாகிவிடவே செல்லபதி ராவ் தலைமையில் ஸ்தாபனம் அமைந்து வேலை செய்கிறது. அலுவலகம் புது டெல்லி, 1952-ல் கல்கத்தாவில் சம்மேளனம் கூடியபோது பத்திரிகை வெளியிடும் தொழிலைப் பற்றிய முழுத் தகவல்களையும் சேகரித்துச் சீரமைப்புக்கு யோசனை கூறுவதற்காகப் பத்திரிகைக்கமிஷனை இந்தியச் சர்க்கார் நியமிக்கவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இப்போது அத்தகைய கமிஷன் நியமிக்கப்பட்டு விசாரணை செய்து வருகிறது. ஏ. ஜி. வே.


இந்தியப் பொருட்காட்சிச்சாலை (Indian Museum, Calcutta): 1784-ல் நிறுவப் பெற்ற ஆசியச்சங்கம் (Asiatic Society) பொருட்காட்சிச்சாலை ஒன்றை அமைக்க விரும்பியபோதிலும், 1814லேயே டாக்டர் நத்தேனியல் வாலிச் என்பவர் முயற்சியால் அது அமையலாயிற்று. அதன்பின் அது ஆசியச் சங்கத்தால் நடத்த முடியாதபடி பெரியதாகிவிட்டபடியால் அச்சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் இந்திய அரசாங்கமானது 1866-ல் அப்பொருட்காட்சிச்சாலையைத் தன்னுடைய ஆதிக்கத்தில் வைத்து நடத்தத் தொடங்கியது. அதன் பின்னர் அது நாளுக்குநாள் அதிகமாக வளர்ந்து வரலாயிற்று. இப்போது கீழ்நாடுகளில் அதற்கு இணையானதாக வேறு பொருட்காட்சிச்சாலை எதுவுமில்லை. இப்பொருட்காட்சிச்சாலை இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் நடைபெறும் கண்காட்சிச் சாலைகளில் கலந்து கொள்வதுடன், மக்களுக்குப் பயன்படக்கூடிய சொற்பொழிவுகள் செய்யவும், அறிஞர்க்கும் மாணவர்க்கும் ஆராய்ச்சி வசதிகள் செய்யவும் ஏற்பாடு செய்துள்ளது. இப்பொருட்காட்சிச்சாலையில் தரையியல், விலங்கியல், மானிடவகையியல், தொல்பொருளியல், கலை, தொழில் ஆகிய ஆறு துறைகளுக்கும் ஏற்ப ஆறு பிரிவுகள் உள்ளன. இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தர்மகர்த்தர்களின் குழுவொன்று இதை நடத்துகிறது.

இந்தியப் பொருட்காட்சிச்சாலை
உதவி: இந்தியப் பொருட்காட்சிச்சாலை, கல்கத்தா.


இந்தியப் பொருளாதாரச் சங்கம் (Indian Economic Association) பொருளாதார அறிவைப் பெருக்கும் நோக்கத்துடன் 1918-ல் நிறுவப்பெற்றது. ஆண்டுதோறும் இந்தியப் பொருளாதார மாநாடு அடிப்படையில் நடத்துகிறது. மாநாட்டின் நடவடிக்கைகளைச் சங்கத்தின் இதழாகிய 'இந்தியப் பொருளாதார இதழ்' என்பதில் வெளியிடுகிறது. இவ்விதழை அலகாபாத் பல்கலைக் கழகத்துடன் சேர்ந்து நடத்துகிறது. உறுப்பினர் தொகை ஏறக்குறைய 225 (1952).


இந்தியம் (Indium) குறியீடு In; அணுவெண் 49; அணுநிறை 114-76; மிக அருமையாகக் காணப்படும் ரசாயனத் தனிமங்களில் ஒன்று. ஆவர்த்த அட்டவணையில் இது மூன்றாம் தொகுதியில் அமைக்கப்படுகிறது. இதன் ஒப்பு அடர்த்தி 7•28; உருகுநிலை 155°; கொதிநிலை 1450°.

நாகக் கந்தகக்கல் என்னும் கனியப்பொருளை நிறமாலைச் சோதனைகளுக்கு உள்ளாக்கியபோது ரைஷ் (Reich), ரிக்டர் (Richter) ஆகிய இரு விஞ்ஞானிகள் அதில் மிகச் சிற்றளவில் ஒரு புதுத்தனிமம் கலந் திருப்பதை 1863-ல் அறிந்தார்கள். இது அக்கனியத்தில் மிகக் குறைவான அளவு கலந்திருக்கும். வாணிபத் துத்தநாகத்திலிருந்து இந்தியத்தைப் பெற அதைக்