பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசுட்டோஷ் முக்கர்ஜி

34

அசுவகோஷன்

இனம் பெருக்குகின்றன. விந்தணுவாற் கருவுறாத முட்டைகள் (unfertilized egg) இவற்றின் உடலினுள்ளேயே வளர்ச்சியுற்று, அககுணிக்ள் வெளிவருகின்றன. இவையெல்லாம் இறக்கையுள்ள பெண்கள். இவ்வாறே ஆணின்றியே கன்னி யினப்பெருக்கத்தாலும் முட்டையாக வெளிவராமல் சிறு பூச்சியாகவே வெளிவரும் சராயுசப் பிறவியாலும் (viviparity) வேனிற்கால முழுவதும் எண்ணிறந்த தலைமுறைகள் உண்டாகின்றன. ஒரு தாய் ஒரு நாளில் இருபத்தைந்து பெண்களைப் பெறலாம். அவை ஒவ்வொன்றும் சில நாட்களில் குழந்தைகளைப் பெறக்கூடியவையாகின்றன. இதனால் இவை கணக்கற்ற எண்ணிக்கையிற் பெருகிவிடுகின்றன. இந்தப் பருவம் முடிகின்ற சமயத்தில் ஆண்களூம், முட்டையிடும் பெண்களூம் உண்டாகின்றன. அப்போது ஆணும் பெண்ணும் சேர்கின்றன. விந்தணுவாற் கருவுற்ற முட்டைகளைப் பெண் இடுகின்றது. அந்த முட்டைகளே முன்னே சொன்ன குளிர்கால முட்டைகள். இறக்கை முளைத்த பூச்சிகள் வேறு இடங்களுக்குப் பறந்துசென்று புதுச்செடிகளைப் பற்றும். இவ்வாறு இந்த் இன்ம் பரவுகின்றது. சில இனங்களிலே வாழ்க்கை வட்டம் முழுவதும் ஒரே ஆதாரச் செடியிலேயே (host plant) நடக்கும். மற்றும் சில இனங்கள் இலையுதிர்காலத்தில் வலசை போகின்றன. அந்த அசுகுணிகள் தாம் வேனிலில் வாழ்ந்துவந்த செடியைவிட்டுக் குளிர்காலத்தில் தமக்கு ஆதாரமாக இருக்கக்கூடிய வேறெரு வகைச் செடிக்குவலசை போகின்றன. அந்தக் குளிர்கால ஆதாரச் செடியிலே ஆணாற் கருவுற்ற குளிர்கால முட்டைகள் இடப்படுகின்றன. ஆப்பிள், பருத்தி, வெள்ளரி, முலாம்,பட்டாணி, சோளம், முதலிய பலவற்றிற்கு அசுகுணி பெருங்கேடு விளைக்கின்றது. புகையிலைத் தண்ணீரும் சவர்க்காரமும் கொண்டு அசுகுணி வளராமலும் பரவாமலும் தடுக்கலாம்.

அசுட்டோஷ் முக்கர்ஜி (1864-1925): இவர் 1864 ஜூன் 29-ல் கல்கத்தாவில் பிறந்தவர். இவர் தந்தையார் கங்கா பிரசாத் முக்கஜி. இவர் சிறுவயதிலிருந்தே கணிதத்தில் மிகுந்த ஆர்வமுடையவராய்த்

அசுட்டோஷ் முக்கர்ஜி

தேர்ச்சி பெற்று வந்தார். 1885-ல் கணிதத்தில் எம்.ஏ. பட்டமும் 1888-ல் சட்டத்தில் உயர்தரப் பட்டமும் பெற்றார் .1904-ல் இவர் கல்கத்தா உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக நியமனம் பெற்றார். 1923 வரையில் இவர் மிகுந்த திறமையோடும் புகழோடும் இப்பதவியை வகித்து வந்தார். 1920-ல் சில மாதங்கள் இவர் தலைமை நீதிபதியாகவும் அலுவல் பார்த்தார். இவர் வங்கான லெஜிஸ்லேடிவ் கவுன்சிலிலும், டெல்லி கவுன்சிலிலும் கல்கத்தாக் கார்ப்பொரேஷனிலும் அங்கத்தினராயிருந்தார்.

இவர் 1906லிருந்து 1916 வரையில் கல்கத்தாப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரா யிருந்தார். அந்தப் பல்கலைக் கழகத்தை மிகச் சிறந்த ஒரு கல்வி நிலையமாகச் செய்த பெருமை இவரையே சாரும்.

இவர் நம்நாட்டுப் பண்டைய வழக்கங்களைக் கைவிடாமல் மேற்கொண்டு ஒழுகினார். பெற்றேர் மனம் வருந்தாமலிருக்கவேண்டு மென்று கடல்கடந்து மேல்நாடுகளுக்கு மேற்படிப்பை முன்னிட்டுச் செல்லவில்லை. ஆயினும் இவர் பிற்போக்கான கொள்கை உடையவரல்லர். இவர் விதவையாகிவிட்ட தம் மகள் கமலாவிற்கு மறுமணம் செய்துவைத்தார். இவர் மகனை மேற்படிப்பிற்கு ஐரோப்பாவிற்கு அனுப்பினார். 1921-ல் காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தின் ஒருபகுதியாக மாணவர்களைப் பள்ளிகளிலிருந்து நீங்குமாறு கூறியதை இவர் எதிர்த்தார். கமலா சொற்பொழிவு நிதி என்று இவர் தம் மகள் பெயரால் ஒரு நிதி ஏற்படுத்தி, ஆண்டுதோறும் அறிஞர் ஒருவரைக்கொண்டு சொற்பொழிவு நிகழ்த்த ஏற்பாடு செய்தார். சியாம பிரசாத் முக்கர்ஜி இவர் புதல்வராவர். இவர் 1925 மே25-ல் இறந்தார் .

அசுணம் : இசையை அறிவதொருவிலங்கென்பர் (அசுண நன்மா - பெருங்கதை : 47:241). யாழொலியைக் கேட்டு மகிழ்தலும் பறையொலியைக் கேட்டுத் துன்புறுதலும் அசுணத்திற் கியல்பு என்பர். (பெருங்:47:241-43). இதன் இயல்பைக்கலி:143, நான்மணி:4, சீவக:1402, கம்பராமாயணம்-அவையடக்கம் முதலியவற்றிற் காண்க. தலைவன் பிரிவைப் பொறாத தலைவியின் நிலைக்கு அசுணம் பறையொலிகேட்டு வருந்தும் நிலையை உவமை காட்டுவார் (பெருங்:47:241--45). சூடாமணி நிகண்டு இதனைக் கேகயம் என்றும் கூறும் (சூடா:விலங்கின்:54). இதனைப் பறவையென்பாரும் உளர். இதன் உருவம் நிறம் முதலியவை தெரியவில்லை.

அசுரர் : காசிபனுக்குத் திதியின் வயிற்றிற் பிறந்த மகனின் மரபினர் ; சுரராகிய தேவர்களுக்குப் பகைவர். இவர்கள் திதியின் வழிவந்தோராதலால் தைத்தியரெனவும்படுவர் .

அசுவகந்தி : பாக்க: அமுக்கிரா.

அசுவகோஷன் : சமஸ்கிகருத இலக்கியத்திலும் பெளத்த மகத்திலும் சிறப்புற்ற ஆசிரியன். முதலில் அந்தணனாயிருந்து பின் பெளத்தம் தழுவியவன். இவன் ஊர் அயோத்தி. இவன் தாய் சுவர்ணாட்சி. கி.பி முதல் நூற்றாண்டில் வடமேற்கிந்தியாவில் ஆண்டு வந்த கனிஷ்க மகாராஜனின் அவையில் இவன் இருந்தான் எனக் கருதப்படுகிறது. ஆனால், சமீபத்தில் இவனுடைய காலம் கி.மு. முதல் நூற்றாண்டாயுமிருக்கலாம் என்று சில ஆராய்ச்சியாளர் எண்ணுகின்றனர். பெளத்த மதத்தில் முதற்பெங் கவி அசுவகோஷன் ஆவான்.

இவனுடைய சிறந்த காப்பியம் புத்த சரிதம். இது புத்த பகவானின் சரிதையை 28 சருக்கங்களில் கூறுவது. இந்தியாவில் இந்த நூலின் ஒரு பகுதியே அகப்பட்டிருக்கிறது; முழு நூலும் சீனத்திலும் திபத்திலும் மொழிபெயர்ப்பு மூலம் காப்பாற்றாப்பட்டடிருக்கிறது. இவனுடைய இரண்டாவது காப்பியம் செளந்தரநந்தம். இதில் புத்தர் தமது ஒன்றுவிட்ட தம்பி நந்தனை, அவன் மனைவியிடம் அவனுக்கிருந்த மோகத்திலிருந்து நீக்கித் துறவியாக்கிப் பெளத்த சங்கத்தில் புகுத்திய கதை வருணிக்கப்பட்டிருக்கிறது. இதில் காப்பிய முறையிருப்பதோடு, உபதேசங்கள் பின்பாகத்தில் மிகுதியாகக் காண்ப்படும். மனச்சாந்தியையும், வீடுபேற்றையும் நோக்கமாகக் கொண்டு, காப்பியநடை இங்குக் கையரளப்பட்டதென ஆசிரியனும் இறுதியில் கூறுகிறான்.

தனக்கு முன்னிருந்த வைதிக மகத்தைத் தாக்கும் வஜ்ரஸூசி என்னும் சிறு நூலொன்றை இவன் எழுதியதாகச் சிலர் சொல்லுவார்கள். இந்நூலை இவன்