பக்கம்:கலைசொற்கள் பதின்மூன்றாம் பகுதி விலங்கியல்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
iii

________________

முகவுரை இவ்விலங்கியற் கலைச்சொற்றொகுதி அரசகரும மொழிய லுவலகத்துக் கல்விப் பிரிவினர் வெளியிடுங் கலைச்சொற்றொகுதிகளுள் ஒன்றாகும். இது மந்திரக் குழுவினரின் ஒப்பினைப் பெற்றது ; பொதுத் தகுதிப் பத்திரத்தேர்வுக்குரிய விலங்கியல் நூல்களிற் காணுங் கலைச்சொற்களைத் தன்னகத்துக் கொண்டது. விலங்குகள், கோத்திரங்கள், தொகுதிகளாதியவற்றின் உயிரியற் பெயர்கள் யாவும் சருவதேசப் பெயரீட்டுமுறையைத் தழுவி, தமிழிலக்கண வரம்பிற்கேற்ப உருப்பெயர்க்கப்பட்டுள. சொல்லாய்ந்த குழுவினர் பெயர்வரிசை வருமாறு :கலாநிதி செ. அமிர்தலிங்கம், B. Sc. (Hons.), Ph. D. அக்குவைனசு கோட்டம். கலாநிதி ப. மகாதேவன், B. Sc. (Hons.), Ph. D. பண்ணைவிலங்கு ஆராய்ச்சி அலுவலர், பேராதனை. திரு. செ. சிவலிங்கம், B.Sc. (Hons.), கடற்றொழில் அலுவற்பகுதி, கொழும்பு. கலாநிதி வ. பொன்னையா, B. A. (Hons.), Ph.D., கொக்குவில், யாழ்ப்பாணம். திரு. அ. வி. மயில்வாகனன் (உதவி ஆணையாளர்) குழுவின் தலைவராகவும், திரு. செ. உ. வேதநாயகம் செயலாளராகவுங் கடமையாற்றினர். 421, புல்லர் வீதி, கொழும்பு 7, ஒற்ரோபர் 15 ஆம் திகதி 1957. அரசகருமமொழியலுவலகம், (கல்விப்பிரிவு).