பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/630

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

579

இந்தியா

கினிப் பாறைகளாம். நடுவிலும் மேற்புறத்திலும் உள்ளவை பாளம்பிரி பாறைகளும், சுண்ணாம்புக் கற்களும், பட்டை இரும்புக் கற்களுமாகும். ஆர்க்கியன் பாறை களும் தார்வார்ப் பாறைகளும் சென்னை, ஐதராபாத், ஒரிஸ்ஸா, பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானம், பர்மாப்பகுதிகள், இமயமலைப்பகுதிகள் ஆகியவற்றில்

இந்தியப் புவியியல் அமைப்புக்கள்

யுகம்

ஐரோப்பியத்
திட்ட வரிசை

புறத்தீபகற்பம்

தீபகற்பம்

புதுப் பிராணி யுகம்
(கைனோசோயிக்)



இடைப் பிராணி யுகம்
(மெசோசோயிக்)



பழம் பிராணியுகம்
(பாலியோசோயிக்)

சமீப கால
பிளீஸ்ட்டொசீன்
பிளையசீன்
மயொசீன்
ஆலிகெர்சீன்
இயோசீன்


கிரிட்டேஷஸ்

ஜுராசிக்

திரையாசிக்


பெர்மியன்
கார்பனிபெரஸ்
டெவோனியன்

பிரி-கேம்பிரியன்

ஆர்க்கியன்

வண்டலும் பனிப்படிவுகளும்
(பழைய) முதுவண்டல்
சிவாலிக் மண்டலம்

மரீ மண்டலம்
இயோசீன் (இராணி

கோட்டை, லாக்கி, கிர
தார், சாரத்து வரிசைகள்)
கிரிட்டோஷஸ் (கியூமல், சிக்
கிம் வரிசைகள்)

ஸ்பிதி களிமண் பலகைப்
பாறை (Shales) மேலைக்
கியோட்டோ
கீழைக் கியோட்டோ (?)
லிலாங்கு மண்டலம்
கியூலிங்கு மண்டலம்
லிபாக்கு, போ வரிசைகள்
டெவோனியன்
மத்துகுவார்ட்சைட்
சைலூரியன்
ஆர்டலிஷன்
கேம்பிரியன்
ஹைமந்த மண்டலம்
பிரிகேம்பிரியன் சல்கா

ஆர்க்கியன்

(புது) இள வண்டல்
முதுவண்டல் (சில செம்பாறாங்கல்)
கூடலூர் மணற்கல்

தக்கணப்படிக்கட்டும் படிக்கட்

கிர டிடையனவும், புதுச்சேரி இயோ
சீன்.
திருச்சிராப்பள்ளியிலும் அஸ்ஸா
மிலுமுள்ள மேலைக் கிரிட்
டேஷஸ்.
கோண்டுவானா மண்டலம்,
யூமியா, ஜபல்பூர், ராஜமகால்

கோட்டா, பஞ்சேத்,
தமுதா தலச்சீர்

விந்திய மண்டலம் (பகுதி)
கடப்பை, தார்வார், ஆரவல்லி
முதலியன.
ஆர்க்கியன் நைசுகள் முதலியன.

அதிகமாக உருவாகியுள்ளன. பல இடங்களில் இந்தப் பாறைகளில் மாங்கனீசும் இரும்புக்கனிய மண்களும் காணப்படுகின்றன.

தார்வார்ப் பாறைகளும் அவற்றுடன் சேர்ந்த நைசுப் பாறைகளும் (Gneiss) உண்டான பின்னர் உருவானவை கிழக்குத் தொடர்ச்சி மலைகளாகவும், சென்னை, இலங்கை ஆகியவற்றில் பல குன்றுகளாகவும் அமைந்துள்ள சார்னோக்கைட்ஸ் (Charnockites) என்னும் இடைபுகு பாறைகளாம். அவைகளைச் சென்னைக்கு அருகிலுள்ள பல்லாவரம், பறங்கிமலை, நீலகிரி, பழனிமலை,ஆனைமலை, சேர்வராயன் மலை ஆகியவிடங்களில் 'நீலக்கருங்கல்' என்ற வடிவில் காணலாம். சேலத்திலும் மைசூரிலும் குரோமைட்டுடனும் மாக்னெசைட்டுடனும் தொடர்புடையனவாகவுள்ள சில பாறைகள் தார்வார்ப் பாறைகளுக்கும் பின்னர் அமைந்தனவாகும்.

இமயமலையில் காணப்படும் ஆர்க்கியன் பாறைகள் நன்கு ஆராயப் பெறவில்லை. அவை காச்மீரம், சிம்லா, நேபாளம், கிழக்கு இமயமலைப்பகுதிகள் ஆகியவற்றில் கிடைப்பனவாக அறியப்பட்டுள்ளன. ஆனால் இமயமலை வளர்ந்த காலத்தில் மேற்பாகத்திலிருந்த ஆர்க்கியன் பாறைகள் இளகிப் பின்னால் ஏற்பட்ட பாறைகளின் மீது வந்து படிந்து காணப்படுகின்றன.

ரெயலோத்தொடர்: ராஜஸ்தானத்தில் ஆரவல்லி மலைக்கு வடக்கே சலவைக்கல், மணற்கல், கலப்புப் பாறைகள் (Conglomerates) ஆகியவை சேர்ந்த அமைப்புக்கள் உள்ளன. அவை ஜோதிபுரியிலும் உதயபுரியிலும் உருவாகியுள்ளன. பீகாரிலும் இத்தகைய அமைப்புக்கள் இருக்கின்றன. அவை கொல்ஹான் தொடர் எனப்படும். அவற்றில் பழைய எரிமலைக் குழம்புடன் தொடர்புடைய மணற்கற்களும்சுண்ணாம்புக்கற்களும் காணப்படுகின்றன.

ஆர்க்கியன் பாறையிலுள்ள தாதுக்கள்: இந்தியாவில் உண்டான புவியியல் அமைப்புக்களுள் பாறைகளே அதிகமான தாதுக்கள் உடையன. அவற்றிலே தங்கம், இரும்பு, மாங்கனீஸ், செம்பு, குரோமியம், டைட்டேனியம், வுல்பிராம், வெள்ளீயம், வனேடியம், யுரேனியம், தோரியம் ஆகியவற்றின் உலோக மண்களும், அப்பிரகம், மாக்னசைட்டு, கல்நார், சிலிமனைட்டு, கைனைட்டுப் போன்ற பொருள்களும் கிடைக்கின்றன.

மைசூரிலுள்ள கோலாரிலும் ஐதராபாத்திலுள்ள ஹட்டியிலும் தங்கமும்; பீகார், சிக்கிம், ராஜஸ்தானம், சென்னை இராச்சியங்களில் செம்பும் ; மத்தியப்-