பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

Race : மக்களினம் ; இனம்.

Radicalism : தீவிரவாதம்.

Rapprochement : இணைந்துறவாழல்.

Reprisal : பழிவாங்குதல் ; இழப்பீடு.

Representative : பிரதிநிதி ; ஆட்பேர்.

Referendum : பொதுமக்கள் தீர்ப்பெடுத்தல்; குடியொப்பம்.

Revival : உயிர்ப்பித்தல்.

Regime : ஆட்சிமுறை.

Reunion : திரும்ப ஒன்றுபடுதல் ; புனரைக்கியம் ; மறு ஐக்கியம்.

Relief and Rehabilitation : நிவாரணமும் மறுவாழ்வளிப்பும்.

Restoration, the : முடியரசின் மீட்சி; மீட்சி.

Restoration settlement : மீட்சிக்கால அமைப்பு.

Revolution settlement : புரட்சிக்கால அமைப்பு.

Reorientation : புதுநோக்கம்.

Reign of terror : பயங்கர ஆட்சி (ஆட்சிக்காலம்).

Reformatory : திருத்தகம்.

Reparation : இழப்பீடு.

Republic, one and indivisible : பகுக்கமுடியாத ஒற்றுமை வாய்ந்த குடியரசு.

Revolution at war : புரட்சியிற் போர்.

Re-Insurance treaty : காப்புறுதியைப் புதுப்பிக்கும் உடன்பாடு.

Reichstag : ரைய்க்ஸ்டாக் என்னும் கீழ் சபை (ஜெர்மன்).

Resources : சாதனங்கள் ; வள ஆதாரங்கள்.

'Reformation, the : மதச் சீர்திருத்தம் ; சமயச சீர்திருத்தம்.

'Renaissance : மறுமலர்ச்சி,

Resorgimento : புத்துயிர்ப்பு.

Resignation : பதவி துறத்தல்; கைவிடல்,

'Rival claiments : உரிமைப் போட்டியினர்.

Republicanism : குடியரசுக் கொளகை.

Rebellion : புரட்சிக்கலகம்.

Residuary Power : எஞ்சிய அதிகாரம்.

Remedial measures : பரிகார நடவடிக்கைகள்.

Responsible Government : பொறுப்பாட்சி.

Resident : நிலையர் (ரெஸிடென்ட்).

Reinforcement : படைவலுப்பெருக்கு.

Regiment : படைப்பகுதி.

Revolutionaries : புரட்சியாளர் ; புரட்சி செய்கிறவர்.