பக்கம்:கலைக் களஞ்சியம் அரேபியா-ஆக்டினாேமைகோசிஸ்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம்எக்க்சி அறிவுடை நம்பி

அறிவைப் பற்றி எதுவும் திட்டமாகக் கூற இயலாது என்பர்.இவர்கள் அறியொனுமைக் கொள்கையினர் எனப்படுவர்.

   அறியப்படும் பொருள்பற்றிய கொள்கைகள்:1.கருத்துக் கொள்கை:அறியப்படும் பொருள்,அறியும் கர்த்தாவைப்போல் சித்துப் பொருளாகவோ அல்லது சித்துப் பொருளை நாடி நிற்பதாகவோ உள்ளது.இக்கொள்கையினர் ஒரு பொருள் இருக்குமானுல் அதை யாரேனும் ஒருவர் அறிந்திருக்கவே வேண்டும் என்று கூறுவர்.ஆகவே இக்கொள்கையின்படி அனைத்தும் மனேமயம்.

2.புறப்பொருட் கொள்கை:அறியும் கர்த்தாவுக்கு வேறுகப் புறத்தே பொருள்கள் இருப்பதாகவும்ம,அவற்றின் அமைப்பு அறியும் கர்த்தாவின் வயப்பட்டதில்லை என்பதாகவும் இக் கொள்கையினர் கூறுவர்.

  அறிவுடை நம்பி  சங்க காலத்தவன்.இவனைப் பாண்டியன் அறிவுடை நம்பி எனவும் கூறுவர்.மக்கட்பேற்றின் பெருமையைப் பற்றிப் பாடியுளன்(பறம் 188).பிசிராந்தையரால்(பறம் 184) பாடப் பெற்றவன்.இப்பாண்டியன் நெய்தலையும் குறிஞ்சியையும் பாடியுள்ளான்.இவன் பாடல்கள் நான்கு:(நற்:15;குறுந்:230:புறம்:188;அகம்:28).
   அறிவுமுதற் கொள்கை  1.அரசியல்:தனி மனிதன் வாழ்க்கையயும் சமுக வாழ்க்கையயும் அறிவு ஒன்றையே கொண்டு வகுப்பது அவசியம் என்று ஏற்றுக் கொள்ளும் கொள்கை நீண்ட காலமாக உலகில் நிலவி வந்திருக்கிறது.மனிதனுக்கும் மற்றப் பிராணிகளுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்குள்ள பகுத்தறிவுத் திறனேயாகும்.அத்திறனைப் பயன் படுத்திக் கொள்வதால் அவன் மேன்மையடைகின்.மனித வாழவில் இயல்புக்கம் என்பது முக்கியமானதாகக் கருதப்பட்டு ன்வந்திருக்கிறதென்றாலும்,முன்னேற்றமடைந்த சமூகங்களில் தன் இச்சையாகிய அறிவின் ஆதிக்கமே விரும்பத்தகக்து.
  பண்டைய தத்துவானிகனான 'ஸ்டோயிக்குகள்' என்பவர்களும் ரோமானியர்களும் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டு விதிகள் மூலம் உலகப் பேரரசு வினங்கவேண்டும் என்னும் நோக்கமுடையவர்கள்.அறிவினால் ஏற்படும் உள்ளத் தெளிவு எல்லோருக்கும் பொதுவான உடைமை.அதைச் சார்ந்த கருத்துக்கள் எல்லா நாடுகளுக்கும்,எல்லாக் காலங்களுக்கும் ஏற்றவை, சிசேரோ போன்ற ரோமானிய அறிஞர்கள் உலக வாழ்க்கைக்கே அவற்றை அடிப்படையாகக் கொண்டு, சர்வவியாபகமாக ஏர்பாடுகளை அமைக்க முடியும் என்று எண்ணினார்கள். பன்னிரண்டாம் நூற்றாண்டில் பிரன்சில் புகழ்பெரற்றிருன்த அபிலார்டு என்பவருடைய அறிமுதற் கோட்பாடுகள் இத்துறையில் பிற்காலதில் உண்டான பல கருத்துகளுக்கு வழி கோலின . மறுமலர்ச்சிச் சகாப்தத்தின்போது மறுபடியும் அறிவில் நம்பிக்கை தோன்றிற்று என்றாலும், பல வறலாற்று நிகழ்ச்சிகள் அறிவு என்னும் அளவுகோலால் அளக்க முடியாதவை என்னும் கருத்தும் ஓங்கி நின்றது.
      17ஆம் நூற்றாண்டில் அறிவின் ஆதிக்கத்தில் நம்பிக்கை மீண்டும் தளிர்த்தது. 18ஆம் நூற்றாண்டில் "அதிகாரம் அறிவின் உறைவிடம்" என்பது போய்த்தனி மனிதனது சுதந்திரத்தை அறிவே தாங்கி நிற்கும் என்னும் கொள்கை பரவியது. 19ஆம் நூற்றாண்டில் ஹேகல் முதலிய தத்துவஞானிகள், வறலாற்றில் இத்தகைய கோள்கையை மாறாத உண்மையாகக் உண்மையாகக்கொள்ளக்கூடாது என்றும், அறிவு என்பது வரலாற்றுப் போக்கில் அவ்வப்போது மறுபட்டு விரிவடையும் சிந்தனையின் வழி என்றும் கருதினார்கள். ஹக்ஸ்லி முதலிய 19ஆம் நூற்றாண்டு ஆறிஞர்கள், 'அறியொணாமைக்கொள்கை'யைப் பற்றியும் இங்கு அறியவேண்டும்;கண்கூடு அல்லதவற்றையறிய முடியாது என்பது அவர்கள் கொள்கை.
 19ஆம் நூற்றாண்டில் வேறு ஒருவகை அறிவுமுதற் கோட்பாடும் பரவத் தொடங்கியது.மதம் முதலிய பண்டைத் தளைகளை நீக்கித் தனி மனிதன் சுய அறிவிற்குப் பூரண கயேச்சையளிக்க வேண்டும் என்பது இவ்வியக்கத்தின் அடிப்படையான நோக்கம்.அறிவு முதற்கொள்கை இயக்கத்தினரால் வெளியிடப்படும் ஓரளவுக்குப் பரவியிருக்கின்றன.
 எல்லா மனிதர்களும் அறிவை யடிப்படையாகக் கொண்டுதான் செயல் புரிகின்றார்கள் என்னும் கொள்கை தற்காலத்தில் சில உளவியலாரால் மறுக்கப்படுகின்றது.மனிதனைப் பல செயல்களுக்கும் தூண்டுகின்றன என்று உளவியலார்கள் ஆராய்ச்சி வாயிலாகக் கண்டுருக்கின்றனர்.

2.தத்துவம்:தத்துவ சாஸ்திரங்களெல்லாம் தொடக்கத்தில் சில கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டும்,மேற்கொள்ளுகின்ற கையாளும் முறைகளைக் கொண்டும் வெவ்வேறாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.அறிவுமுதற் கொள்கை என்பது அறிவையே உண்மையைக் கண்டு பிடிக்கும் அத்தரட்சிப் பிரமாணமாகவும்,தத்துவ ஆராய்ச்சிக்கு முடிவான உற்பத்தி ஸ்தானமாகவும் கொள்ளுகிறது.இது அனுபவத்தையே பொறுத்திருப்தான முறைக்கு மாறானது.அது சில முக்கியமான கருத்துக்களையாவது அல்லது காரணகாரிய முறைப்படி அமைந்துள்ள கொள்கைகளையாவது அறிவுக்கு மூலாதாரமாகக் கொண்டுள்ளது.ஆதலால் இதன் போக்குக் கணித முறையாயும் ஒன்றைத்தீர்மானிக்கிற பகுப்பு முறையாயும் இருக்கிறது. இது ஐம்புலன் நுகர்ச்சியிலிருந்து உண்மையை அடையும் முறைக்கு மாறுபட்டதாகும்.இதன் வரலாறு மேனாட்டில்கிரேக்க தேசதது அயோனிய ஞானிகளிடமிருந்து தொடங்குகிறது.அவர்கள் அக்காலத்து வழங்கி வந்தவையும் மக்களால் விரும்பப்பட்டவையுமான புரானக் கருத்துக்களுக்கு மாறான சிந்தனைகளை எண்ணினார்கள்.அவர்களுடைய கருத்துக்கள் எலியாட்டிக்ஸ்,பைதாகரஸ் வளர்க்கப்பட்டு,பிளேட்டோவின் தத்துவசாஸ்திரத்தில் உச்சநிலையை அடைந்தது.மத்தியகாலத்தில் பகுத்தறிவுக்கும்,சமய வைராக்கியத்திற்கும் அல்லது மதத் துணிபுக்கும் உள்ள மாறுபாடு அதி உச்சநிலையை அடைந்தது.வேத காலத்தைக் கடந்து உபநிடதத்தை ஆராய்ந்தபோதுதான் இந்தியத் தத்துவ சாஸ்திரத்தில் அறிவுமுதற் சிந்தனை மிக்க முதன்மை பெற்றது.உபநிடதத்தின் அறிவுமுதல் தன்மை பிற்காலத்தில் வேதாந்திகளால் மிகுந்த வன்மையையும் தெளிவையும் அடைந்தது,புத்தியை ஆதாரமாகக் கொண்ட ஸ்வதப் பிராமாண்யம் அல்லது அகவழி உண்மைக்கொள்கை குமாரிலபட்டர்,சங்கரர் ஆகிய இருவருடைய தத்துவத்திலும்