பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடியார்க்குநல்லார்

48

அடிஸ் அபாபா

வன்” என்று இவர் எழுதியிருத்தல் இதற்குத் துணை செய்யும். சிவன் என்று குறிக்கவேண்டிய இடத்தில் இறைவன் என்ற பொதுப்பெயரைக் குறித்திருத்தலின் சிவனையே இறைவனாகக் கொண்டவர் இவர் என்று ஊகிக்க இடமிருத்தல் காண்க. இவருடைய காலம் கி. பி. 12ஆம் நூற்றாண்டு என்பர். நச்சினார்க்கினியரால் மறுக்கப்படுவனவற்றுள் சில இவருடைய கொள்கையாக இருத்தலால் இவர் நச்சினார்க்கினியர்க்கு முற்பட்டவர் என்பது அறியலாம்.

இவர், உரையெழுத எடுத்துக்கொண்ட சிலப்பதிகாரம், இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுங் கூறும் நூலாகும். இதற்கு உரை வகுக்க இயற்றமிழ்ப் பயிற்சியுடன் இசைத்தமிழ் நாடகத்தமிழ்ப் பயிற்சியும் நிரம்பியிருத்தல் வேண்டும். அடியார்க்குநல்லார், முத்தமிழிலும் தமக்குள்ள வித்தகத்தை இவ்வுரையில் நன்கு காட்டியுள்ளார். இவருரை யில்லையேல் இசைத் தமிழ் பற்றியும் நாடகத்தமிழ் பற்றியும் கூறும் பழைய நூல்கள் இருந்தன என்பதையே அறியவியலாது. இவர் உரை, முதலிலிருந்து ஊர்சூழ்வரி வரையுமே யுள்ளது. அரங்கேற்று காதைக்கு இவர் எழுதிய உரை மிக விரிவானது ; அருமையானது. இவர் மதுரைக் காண்டம் முழுமைக்கும் உரை எழுதியிருந்தார் என்பதைச் சில குறிப்புகளால் அறியலாம். இவர், மற்றையுரையாசிரியர்கள் போலன்றித் தாம் எடுத்துக் காட்டும் மேற்கோள்கள் இன்ன இன்ன நூல்களிலுள்ளன என்று பெரும்பாலும் புலப்படுத்தி யிருக்கின்றார். இவர் உரையில் இயற்றமிழ் விளக்கத்திற்கு 39, இசைத்தமிழ் விளக்கத்திற்கு 7, நாடகத்தமிழ் விளக்கத்திற்கு 10, ஆக 56 நூல்களிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளார்.

ஐந்திணைக்குமுரிய முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய இவற்றுள் ஒவ்வொன்றின் வகை பலவற்றிற்கும் சிலப்பதிகாரத்திலிருந்தே இவர் உதாரணங்காட்டி விளக்கியிருத்தல் பெரிதும் பாராட்டற்குரிய செயலாகும்.

”சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென” (இந்திர.-64) என்றும், ”ஆடித் திங்கள் பேரிருள் பக்கத்து அழல்சேர் குட்டத்து அட்டமி ஞான்று, வெள்ளி வாரத்து” (கட்டு. 133-5) என்றும் வருவது கொண்டு ஊகித்துக், கோவலன் கண்ணகி இருவரும் இன்ன காலத்துக் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து புறப்பட்டார்கள் என்பது முதலியனவற்றை இவர் எழுதுவதால் இவரது கணிதநூற் பயிற்சியை யறியலாம்.

இவர் உரைநடை சிலவிடத்து எதுகை மோனைக்ளுடன் கூடி இனிய சுவை பயந்து செய்யுள் நடைபோல் அமைந்துள்ளது. ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியே படிப்போர்க்கு அவ்வப்பகுதி ஆங்காங்குள்ள உரையாலேயே புலப்படவேண்டு மென்பது இவருடைய கருத்தாதலால், முன்னெழுதியவற்றையே பின்னும் எழுது மியல்பினர். இவர் மூலத்தில் எவ்விடத்தேனும் திசைச்சொல் வந்திருப்பின் அவற்றைத் தனித்தனியே எடுத்துக்காட்டி இன்ன சொல் இன்ன நாட்டின் வழக்கென்றும், முற்காலத்துப் பழமொழிகளின் கருத்து எவ்விடத் தேனும் வந்திருப்பின் அவற்றை யெடுத்துக் காட்டி இன்னது இன்ன பழமொழியென்றும் புலப்படுத்துவர். அணிகளையும் மெய்ப்பாடுகளையும் விளக்கிச் செல்வர். பதசாரம் எழுதுவதில் இவர்க்குள்ள திறமையை, (மனைய. 73-79) ”மாசறு பொன்னே வலம்புரி முத்தே” என்பது முதல், ”யாழிடைப் பிறவா இசையே யென்கோ” என்பது வரையுள்ள பகுதிக்கு இவர் எழுதிய விளக்கத்தா னறியலாம்.

ஒவ்வொரு காதையின் முடிவிலும் இஃது இன்ன செய்யுள் என்று விளக்கி எழுதுதலும், வினை முடிபுகளை விடாது கூறி அழகுடன் முடித்துக் காட்டுதலும் இவர் இயல்பாகும். பலரும் தமக்குத் தோற்றியாங்குப் பொருள் கொள்ளக்கிடந்த போற்றி என்பதை இவர் இகரவீற்று வியங்கோளாகக் கொண்டு ”போற்றுவாயாக” என்று பொருள் செய்திருக்கின்றார். முந்நீர் என்பதற்கு ”ஆற்று நீர் ஊற்றுநீர் மேனீர்” என்று பிறர்கூறும் உரையை உடன்படாது, ”ஆற்றுநீர் மேனீராகலானும்; இவ்விரண்டு மில்வழி ஊற்று நீருமின்றாமாதலானும் இவற்றை முந்நீரென்றல் பொருந்தியதன்று” என்று மறுத்து, ”முச்செய்கையுடைய நீர் முந்நீர் என்பது; முச்செய்கையாவன : மண்ணைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாம்” என்று இவர் எழுதியுள்ள பகுதியால் இவருடைய தருக்க வுணர்ச்சியும் ஆராய்ச்சியும் புலனாகும். செ. வே.

அடிலேடு: தென் ஆஸ்திரேலிய இராச்சியத்தின் தலைநகர். மக்: 4,70,000 (1949). இந்நகரின் ஊடே டாரன்ஸ் ஆறு கிழக்குமேற்காகச் செல்லுகிறது. ஆஸ்திரேலியாவிலுள்ள மிக அழகிய நகரங்களில் இது ஒன்று. 1847-ல் நிறுவப்பட்ட ஒரு பல்கலைக்கழகம் இங்குண்டு. இவ்வூரிலிருந்து மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் முதலிய நகரங்களுக்குப் பல சாலைகள் பிரிகின்றன. இங்கிருந்து 7 மைல் தொலைவில் அடிலேடு கடற்கரைப் பட்டினம் இருக்கிறது.

அடிவானம் (Horizon) : வானமும் புவியும் தொடுவதுபோல் தோன்றும் வட்டவடிவான கற்பனை வரை அடிவானம் எனப்படும். கடலில் இந்த வரையை மிகத் தெளிவாகக் காண முடிகிறது. ஒருவர் பார்க்கத்தக்க தொலைவின் எல்லை அடிவானமேயாகும். ஆகையால் அடிவானமானது பார்ப்பவர் இருக்கும் உயரத்தைப் பொறுத்து வேறுபடும். கடல் மட்டத்தில் நின்றுகொண்டு பார்க்கும் ஒருவருக்கு அடிவானம் சுமார் 2 மைல் தொலைவில் இருக்கும். ஆனால் சுமார் ஒரு மைல் உயரமுள்ள மலையின் மேல் நின்று பார்ப்பவர் தெளிவான நாளில் 96 மைல் வரை பார்க்க முடிகிறது.

அடிவானம்

வானவியலில் அடிவானம் என்பது வேறொரு கற்பனை வட்டத்தைக் குறிக்கும். வானக் கோளத்தின் பெரு வட்டங்களில் எது மட்டக்குண்டிற்கு நேர்க்குத்தான தளத்தில் உள்ளதோ அது அடிவானம் எனப்படும். இது தோற்ற அடிவானம் என்றும்,பார்ப்பவரின் வழியே வரையப்படும் தளத்திற்கு இணையாகப் புவியின் மையத்திலிருந்து வரையப்படும் தளம் யுக்த அடிவானம் (Rational h.) என்றும் அழைக்கப்படுகின்றன. ஜி. கு

அடிஸ் அபாபா (Addis Ababa) : அபிசீனியாவின் தலைநகரம்; அங்குள்ள மிகப்பெரிய நகரம். மக்: சு.