பக்கம்:கலைச் சொல்லகராதி ஐரோப்பிய தத்துவ சாத்திரம்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை

தமிழிலேயே கல்லூரிகளில் கற்பிப்பது ஒரு புது முயற்சி, வகுப்பில் எழும் சூழ்நிலைகளை எல்லாம் எதிர்பார்ப்பது அருமை. இங்கே நோக்கம் அடிப்படை முட்டுப்பாடுள்ள கலைச்சொற்களை எல்லோரும் ஒப்புக் கொள்ளும் வகையில் அமைப்பதேயாம் முடிவாக ஒரு கொள்கை உருவாகலாம். குழந்தை முதலடி எடுத்து வைக்கும் போது தட்டுத் தடுமாறி நின்று, பின நன்றாக நடக்கக கற்றுக் கொள்கிறது. அதுதான் இயற்கையோடியைந்த விஞ்ஞான போக்கு. இங்கே குறித்துள்ள கலைச்சொற்களின் மூலங்கள் ஆங்கிலப் பாடப் புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டன. தமிழ்ச் சொற்கள இப்போதைக்கு உதவக்கூடும் என்ற நோக்கிலேயே உருவானவை. இவை குற்றமற்றன என்று யாரும் கருதவில்லை, இவற்றைத் திருத்த முடியும் என்ற நம்பிககையிலேயே எல்லோரையும் இவற்றைப்பற்றி எண்ணுமாறும், திருத்தங்களைத் தருமாறும் கேட்டுக்கொள்ளுகிறோம். பல கல்லூரி ஆசிரியர்களும் பிறரும் இந்த முயற்சியில் ஒத்துழைத்துள்ளார்கள். எல்லாவற்றையும் கலைச் சொல்லாக்காது, இன்றியமையாதவற்றை மட்டும் குறித்துள்ளோம். மாணவர்கள் ஆங்கில நூல்களைப் புரட்டிப் பார்த்து அறிவையும் பெறவேண்டிய சூழ்நிலைக்கு உதவ வேண்டும் என்பதனையும் நம் மனத்தில் கொள்ளவேண்டும், இன்று கற்பிக்கும் ஆசிரியர்கள் தமிழில் கற்பிக்கும் முயற்சியில் எளிதாகப் பங்கு பெற வேண்டும் என்ற நோக்கமும் உண்டு. இக்கலைச் சொற்கள் கல்லூரிப் பாட நூலகளுக்கே அன்றிப் பொதுமக்கள் நூல்களுக்காக அல்ல என்பதனையும் வற்புறுத்துகிறோம். சொல்லிக கொடுக்கும்போதும் நூல்களை எழுதும் போதும் திருத்தங்கள் எழும் என்பதில் ஐயம் இல்லை. நூல் எழுதுவோர்க்கு இது காரணமாக உரிமை உண்டு. போராட்டம் இன்றி அன்பு வழியே சென்றால் இடர்ப் பாடு நீங்கும், வெற்றியே காண்போம்.


G.T.T.A.--]-A