பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 கலைஞன் தியாகம்

பட்ட அடியும் சிறிது நேரம் அவனுக்கு ஒன்றும் விளங்காதபடி செய்தன. மெல்ல எழுந்திருந்தான்்.

'ஏன் இங்கே வந்தாய்?" என்றார் செட்டியார். கிழவன் கிதான்ித்தான்். எல்லாம் ஞாபகத்துக்கு வந்தன; 'சாமி, என் பிள்ளையைப் பார்க்க வந்தேன். சத்தியமாகச் சொல்லுகிறேன். திருட வரவில்லை. என் பிள்ளையைப் பார்த்துவிட்டேன். இனிமேல் நான் சங்தோஷமாகச் சாவேன்' என்று அழுது கொண்டே அவன் சொன்னன். செட்டியாருக்கு ஒன்றும் விளங்கவில்லை.

"இவன் பைத்தியக்காரகை இருக்கலாம்' என்றார். . . . . . . -

'சாமீ, இங்த மாமரப் பைத்தியங்தான்் பிடித் , திருந்தது; இதை நான் என் கையால் வளர்த்தேன். ஒரு தடவையாவது இதைப் பார்க்கவேணுமென்று கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டேன். இவர் மனம் இரங்கவில்லை. இதைப் பார்க்காமல் எனக்குத் துரக் கமே வரவில்லை. அதல்ை இந்தமாதிரி செய்தேன். நான் செய்தது தப்புத்தான்். ஒரே ஒரு வரம் தர வேனும். அடிக்கடி இந்த மரத்தைப் பார்க்கும் படி செய்யவேணும். நான் திருடமாட்டேன். பழம் எனக்கு வேண்டாம். எங்கள் எசமானனுக்குக்கூடப் பழம் தான்ே விழுந்தால்தான்் தின்னலாமென்றல் லவோ சொல்லி இருந்தேன்? அப்படிப்பட்டவன், கான் பழத்தைப் பறித்துத் தின்பேன? என் கண், என் உயிர் இந்த மரம், சாமீ, இன்னும் ஒருதடவை. அதைக் கட்டிக்கொள்கிறேன்' என்று எழுந்து போய் அதைக் கட்டிக்கொண்டான். தன் கன்னங்