பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/654

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

597

இந்தியா

1931 35,28,37, 778
1941 38,89,97,955



1951

இந்திய யூனியன்
36,18,20,000
பாகிஸ்தான்
7,56,87.000

43,75,07.000

அஸ்ஸாமில் சதுப்பான இடங்களில் வடிகால்களை அமைத்தும், காடுகளை அழித்தும், பஞ்சாபில் நீர்ப் பாசன வசதியை மிகுவித்தும், பயிர் செய்யக்கூடிய நிலத்தின் பரப்பைப் பெருக்கியிருக்கின்றனர். இந்தக் காரணத்தால் இந்த இரண்டு இராச்சியங்களிலும் மக்கள் தொகை சிறப்பாகப் பெருக்கம் அடைந்திருக்கிறது. அஸ்ஸாமில் மொத்தப் பெருக்கத்தில் காற்பாகம் பிரமபுத்திரா பள்ளத்தாக்கிலும், அதையடுத்த மலைச் சரிவுகளிலும் ஏற்பட்டிருக்கிறது. இவ்விடங்களில் தேயிலைத் தோட்டங்கள் அதிகமாகி, அவற்றில் வேலை செய்வதற்குப் பல வெளியிடங்களிலிருந்து மக்கள் ஏராளமாக வந்து குடியேறி யிருக்கின்றனர். தென்னிந்தியாவின் பல பாகங்களில் மக்கள் தொகை அதிகரித்ததற்குக் காரணம் நீர்ப்பாசனம் மட்டுமன்று. நெல் விளைவிப்பதற்கு ஏற்றவையல்லாத செழுமை குறைந்த நிலத்திலும் வேர்க்கடலை போன்ற பயிர்களை உற்பத்தி செய்யத் தொடங்கியதும் ஒரு முக்கிய காரணமாகும். மரண விகிதம் கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில் அதிகமாக உள்ளது. ஆயினும் மக்கள் தொகை கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில் அதிகமாகப் பெருகியிருக்கிறது. இதற்குக் காரணம் கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேறி நகரங்களிற் குடியேறியதேயாம். போக்குவரத்து மார்க்கங்கள் ஒழுங்காக ஏற்படுத்தப்பட்டு அபிவிருத்தி அடைந்ததால்தான், பல பெரிய பட்டணங்கள் வளர்ந்து வந்தன. சென்ற முப்பதாண்டுகளாக வளர்ந்துவரும் மோட்டார் போக்குவரத்தும் பட்டண வளர்ச்சிக்குக் காரணமாகும்.

ஆண்களின் தொகையும் பெண்களின் தொகையும் ஏறக்குறைய சமமாகவே உள்ளன. 1951-ல் ஆயிரம் ஆண்களுக்கு 947 பெண்கள் விகிதம் இருந்தனர். ஆயினும் ஒரிஸ்ஸா, சென்னை, திருவிதாங்கூர், கொச்சி, கட்சு முதலான இடங்களில் ஆண்களின் தொகையைவிடப் பெண்களின் தொகை அதிகம். இதற்குக் காரணம் ஆண்களிற் பலர் வேலை நிமித்தமாகத் தம் குடும்பங்களை விட்டுவிட்டு வெளி யிடங்களுக்குச் சென்றதேயாகும். அஸ்ஸாம், குடகு, பம்பாய் டெல்லி, மேற்கு வங்காளம் போன்ற மற்ற இடங்களில் ஆண்களின் தொகை அதிகம். வெளியூர்களிலிருந்து வேலைக்காகப் பலர் இங்கு வந்து சேர்ந்தமையே இதற்குக் காரணம்.

தொழிலை யொட்டி நாட்டின் மக்கள் தொகை அடியிற் காட்டியுள்ளபடி வகுக்கப்பட்டிருக்கிறது.

இந்திய மக்களில் 69·8% உழவுத் தொழில் செய்து பிழைப்பவர்; 30% வேறு தொழில் செய்பவர். பீகார், அஸ்ஸாம், இமாசலப் பிரதேசம், விந்தியப் பிரதேசம் போன்ற சில இடங்களில் உழவுத் தொழில் செய்வோரின் தொகை மிகுதி. மேற்கு வங்காளம், பம்பாய் போன்ற அபிவிருத்தி யடைந்துள்ள பகுதிகளில் மற்றைத் தொழில் செய்வோரின் தொகை மிகுதி.

உழவுத் தொழில் செய்வோரின் செய்வோரின் தொகை மிக அதிகம்; ஆனால் பயிரிடுவதற்குத் தகுதியாயுள்ள நிலப் பரப்புக்குறைவு. நபருக்கு 0.7 ஏக்கர் வீதந்தான் தேறும். காடுகளின் பரப்பும் மிகக் குறைவு. தலைக்கு 0·24 ஏக்கர் தான் வரும். நிலத்தின் உற்பத்தி வன்மையும் குறைவு. பயிர் செய்யும் முறையே அதற்குக் காரணம். விரைவாய்ப் பெருகும் மக்களின் தொகையை ஆதரிப்பதற்குத் தொழில் வளம் பெருகவேண்டும். உழவனைவிடத் தொழிலாளி மும்மடங்கு சம்பாதிக்க முடியுமாதலின்


உழவுத்தொழில் செய்வோர்


வகைமக்கள் தொகை
பிற தொழிலினர்


தொழில்மக்கள் தொகை  

சொந்தத்தில் பயிரிடுவோரும்
அவரைச் சார்ந்தோரும்.

16,73,46,501

உற்பத்தித் தொழில்

37.6,60,197

சொந்தமில்லாத நிலங்களை
வைத்துப் பயிரிடுவோரும்
அவர்களைச் சார்ந்தோரும்

3,16,39,719

வாணிகம்

21,3,

பயிரிடும் உழைப்பாளிகளும்
அவரைச் சார்ந்தோரும்.

4,48,11,928

போக்குவரத்து

5,6,20,128

நிலம் பயிரிடாமல் நில வரு
மானம் வாங்குவோரும்
அவரைச் சார்ந்தோரும்.

53,24,301

பிறதொழில்களும் பணி
களும்

42,9,82,744

மொத்தம்



24,91,22,449

மொத்தம்



10,75,71,940

தொழில் வளப் பெருக்கத்தால் வாழ்க்கைத்தரம் உயரும். பீ. எம். தி.

ஆதிக்குடிகள்

1941ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி இந்தியாவிலுள்ள ஆதிக்குடி மக்களுடைய தொகை