பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/761

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

696

இந்தியா

னாக இந்தியக் கைத்தொழிற் பொருள்களுக்கு ஏராளமான கிராக்கி ஏற்பட்டுக், கைத்தொழில்கள் செழித்து வளர்ந்தன. மேலும் இந்தியக் கைத்தொழில் வளராவிடில் யுத்த உதவிக்கு இடையூறு ஏற்படும் என்பதைப் பிரிட்டிஷ் அரசாங்கத்தார் உணர்ந்தனர். இந்தியக் கைத்தொழில் நிலைமையைப் பரிசீலனை செய்து, மேலும் வளர்ச்சிக்கான ஆலோசனை கூற 1916-ல் கைத்தொழில் கமிஷன் ஒன்று நியமித்தனர். 1917-ல் இந்தியாவின் பொருட் சாதனங்களை யுத்த உதவியில் முற்றிலும் ஈடுபடுத்த இந்தியன் மியூனிஷன்ஸ் போர்டு (Indian Munitions Board) நியமிக்கப்பட்டது. இப்போர்டு இந்தியாவில் நடந்துவந்த கைத்தொழில்களுக்கும், இந்திய முதலாளிகள் புதிதாகக் கைத்தொழில்களை ஏற்படுத்துவதற்கும் பல உதவிகள் செய்தது.

1916-ல் தாமஸ் ஹாலண்டு தலைமையில் நியமிக்கப்பட்ட கைத்தொழில் கமிஷன் 1918-ல் அறிக்கை விடுத்தது. இவ்வறிக்கையில் இந்தியா தன் சுய தேவைகளைத் தானே பூர்த்தி செய்துகொள்ளும் நிலையில் அமைய வேண்டுமென்றும், அதற்காகக் கைத்தொழில்களை வளர்க்க அரசாங்கம் முழு உதவியும் செய்ய வேண்டுமென்றும் முக்கியமாக வற்புறுத்தப்பட்டன. கமிஷன் செய்த சிபார்சுகள் சிலவற்றைத்தான் அரசாங்கத்தார் ஏற்றனர். யுத்தம் முடிந்தவுடன் கைத்தொழில் இலாகாக்கள் ஏற்படுத்தப்பட்டன. 1919-ல் கைத்தொழில் விஷயங்கள் மாகாண அரசாங்கத்தின் நிருவாகத்திற்குட்பட்டன. ஆனால் மாகாணங்களுக்குக் கைத்தொழில்களை வளர்ப்பதற்கு வேண்டிய வசதிகள் இல்லை. மேலும் 1920க்குப்பின் வியாபார மந்தம் ஏற்பட்டுக் கைத்தொழில்களுக்குக் குறைவேற்பட்டது. தவிர அயல்நாட்டுப் போட்டியும் உண்டாயிற்று. சணல் தொழிலைத் தவிர மற்ற எல்லாக் கைத்தொழில்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டது. இறக்குமதி வரியின் மூலம் அயல்நாட்டுப் போட்டியைத் தடுக்க வேண்டுமென்று முதலாளிகள் கேட்டனர். 1921-ல் இந்திய வருமான ஆராய்ச்சிக்கமிஷன் (Indian Fiscal Commission) நியமிக்கப்பட்டது. இக்கமிஷன் 1922-ல் சமர்ப்பித்த அறிக்கையில் நாட்டின் பரப்பு, மக்கள் தொகை, வளம் முதலியவைகளுக்கு ஏற்றவாறு இந்தியாவின் கைத்தொழில்கள் வளர்ச்சியடையவில்லையென்றும், கைத்தொழில் வளர்ச்சிக்காகக்குறிப்பிட்ட சில கைத்தொழில்களுக்கு இறக்குமதி வரியின் மூலம் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்றும் கூறியது. பாதுகாப்புக்குரிய கைத்தொழில்களுக்கு ஏராளமான கச்சாப் பொருள்கள், தொழிலாளிகள், உள்நாட்டுக் கிராக்கி, எந்திரங்களை இயக்க மலிவான மின்சாரம் அல்லது வேறு சக்தி சாதனங்கள் முதலிய வசதிகள் இருக்க வேண்டும். மேலும் அக்கைத்தொழில் நாளடைவில் பாதுகாப்பின்றி அயல் நாட்டுப் போட்டியைத் தாங்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். மேற்கண்ட வகையில் அளிக்கப்படும் பாதுகாப்புக்குப் பகுத்தறிந்தளிக்கப்படும் பாதுகாப்பு (Discriminating Protection) என்று பெயர். நாட்டின் அடிப்படையான அல்லது மூலாதாரக் கைத்தொழில்களுக்கு (Basic Industries) நன்கொடை (Bounties)யளிக்க வேண்டுமென்றும், பாதுகாப்புக்குரிய கைத்தொழில்களைத் தேர்த்தெடுத்துச் சிபார்சு செய்யச் சரக்கு வரி போர்டு (Tariff Board) ஒன்று நிறுவ வேண்டுமென்றும் கமிஷன் கூறிற்று. இக்கமிஷனின் சிபார்சுகளை அரசாங்கத்தார் ஒப்புக்கொண்டனர். 1923-ல் சரக்குவரி போர்டு நியமிக்கப்பட்டது. இப்போர்டு 1939 வரை யிருந்தது. அநேக கைத்தொழில்களைப்பற்றி விசாரணைகள் நடத்திப் பல கைத் தொழில்களுக்குப் பாதுகாப்புச் சிபார்சு செய்தது. இதனால் பல கைத்தொழில்கள் நல்ல வளர்ச்சியடைந்தன.

தீக்குச்சித் தொழில்: i 1922க்குப் பின்னரே இக் கைத்தொழில் ஏற்றமடைந்தது. முக்கியமாக, சுவீடன் நாட்டுக் கூட்டுக் கம்பெனி (Combine) ஒன்று இந்தயாவில் பல தீக்குச்சித் தொழிற்சாலைகளை ஏற்படுத்தியது. இக் கம்பெனியின் போட்டியைத் தடுக்க இந்தியத் தொழில் முதலாளிகள் பாதுகாப்பு வேண்டுமென்று கூறினர். ஆனால் நாட்டில் உள்ள கம்பெனிகளுக்குள் யாதொரு வித்தியாசமும் பாராட்டாமல் அயல் நாட்டிலிருந்து வரும் சரக்கின்மீது 1928-ல் அரசாங்கம் பாதுகாப்பு வரி போட்டது. இன்று அயல் நாட்டு இறக்குமதி மிகக் குறைவு.

காகிதம் செய்தல்: 1918 லிருந்து காகிதத் தொழிற்சாலைகள் பல இந்தியாவில் நிறுவப்பட்டன. 1925-ல் இத் தொழிலுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இதன் பயனாக இத் தொழில் நல்ல வளர்ச்சியடைந்தது. மேற்கூறியவைகளைத் தவிரப் பல்வேறு கைத்தொழில்களும் வளர்ந்து வந்தன. நிலக்கரித் தொழில் 1944-ல் அரசாங்கத்தாரின் கட்டுப்பாட்டுக்குட்பட்டது. பல வகையில் சர்க்கார் உதவி பெற்று நிலக்கரி எடுப்பும் அதிகரித்து வருகிறது. தோல் பதனிடும் தொழிலுக்கு 1935 வரை பதனிடாத தோலின் மேல் ஏற்றுமதி வரி போட்டு அரசாங்கம் உதவி செய்தது. இரண்டாவது யுத்தம் நல்ல ஏற்றம் அளித்தது. முதல் யுத்தத்தின்பின் இந்தியாவில் சிமென்டு கம்பெனிகள் ஏற்பட்டன. ஆனால் 1923-25-ல் வியாபார மந்தத்தினால் நெருக்கடி ஏற்பட்டது. கம்பெனி முதலாளிகள் பாதுகாப்பு வேண்டுமென்று கூறினர். ஆனால் சரக்கு வரி போர்டு சிபார்சு செய்யவில்லை. ஏனெனில் இத்தொழிலுக்கு இந்த நிலை அயல் நாட்டுப் போட்டியினால் ஏற்படவில்லை யென்றும், உள் நாட்டு உற்பத்திப் பெருக்கத்தால் ஏற்பட்டதென்றும் அது கூறியது. 1936-ல் எல்லாக் கம்பெனிகளும் அசோசியேட்டெட் சிமென்டு கம்பெனி என்ற பெயரில் ஒன்றாக இணைக்கப்பட்டன. இவ்விணைப்பினால் உள்நாட்டுப் போட்டி குறைந்து இத்தொழிலுக்கு வளர்ச்சி யேற்பட்டது. 1936-37-ல் இன்னும் பல புதிய கம்பெனிகள் தோன்றின. புதுக் கம்பெனிகளால் மறுபடியும் போட்டி உண்டாயிற்று. புதுக் கம்பெனிகளை ஒன்றாக இணைக்க முயற்சிகள் செய்தும் வீணாயின. சமீபகாலத்தில் எல்லாக் கம்பெனிகளுக்கிடையேயும் ஒப்பந்தம் ஏற்பட்டுப் போட்டி நின்றது. இரண்டாவது யுத்தத்தினால் இத்தொழிலுக்கும் நல்ல ஏற்றமுண்டாகியது. இதுவரை கூறிய பழைய கைத்தொழில்கள் தவிர. 1939லிருந்து பிளாஸ்டிக் சாமான்கள், நெசவு எந்திரங்கள், எந்திரக் கருவிகள், மின்சாரச் சாமான்கள் முதலியன செய்தல், கப்பல் கட்டுதல் போன்ற பலவித புதிய தொழில்களும் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றன. பார்க்க : கைத் தொழில்கள் - இந்தியக் கைத்தொழில்.

இந்தியாவின் வெளிநாட்டு வாணிகம்: 19ஆம் இந்தியாவின் நூற்றாண்டின் இடைக்காலத்திலிருந்து இந்திய வாணிகத்தில் புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்பட்டன. ஏற்றுமதியும் இறக்குமதியும் மிகவும் பெருகின. அதுவரை நேர்த்தியான பஞ்சு பட்டு ஆடைகள், அவுரிச் சாயம், வெடியுப்பு முதலிய பண்டங்களை ஏற்றுமதி செய்து, தங்கம், வெள்ளி, கம்பளி ஆடைகள் முதலியவைகளை இறக்குமதி செய்த இந்தியாவிலிருந்து உணவுத் தானியங்கள், தேயிலை, பருத்தி, சணல், எண்ணெய்