பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஞ்சிலாந்தையார்

37

அட்டார்னி ஜெனரல்

நானூற்திற்‌ புகழ்ந்துள்ளார்‌. அஞ்சி அத்தை மகள்‌ எனின்‌, வள்ளலாகிய அதியமான்‌ அஞ்சியின்‌ அத்தை மகள்‌ என நினைக்கவும்‌ இடமுண்டு.(அகம்‌. 352).

அஞ்சிலாந்தையார்‌ : சங்ககாலப்‌ புலவர்‌. அஞ்‌சியாந்தையார்‌ என்றும்‌ இவர்‌ பெயர்‌ காணப்படுறது. அஞ்சில்‌ என்னும்‌ ஊரினர்‌. ஆதன்‌ தந்‌தை ஆந்தை என மருவும்‌. ஆந்தையாரெனும்‌ பெயரினர்‌ பலர்‌ காணப்பட்டதால்‌ இவர்‌ அஞ்சில்‌ ஆந்தையார்‌ என ஊர்ப்பெயருடன்‌ இணைக்கப்‌ பெற்றார்‌. இவர்‌ பாடிய செய்யுட்கள்‌ 2.(நற்‌. 233; குறுமந். 294).

அஞ்செங்கோ : அஞ்சு தெங்கு என்பதன்‌ சிதைவு. திருவிதாங்‌கூரில்‌ கன்னியாகுமரியிலிருந்து 79 மைலில்‌ உள்ளது. இப்போது மீன்பிடிக்கும்‌ கிராமம்‌. இந்தியாவில்‌ ஆங்கிலேயர்‌ முதன்‌ முதல்‌ ஏற்படுத்‌திய குடியிருப்புக்களுள்‌ ஒன்‌று. அவர்கள்‌ கோட்டையும்‌ பண்டகசாலையும்‌ கட்டியிருந்தனர்‌. இப்போது அவை சிதைந்து கிடக்கின்‌றன.

அட்சபாதர்‌ : கௌதமர்‌ என்னும்‌ முனிவர்‌. காலிலே கண்‌ணுள்ளவர்‌ என்‌ன்று பொருள்படும்‌. இவர்‌ நையாயிக நூல்‌ செய்தவர்‌.

அட்சம்‌ (Latitude) : ஓரிடத்தின்‌ அட்சம்‌ என்பது பூமத்தியரேகையிலிருந்து தெற்கிலோ, வடக்கிலோ அவ்விடத்திற்குள்ள் கோணத்‌ தொலைவு. இது பாகைகளில்‌ குறிப்பிடப்படும்‌. புவியானது திருத்தமான கோள வடிவுள்ளதாயின்‌ ஒரே தீர்க்கரேகையிலுள்ள இரு இடங்களின்‌ அட்சரேகைகளின்‌ வேறுபாடு ஒரு பாகை என்றால்‌ இந்த இடங்கள்‌ புவியின்‌ எப்பகுதியில்‌ இருந்தாலும்‌ அவற்றினிடையே உள்ள தொலைவு மாறாமல்‌ இருக்கும்‌. ஆனால்‌, துருவங்களில்‌ சற்றுத்‌ தட்டையாக இருப்பதால்‌ இத்தொலைவு பூமத்தியரேகையின்‌ அருகே குறைவாகவும்‌, துருவங்களின்‌ அருகே அதிகமாகவும்‌ இருக்கும்‌. இதன்‌ சராசரி மதப்பு சுமார்‌ 70 மைல்‌. புவியில்‌ ஓர்‌ இடத்தின்‌ பரப்பிற்குச்‌ செங்குத்‌தாக உள்ள கோட்டிற்கும்‌ பூமத்தியரேகைக்கும்‌ இடையே உள்ள தொலைவு பூகோள அட்சம்‌ (Geographical L.) எனப்படும்‌. பூமத்தியரேகையின்‌ தளத்திற்‌கும்‌, புவி மையத்தை ஓர்‌ இடத்தோடு இணைக்கும்‌ கோட்டிற்கும்‌ இடையே உள்ள கோணம்‌ அந்த இடத்‌தின் புவிமைய அட்சம்‌ (Geocentric L.) எனப்‌படும்.

புவியின்‌ மேலுள்ள இடங்களின்‌ இருப்பிடத்தைப்‌ பூகோள அட்சத்தால்‌ குறிப்பது போலவே, வானிலுள்ள பொருள்களின்‌ இருப்பிடத்தை வான அட்சம்‌ (Celestial L.) என்ற அளவினால்‌ குறிப்பீடுகிறார்கள்‌. இது வான மத்திய ரேகையிலிருந்து வடக்கிலோ தெற்கிலோ அப்பொருளுக்குள்ள கோணத்‌ தொலைவு. இது துருவத்‌திலிருந்து அந்தப்‌ பொருளுக்குள்ள கோணத்‌ தொலைவின்‌ அனுபூரகமாகும்‌. பூமி சுற்றுவதால்‌ ஈட்சத்திரங்‌களின்‌ இருப்பிடம்‌ மாறுவதுபோல்‌ தேரன்றினும்‌ அவற்றின்‌ துருவதூரம்‌ மாறுவதில்லை. இதனால்‌ அவற்‌றின்‌ வான அம்சமும்‌ மாறாது.

புவியின்‌ துருவங்கள்‌ நிலையாக இல்லாது இடம்‌ மாறுவதால்‌ பூமத்தியரேகையும்‌, அட்சங்களும்‌ காலப்போக்கில்‌ மாறுகின்றன. இந்த மாற்றங்கள்‌ சுமார்‌ 429 நாட்‌களுக்கு ஒருமுமை சீராக நிகழ்கின்‌றன. வானிலை விளைவுகளாலும்‌ துருவங்களில்‌ சில மாறுதல்கள்‌ நிகழ்ந்‌து அட்‌சங்கள்‌ மாறுகின்‌றன. சர்வதேசப்‌ புவியியல்‌ சங்கம்‌ இந்த மாறுதல்களை ஆராய்ந்தறிவதற்காக ஏறக்குறைய ஒரே அட்சரேகையிலுள்ள பல இடங்களில்‌ ஆராய்ச்சி நிலையங்களை ஏற்படுத்தியுள்ளது

அட்சய குமாரன்‌ : இராவணன்‌ குமாரர்‌களுள்‌ ஒருவன்‌. அனுமனால்‌ கொல்லப்பட்டவன்‌. இவனுக்கு அட்சன்‌, அட்சயன்‌ என்‌ற பெயர்களும்‌ உண்டு.

அட்சயத்திரிதியை வைகாசிமாதச்‌ சுக்கில பட்சத்‌ திரிதியை. சித்திரை மாதம்‌ சுக்ல பட்சத்‌திரிதியை முதல்‌ ஒரு மாதம்‌ வரையில்‌ பார்வதி தேவியை வழிபடுவதுண்டு.

அட்டவணைப்படுத்தி (Tabulator): பார்க்க: செயலகக்‌ கருவிகள்‌.

அட்டவால்பா (Atahualpa) (1500?—1598) பெரு என்னும்‌ நாட்டை ஆண்டுவந்த இன்கா இனத்‌தவர்களில்‌ கடைசி அரசன்‌. இவன்‌ தந்‌தை 1595-ல்‌ இறந்ததும்‌, இவனுக்கும்‌ இவன்‌ ஒன்றுவிட்ட சகோதரன்‌ ஒருவனுக்கும்‌ அரசுரிமைச்‌ சச்சரவுகள்‌ நடந்தன. அவற்றில்‌ இவனே வென்று அரசனானான்‌. அக்காலத்‌தில்‌ ஸ்பெயினிலிருந்து தென்‌ அமெரிக்காவிற்கு வந்திருந்த பிசாரோ என்பவன்‌ 1599-ல்‌ அட்டவால்‌ பாவைக்‌ கிறிஸ்தவனாகச்‌ சொன்னான்‌. அட்டவால்பா அவ்வேண்டுகோளை மறுத்ததில்‌ வியப்பில்லை. இதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு பிசாரோ தனது ஆட்‌களோடு பெருவைத்‌ தாக்‌கி அட்டவால்பாவைச்‌ சிறை செய்தான்‌. இக்கொடுமையைக்‌ கண்டு அஞ்சிய அட்டவால்பா ஓரு அறையைப்‌ பொற்காசுகளால்‌ நிரப்பத்‌ தருவதாகவும்‌ அதற்குப்‌ பதிலாகத்‌ தன்னை விடுவித்து விடும்படியும்‌ கேட்டுக்கொண்டான்‌. பொற்காசுகளைப்‌ பெற்றுக்கொண்ட பிசாரோ அட்டவால்பாவை வீடுவிப்‌பதற்குப்‌ பதிலாகக்‌ கட்டிவைத்துக்‌ கொளுத்தி விட்டான்.

அட்டாக்‌ : பாகிஸ்தான்‌ மேற்கு பஞ்சாப்‌ மாகாணத்தில்‌ இதே பெயருள்ள மாவட்டத்தின்‌ தலைநகர்‌. இது பெஷாவரிலிருந்து 47 மைல்‌ தொலைவில்‌ சிந்து நதிக்கரையில்‌ உள்ளது. இவ்வூரில்‌ மலையிடுக்கின்‌ வழியே சிந்து நதி பாய்ந்தோடுவது மிக அழய காட்சியாகும்‌. இவ்வூரிலுள்ள கோட்டையை அக்பர்‌ கட்டினார்‌. இதன்‌ அருகே பெட்ரோலிய எண்ணெய்க்‌ கிணறுகள்‌ உள்ளன. மாவட்டத்தின்‌ மக்‌: 67,875 (1941).

அட்டார்னி ஜெனரல்‌ (Attonrney General) : இங்கிலாந்திலும்‌, அமெரிக்காவிலும்‌ அட்டார்னி ஜெனரல்‌ என்பவர்‌ அரசாங்கத்‌தால்‌ நியமிக்கப்படும்‌ தலையாய சட்ட உத்தியோகஸ்தராவர்‌. அவர்‌ அரசாங்கம்‌ சம்‌பந்தப்பட்ட விசாரணைகளில்‌ அரசாங்கத்துக்காக ஆஜராவார்‌. இந்தியாவில்‌ ஒவ்வொரு இராச்சியத்துக்கும்‌ ஒரு அட்வொக்கேட்டு ஜெனரல்‌ (த. ௧.) கவர்னரால்‌ நியமிக்கப்படுகிறார்‌. இந்திய அரசாங்கத்துக்காக அட்‌டார்னி ஜெனரல்‌ நியமிக்கப்படுகிறார்‌. இந்திய அரசியல்‌ அமைப்பின்‌ 76-வது பிரிவானது உச்ச நீதிமன்‌றத்தின்‌ (Supreme Court) நியாயாதிபதியாகத்‌ தேர்ந்தெடுக்கப்படத்‌ தகுதியுடைய ஒருவரை ராஷ்டிரபதி அட்டார்னி ஜெனரலாக நியமிக்கவேண்டும்‌ என்று கூறுகிறது. சட்ட சம்பந்தமாக எந்தக்‌ கடமைகளைச்‌ செய்யும்படி. ராஷ்டிரபதி அவரைக்‌ கேட்டுக்‌ கொள்‌கிறாரோ அவற்றையும்‌, அரசியல்‌ அமைப்புச்‌ சட்டத்‌தின்படியோ மற்றச்‌ சட்டங்களின்படியோ அவர்‌ எந்தக்‌ கடமைகளைச்‌ செய்யவேண்டுமென்‌று இருக்கிறதோ அவற்றையும்‌ செய்ய அவர்‌ கடமைப்பட்டவர்‌. அக்‌கடமைகளை நிறைவேற்றும்‌ பொருட்டு அவர்‌ இந்தியாவிலுள்ள எல்லா நீதிமன்றங்களிலும்‌ ஆஜராக உரிமை உடையவர்‌. ராஷ்டிரபதியின்‌ விருப்பம்‌ உள்ளவரை