பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/798

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தோ-சீனா

733

இந்தோ-சீனா

2,60,00,000 பேர் தெலுங்கும், 2,00,00,000 பேர் தமிழும், 1,10,00,000 பேர் கன்னடமும், 90,00,000 பேர் மலையாளமும் பேசுபவர்.

IV. இந்தியாவில் இந்தோ-ஆரிய மொழிகளைப் பேசுபவர்களே மக்கள் தொகையில் பெரும்பான்மையோர். இம்மொழிகளில் முக்கியமானவை இந்தி, வங்காளி, பீகாரி, மராத்தி, பஞ்சாபி, ஒரியா, குஜராத்தி, சிந்தி, காச்மீரி, சிங்களம், நேவாரி ஆவன.

இந்தியாவில் 7,90,00,000 மக்களால் இந்தி பேசப்படுகிறது. இவர்கள் மத்தியப் பிரதேசத்திலும் உத்தரப் பிரதேசத்திலும் உள்ளனர்.

கங்கைச் சமவெளியில் வசிக்கும் 5,30,00,000 மக்களால் வங்காளி பேசப்படுகிறது. நாகரி லிபியில் எழுதப்படுகிறது.

பீகாரில் வழங்கப்படும் பீகாரி மொழி 3,70,00,000 மக்களால் பேசப்படுகிறது. இது கைத்தி லிபியில் எழுதப்படுகிறது.

மராத்தி 2,10,00,000 மக்களால் பம்பாய், மத்தியப் பிரதேசம், ஐதராபாத், பேரார், கோவாப் பிரதேசங்களில் பேசப்படுகிறது. நாகரி லிபியில் எழுதப்படுகிறது.

பஞ்சாபி கிழக்குப் பஞ்சாபிலும் தெற்கு ஜம்முவிலும் 1,300,00,000 மக்களால் பேசப்படுகிறது. லாண்டா லிபியில் எழுதப்படுகிறது.

ஒரியா 1,10,00,000 மக்களால் ஒரிஸ்ஸாவில் பேசப்படுகிறது. நாகரி போன்ற லிபியில் எழுதப்படுகிறது.

குஜராத்தி 1,00,00,000 மக்களால் கூர்ஜரத்தில் பேசப்படுகிறது. நாகரி லிபியில் எழுதப்படுகிறது.

காச்மீரி சுமார் 10,00,000 மக்களால் பேசப்படுகிறது. இது பாரசீக லிபியில் எழுதப்படுகிறது. இது இந்தோ-ஆரிய மொழி வகுப்புக்களில் டார்டிக் (Dardic) வகுப்பைச் சேர்ந்தது.

இன்னும் நேபாளத்தில் பேசப்படும் நேவாரி மொழியும் இலங்கையில் பேசப்படும் சிங்களமும் இந்தோ-ஆரிய மொழிகளாகும். சீ. ஜே. ஜெ.


இந்தோ-சீனா: ஆசியாவின் தென்கிழக்குக் கோடியிலுள்ளது. 1946க்கு முன்பு பிரெஞ்சுக்காரர்களுக்குரித்தாய் ஒரே பிரதேசமாயிருந்த இந்த நாடு 1949லிருந்து பிரெஞ்சு ஐக்கியத்தில் அடங்கிய மூன்று உறுப்பு நாடுகளாகப் பிரிந்துள்ளது; வியட்நாம், கம்போடியா, லாவோஸ் என்னும் மூன்றும் இப்போது பிரெஞ்சு ஐக்கியத்தின் பகுதிகளாம்.

சீயமும் இந்தோ-சீனாவும் சேர்ந்து ஆசியாவின் தென்கிழக்கு மூலையில் ஒரு தீபகற்பமாகின்றன. பரப்பு : 2,85,794 ச.மைல். மக் : சு.2,70,30,000 (1949). மேகாங் ஆறும் செவ்வாறும் இங்குள்ள இரு முக்கியமான ஆறுகள். இங்கு வெப்பநிலை சாதாரணமாக மிகுதியாகவே இருக்கிறது; மழைகாலத்தில் விடாமழை பெய்கிறது. தங்கம், இரும்பு, நாகம், நிலக்கரி, வெள்ளி, வெள்ளீயம், மாங்கனீசு, டங்ஸ்டன், குரோமியம், அன்டிமனி முதலிய தாதுக்கள் மிகுதியாகக் கிடைக்கின்றன. நன்செய்ச் சாகுபடி ஏராளமாக நடைபெறுகிறது. இங்குள்ள ஆற்றுப்பெருக்கு இதற்குப் பயன்படுகிறது. இப்பிரதேசம் இயற்கை வளம் மிகுந்தது.

இந்நாட்டில் மங்கலான மஞ்சள் நிறமுள்ள மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் பேசும் மொழி ஏறத்தாழச் சீனமொழியை ஒத்திருக்கிறது. இவர்களுடைய பண்பாடு இந்தியர்களுடைய பண்பாட்டைப் பெரிதும் ஒத்திருக்கிறது; மிகப் பரவியுள்ள மதம் பௌத்தம். பெரும்பான்மை மக்கள் வேளாண்மையில் ஈடுபட்டவர்கள்.

அரிசி, ரப்பர், தேயிலை, காப்பி முதலியன முக்கிய விளைபொருள்கள். ஏற்றுமதியில் 2/3 பகுதி அரிசி. நெசவுத்தொழிலும் சிறிதளவு நடக்கிறது. பிரெஞ்சு ஆட்சி நாட்டின் கைத்தொழில் முன்னேற்றத்தை அதிகமாகக் கவனிக்கவில்லை.

இந்தோ-சீனா

2,400 மைல் நீளமுள்ள ரெயில்வேக்கள் இந்நாட்டில் போக்குவரத்திற்குதவுகின்றன. ஆறுகள் செல்லுமிடங்களில் படகுகளும், மலைப் பிரதேசங்களில் கோவேறு கழுதைகளும் சாமான்கள் ஏற்றிச் செல்லுகின்றன.

முக்கியமான நகரங்கள் : மக்: (1949ஆம் ஆண்டில்) சைகான் (வியட்நாம் தலைநகர்) :17,00.000; ஹானாய்: 2,17,000; ஹைபாங்: 92,000; நெம்பென் 1,28,950; (கம்போடியா தலைநகர்); வியன்டேன் (லாவோஸ் தலைநகரம்) : 13,700.

மானிடவியல் : இந்தோ-சீனாவிலுள்ள மக்கள் பல இனத்தார் சேர்ந்த குழுவினராவர். அதற்குக் காரணம் இந்த நாடு பலதடவை படையெடுப்புக்கு உள்ளாகியதேயாம். நாட்டிலுள்ள மக்களுள் ஐந்தில் நான்கு பகுதியினர் அனாமியர். அவர்கள் பெரும்பாலும் அனாம், டாங்கிங் கொச்சின் சீனா ஆகியவற்றில் வசிக்கிறார்கள். கம்போடியாவிலுள்ளவர்கள் கம்போடியர் அல்லது கெமர்கள். தென் அனாமிலுள்ளவர்கள் சாமியர் (Chamis). லாவோஸிலுள்ளவர்கள் லாவோஸர். நாட்டின் சுதேசிகள் காக்கள் (Khas) அல்லது மாயிகள் (Mois) என்று கூறப்படுவர். அச் சொற்களின் பொருள் அநாகரிகர் என்பதாம்.

இந்த மாயிகள் மற்றவர்களால் துரத்தப்பட்டு, நாட்டின் உட்பகுதிகளில் அங்குமிங்குமாகக் காணப்படுகின்றனர். செவ்வாற்றின் ஓரமாகவுள்ள மலைகளிலுள்ளவும் பலமாகவும் இருப்பர். அவர்கள் சதுரமான நெற்றி முவாங்குகள் (Moungs) அனாமியரைவிடப் பருமனாகயும், பெரிய முகமும், பலத்த தாடை எலும்புகளும் உடையவர்.

இந்தோ-சீனாவின் மலைத்தொடரின் நடுப்பகுதியிலும் தென் பகுதியிலும் மேற்கூறிய சாதியாருடன் மலேயா