பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
25


Immobility: இடம் பெயராமை

Immobility of labour: பாட்டாளி இடம் பெயராமை

Impact of taxation: வரியின் தாக்கு

Imports: இறக்குமதிகள்

Imperial preference: ஏகாதிபத்தியச் சலுகை

Import duties: இறக்குமதி வரிகள்

Import quotas: இறக்குமதிப் (கோட்டாக்கள்) பங்கீடுகள்

Imputed value: சாட்டு மதிப்பு

Imperfect competition: நிறை குறைந்த போட்டி

Income tax: வருமான வரி

Incentive: தூண்டுகோல்

Increasing cost industry: வளர்ந்துசெல் செலவுத் தொழில்

Incremental costs: கூடுதலாகும் செலவுகள்

Inconvertibility: மாற்றலாகாமை

Income: வருமானம்

Income, money: பண வருமானம்

Income, real: மெய் வருமானம்

Income effect: வருமான விளைவு

Inconsistent: ஒவ்வாத

Income-consumption curve: வருவாய் துய்ப்புக்கோடு

Income, national: நாட்டு வருமானம்

Increasing returns: வளர்ந்து செல் விளைவு

Increasing cost: வளர்ந்து செல் செலவு

Incidence of taxation: வரி நிலைப்பாடு

Indemnity : நட்ட ஈடு

Indent : தேவைப் பட்டி

Index numbers: குறியீட்டெண்கள்

Indifference curves: சமபயன் வளைகோடுகள்

Indirect tax: மறைமுக வரி