பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/631

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

580

இந்தியா

பிரதேசம், பம்பாய் ஒரீஸ்ஸா, சென்னை, மைசூர் இராச்சியங்களில் மாங்கனீசஸும்; பீகார், ஒரீஸ்ஸா, மத்தியப் பிரதேசம், பம்பாய், சென்னை இராச்சியங்களில் இரும்பும்; மைசூர், சென்னை பீகார், பம்பாய், இராச்சியங்களில் குரோமைட்டும்; மேற்குக் கிழக்குக் கடற்கரைகளில் டைட்டேனியமும்; ஒரீஸ்ஸாவில் வனேடியமும்; பீகார் ராஜஸ்தானம், சென்னை இராச்சியங்களில்: அப்பிரகமும்; மைசூரிலும் சென்னையிலும் மாக்னசைட்டும் ; அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், தென் இந்தியப் பிரதேசங்ளில் கைனைட்டு– சில்லி மனைட்டு–குருந்தம் ஆகியவைகளும், கிழக்குத் தொடர்ச்சி மலை, ஒரிஸ்ஸா, திருவிதாங்கூரில் பென்சில்கரியும் கிடைக்கின்றன. மேலும் ஆர்க்கியன் பாறைகளில் சுண்ணக்கல், டோலமைட்டு, எளிதில் உருகாதபடியாப் பொருள்கள் (Refractory}, உயவுப்பொருள்கள், பிங்கான் செய்வதற்கேற்ற பொருள்கள். மிகவும் அழகானவையும் நெடுமாளைக்கு நிற்பவையுமான கட்டடக் கற்கள் ஆகியவையும் கிடைக்கின்றன.

கடப்பை, விந்திய அமைப்புக்கள்: தார்வார்ப் பாறைகள் மடிந்து உயர்ந்து போது பின்னர், இந்தியாவில் பெரும்பகுதி மீண்டும் கடல்நீர் மட்டத்துக்கும் தாழ்வாக இறங்கி வண்டல்களைப் பெற்றது. அதைக் கடப்பை டெல்ஸி அமைப்புக்களில் காணலாம்.

கடப்பை வடிநிலத்திலும், சட்டிஸ்கார்– ஒரிஸ்ஸாப் பரப்பிலும், மத்திய இந்தியாலிலும், ராஜஸ்தானத்திலும் காணப்படும் இந்த யுகப்பாறைகள். மணற்கற்கள், களிமண் பாறைகள் சுண்ணம்புக் சுற்கள் ஆகியவை ஓரளவு மடிந்து உண்டானவையாகும். ராஜஸ்தானத்தில் ஆள்வார், ஐயப்பூர், மேவாரி ஆகிய இடங்களில் பெரிய மடிப்புக் காணப்படுகிறது. சிய இடங்களில் சுருங்கள் உட்புகுந்துள்ளது. ஆனால் அது கடப்பை வடிநிலத்தில் நேரவில்லை. கடப்பைப் பாறைகளிலிஞந்து நல்ல கட்டடக்கல்களும், சென்னை இராச்சியத்தில் கம்பம், மரகாப்பூர் ஆகிய இடங்களில் கற்பலகைகளும், டெல்லிக்கு அருகிலுள்ள குந்து என்னுமிடத்தில் கற்பலகைகளும், பலவிடங்களில் மணற்கற்களும் சுண்ணாம்புக்கற்களும் கிடைக்கின்றன. சென்னையிலும் ராஜஸ்தானதிலுமுள்ள இத்தகைய பாறைகளில் ஸ்டீயடைட்டு, பாரைட்டீஸ், கல்கார் ஆகியவும் உள.

விந்திய அமைப்பு : ஆர்க்கியன், கடப்பை அமைப்புக்களின்மீது பொருத்தமற்றவாறு மற்றொரு வண்டல் அமைப்பு உளது. அது பெரும்பாலும் பாசில்களில்லாதது. சீர்குலையாமலும் இருக்கிறது. இது கடப்பைப் பகுதியிலும் மத்திய இந்தியாவில் விந்தியப் பகுதியிலும் நன்கு உருப்பெற்றதாக இருக்கிறது.

விந்தியப்பாறைகளுக்குச் சமமாகச் சென்னைப் பகுதியிலுள்ள பாறைகள் கர்நூல் அமைப்பு என்று கூறப்பெறுகின்றன. பீகாரிலும் மத்திய இந்தியாவிலும் உள்ள விந்தியப் பகுதியில் தாழ்ந்த அல்லது செம்ரீத் தொடர் கானப்படுகிறது. அது உருமாறிவது என்று தெளிவாகத் தெரிகிறது. மேலுள்ள விந்தியப் பாறைகள் கெய்மூர் தொடர், ரீவாத்தொடர், பந்தர் தொடர் என்று பிரிக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் வைரங்கள் உள்ள மணலும் கல்லும் சேர்ந்த அடுக்கினால் பிரிக்கப்படுகிறது.

விந்தியப் பாறைகளில் சிறந்த மணற்பாறைகள் கிடைக்கின்றன. அவற்றை மீர்சாப்பூர், பரத்பூர், ஆக்ரா முதலிய இடங்களில் வெட்டி எடுத்து வடஇந்தியாவில் முன்னாளில் போலவே இந்நாளிலும் கட்டட வேலைக்குப் பயன்படுத்தி வருகிறார்கள். சுண்ணாம்புக் கற்கள் கட்டட வேலைக்கும் சிமென்டு செய்வதற்கும் பயன்படுகின்றன. சிறந்த சலவைக் கற்களும், கடப்பைக் கற்கள் என்னும் தளவரிசைக் கற்களும் கிடைக்கின்றன. ஆனால் இந்த அமைப்பிலிருந்து கிடைப்பனவற்றுள் எற்றமுடைய பொருள் வைரம். பன்னா இராச்சியத்திலுள்ள வைரப் பாறைகள் தென் கிழக்கு ஆப்பிரிக்காவிதிள்ள ‘கிம்பர்லைட்’டைப்போல் ஓர் எரிமலை விளைவாகும் என்று அண்மையில் அறியப்பட்டிருக்கிறது.

பழம் பிராணி யுகத்தொகுதி : மேல் நிலக்கரி யுகத்துக் கோண்டுவானாப் பாறைகளுக்கு வந்து சேரும் வரை இந்தியத் தீபகற்பத்தில் விந்தியப் பாறைகளுக்குப் பிறரு உண்டான பாறைகளைக் காணமுடியாது. ஆனால் கேம்பிரியன் கால முதல் உண்டான சிறந்த கடல் விளைவுகளை இமயமலைப் பகுதியில் காணலாம். அவை பஞ்சாப் உப்பு மலைத்தொடர், காச்மீரம் ஸ்பிதி பள்ளத்தாக்கு, நேபாளம், சிக்கிம் ஆகிய இடங்களில் ஆராயப்பட்டுள்ளன. பஞ்சாப் உப்புமலைத் தொடரில் உப்புச் சுண்ணாம்பு மண்ணும் (Marl), கருஞ்சிவப்பான மணற்பாறையும், போலி உப்புவடிவக் களிமண் பாறையும் உள்ளன. பர்மாவில் பாசில்களுள்ள கேம்பிரியன் பாறைகள் இல்லை. ஆனால் ஷான் பகுதியிலுள்ள சாங்மாகித் தொடரும் இந்த யுகத்தைச் சேர்ந்ததாக இருக்கவாம். சாங்மாகிகளின்மீது தாங்பெங் எரிமலைத் தொடரும் கருங்கல்லும் படிந்துள்ளன. ஈய-நாக-வெள்ளித் தாதுகளுள்ள பாட்வின் பரப்பு இவற்றோடு இயையுடையது. தாங்பெங் தொடர் ஓரளவு கேம்பிரியன் யுகத்தினதாவுமிருக்கலாம்.

ஆர்டவிஷன் சைலூரியன் அமைப்புக்கள் காச்மீரத்திலுள்ள விடால் பள்ளத்தாக்கிலும் உத்தாப் பிரதேசத்திலுள்ள கூமாவுனிலும், பர்மாவிலும், ஷான் பகுதிகளிலும் காணப்படுகின்றன. ஆயினும் இமயப் பகுதியிலிருந்த கடலுக்கும், பர்மாவிலிருந்த கடலுக்கும் இடையில் ஒரு தடை இருந்தது என்று தெரிகிறது. ஏனெனில் இமயக் கடலில் பவளங்கள் நிறைந்தும், கிராப்டோ லைட்டுக்கள் காணப்படாமலும் இருக்கும்போது, பர்மாக் கடலில் கிராப்டோ லைட்டுக்கள் நிறைந்தும், பவளங்கள் காணப்படாமலும் இருக்கின்றன. பர்மாக் கடல்கள், வட, லடமேற்கு ஐரோப்பாவுடன் இணைந்திருந்தன.

டெவோனியான் அமைப்புக்கு இமயமலையின் பல பகுதிகளில் காணப்படும் முத் (Muth) படிகக் கற்பாறைகள் அடையாளங்களாகும். இந்த அமைப்பைச் சார்ந்த மற்றொரு வண்டல் படிவானது சித்திரால்மேலை ஸ்பிதி, கானூர், பயான்ஸ் என்னுமிடங்களில் அகப்படுகின்ற சுண்ணக் கல் ஆகும். இக்கல்லில் பாசில்கள் கிடைக்கின்றன. பர்மாவிலுள்ள பீடபூமியில் அகப்படும் சுண்ணக் சுல்லின் அடிப்பாகமும் இக்காலத்ததே. டெவோனியன் அடுக்கின் மேல் பாகத்தில் இமயச் கடலுக்கும் பர்மாக் கடலுக்கும் சற்றுச் சேர்க்கை ஏற்பட்டிருந்தது எனத் தெரிகிறது. சுார்பனிபெரஸ் அல்லது நீலக்கரி யுக அமைப்பு ஸ்பிதி, காச்மீரம், சித்திரால் ஆகிய பாகங்களில் நன்கு உருவாகியுள்ளது. ஸ்பிதியிலுள்ள இந்த அமைப்பில் ராக்காப்டெரீஸ் (Rhacopteris) என்னும் சில பாசில் செடிகள் அகப்படுகின்றன. இவை உவகமெக்கும் நிலக்கரி யுகத்தின் கீழ் எல்லையின் மேல் பகுதியில் காணப்படுகின்றன. இவை இங்குக் காணப்படுவதால் இந்த அமைப்பும் அக் காலத்ததே என்று தெரிகிறது. இந்த அடுக்கின் மேலே வண்டல் படிவதில் ஒரு தடையம காணப்படுகிறது. அந்நிகழ்ச்சி இமயமலைப் பகுதியில்